This entry is part 5 of 9 in the series 7 மே 2023

இந்த கணம்

ஆர் வத்ஸலா

இந்த கணம்

உனக்குத் தேவை

எனதன்பு

என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள்

வழங்குகிறேன் அவற்றை

நேற்று உன்னிடம் பெற்ற

அதே உதாசீனம்

நாளை நீ நிமிர்ந்த உடன்

பெறுவேன் என்று அறிந்திருந்தும்

நம்மிடையே சமுதாயம் 

ஏற்படுத்திய கட்டாய உறவு காரணமாக  அல்ல

தெருவில் போகும் ஒரு 

பரிச்சயமற்றவனுக்கும்

அதை செய்திருப்பேன்

என்பதால்

Series Navigationஅந்த கணம்கணம்