This entry is part 9 of 9 in the series 4 ஜூன் 2023

கோவிந்த் பகவான்

புளித்த மாவாய்

பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள்

நொதித்துக் கிடக்கிறது காலம்.

ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு ஆழாக்காய்

பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள்

காலத்தை ஊற்றி 

காலத்தை அவிக்கிறாள் ஒரு மூதாதி.

வெந்து தணிந்த காலத்தை தன் சுருக்குப்பையில் முடிந்து

காலத்தின் மற்றுமொரு ஆழாக்கை 

அவிக்கத் தொடங்குகிறாள்

அந்தக் கிழட்டு மூதாதி.

காலம் பதுக்கி அடைக்கப்பட்ட சுருக்குப்பைகள் 

பெருமலையென குவிந்து கிடக்கிற

அந்தக் கொட்டகையின்

கதவிடுக்கில் கசிந்தபடி இருக்கிறது

இப்பிரபஞ்சத்தின் 

சபிக்கப்பட்ட காலம்.

    -கோவிந்த் பகவான்.

Series Navigationநாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000