This entry is part 6 of 9 in the series 7 மே 2023

ஆர் வத்ஸலா

ஒவ்வொரு முறை

அவன் நினைவு வரும் போதும்

என்னை நானே அடித்துக் கொண்டு

நினைவூட்டிக் கொள்கிறேன்

அவனுக்கு நான் வேண்டாம்

என்பதை

“எப்படியடி

கொள்ளி வைக்க முடிந்தது அவனால் 

பல்லாண்டு அன்புக்கு

ஒரு கணத்தில்?”

என

கேட்கிறது மனம்

வயிறு எரிய

சபிக்கிறேன்

அவனை

இதயம் தூங்கும்

ஒரு கணத்தில்

பின் துணுக்குற்று

வேண்டுகிறேன் தெய்வத்தை

என் சாபம்

பலிக்காமல் போகட்டுமென

Series Navigationஇந்த கணம்நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300