ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்: அங்கம் -2 காட்சி -3 பாகம் -1

This entry is part 1 of 9 in the series 18 ஜூன் 2023

image.png

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்   

அங்கம் -2 காட்சி 2  பாகம் -1

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] 
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா 

++++++++++++++++++++++++  

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] 

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது] 

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] 

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது] 

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] 

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] 

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது] 

எமிலியோ : புருனோவின் மனைவி. 

மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். 

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. 

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.  

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு 

இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் ஒரு தெரு

நேரம் : பகல் வேளை 

பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோபுருனோ, ஷைலக்.  [தளபதி ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] [கூட வந்த அறிவிப்பாளன் பியூகிள் ஊதிக் கூறுகிறான்]

அறிவிப்பாளி;  சைப்பிரஸ் பொது மக்களே !  துருக்கிப் படகுகள் அனைத்தும் புயலில்  முறிந்தன.  தப்பிய சில படகுகள் திருப்பிப் பாராமல் சென்றன.  இந்த வெற்றியை நாம் ஆடிப்பாடி, மதுபானம் குடித்துக் கொண்டாடுவோம்.  அத்துடன் தளபதி ஒத்தல்லோ திருமண விழாவையும் வான வெடிகளுடன் பாராட்டப் போகிறோம்.  மதுக் கடைகள் இலவசக் குடிபானம் எல்லோருக்கும் அளிக்கும்.  கடவுள் சைப்பிரஸ் தீவு மக்களை ஆசீர்வதிக்கட்டும்.  தளபதி ஒத்தல்லோ தம்பதிகளையும் வாழ்த்துவோம்.  ஜே ஜே என்று மக்கள் ஆரவாரமும் வான வேடிக்கைகளும் வானைப் பிளக்கின்றன.

*******

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்:  அங்கம் -2 காட்சி -3 பாகம் -1

நேரம் / இடம்;  பல மணிநேரம் கடந்து ஒரு சைப்பிரஸ் மாளிகையில் ஓரிடம்.

பங்கெடுப்போர்:  ஒத்தல்லோ, மணப்பெண் மோனிகா, காஸ்ஸியோ, மற்றும் படை வீரர் சூழ வருகிறார்.

ஒத்தல்லோ:  எனது  நல்ல நண்பன் மைக்கேல் காஸ்ஸியோவை இன்று இரவு கோட்டைக் காவல் குழுவுக்குத் தலைவனாய் நியமிக்கிறேன்.  துருக்கி ஒற்றர் ஒற்று வேலை பார்ப்பார்.  அவரைக் கைப்பற்றிச் சிறையில் தள்ள வேண்டும் காஸ்ஸியோ..

காஸ்ஸியோ:  புருனோவும்  உதவிக்கு வருவான்.  ஆயினும் நான் தான் இரவு முழுதும் விழித்திருந்து கோட்டையைப் பாதுகாப்பேன். 

ஒத்தல்லோ:  புருனோ என் நம்பிக்கை மிக்க உதவிப் பணியாளன்.  நல்லிரவு காஸ்ஸியோ.  போய்வா நாளை உன்னுடன் நான் ஒரு இரகசியக் காரியம் பற்றிப் பேச வேண்டும்.  [காஸ்ஸியோ போகிறான்.]  [மோனிகாவை நோக்கி] கண்ணே !  நிறைய சொத்து வாங்கி வந்துள்ளேன்.  நாம் வாழ பெரிய மாளிகை, புது வாகனம். பண்ட பாத்திரங்கள், படுக்கை மெத்தைகள், புத்தாடைகள் உனக்கும் எனக்கும் வாங்கி வாகனத்தில் வருகின்றன.

[ஒத்தல்லோவும், மோனிகாவும் ஒய்வெடுக்கப் போகிறார்.]   

[புருனோ நுழைகிறான்]

காஸ்ஸியோ:  வருக, வருக புருனோ !  நாம் பின்னிருந்து வேடிக்கை பார்ப்போம். 

புருனோ:  லெஃப்டினட் !  இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது, பத்து மணி ஆகவில்லை.  நம் தளபதி ஒத்தல்லோ காலையில் நம்மைப் பார்ப்பதாகச் சொல்லியதை தள்ளிப் போட்டு விட்டார்.  இளம் மனைவி மோனிகாவுடன் தளபதி இன்னும் முதலிரவு உடல் உறவு மைத்துக் கொள்ள வில்லை.  இப்போது அது நிறைவேறி இருக்கும்.

மோனிகா முதலிரவு  இன்ப உறவில் மயங்கிக் கிடப்பாள்.  ஏங்கிக் கிடந்த ஒத்தல்லோவும் இன்ப இரவில் மூழ்கி இருப்பார்.  இளங் கன்னி மோனிகாவுக்கு வயது மூத்த ஒத்தல்லோ முழுச்சுகம் தர முடியாது.

காஸ்ஸியோ:  மோனிகா பேரழகி.  வாலிபன் தான் அவளுக்கு உடற் சுகம் தர முடியும்.  ஒத்தல்லோ அதிட்டசாலி. 

புருனோ:  மோனிகா கண்ணழகி.  இடுப்பழகி.  எடுப்பான மார்பழகி. தொடை அழகி.  நடை அழகி.  எழில் அரசி.  குரல் இனிமை கொண்டவள்.   அவள் பேச ஆரம்பித்தாலே, கூடுவற்குஅவள் மீது இச்சை உண்டாகுது.  அருகில் அவள் முன் நின்றால், அவளை விட்டு நீங்கவே முடிய வில்லை.  அவளது காந்த சக்தி பல வாலிபரை அவள் உள் வட்டத்தில் இழுத்து அடைத்துள்ளது.

காஸ்ஸியோ:  மோனிகா முழுமையான வாலிப அழகி. 

புருனோ:  நான் வண்டி நிறைய ஒயின் மதுபானம் கொண்டு வந்திருக்கிறேன்.  என் மதுக்குடித் தோழர் சிலரை சைப்பிரஸ் தீவிலிருந்து அழைத்து வந்திருக்கிறேன்.

காஸ்ஸியோ:  இன்று நான் குடிக்கப் போவதில்லை.  கோட்டைப் பாதுகாப்பில் ஓட்டை விழுந்தால், என் வேலை போய்விடும்.

புருனோ:  மதுக்குடித் தோழரோடு நான் ஒரு தடவை குடிப்பேன். அதுவும் மதுபானத்தில் நீர் கலந்து தான் குடிப்பேன்.

காஸ்ஸியோ:  நான் ஒரு குவளைதான் குடித்தேன் அதுவும் நீர் கலந்துதான்.  ஆயினும் என் போக்கு பாதிக்கப் படுகிறது.  மேலும் குடித்து சிந்தை இழக்கப் போவதில்லை நான்.

புருனோ:  என்ன சொல்கிறாய் நீ ?  இன்று கொண்டாட்ட தினம். கூடிக் குடித்து, கும்மாளம் அடிக்கும்  கூத்து நாள் இன்று.  கருந்  தளபதி ஒத்தல்லோவுக்கு இன்று முதலிரவு முத்தம் கிடைக்கும்.  அவளுக்கு  நீ தரும் முதல் இரவு முத்தம் எப்போது ?  அதற்கு முதலில் இங்கு ஒரு கலகம் ஏற்படுத்த வேண்டும் நீ !

[தொடரும்]

**********************  

Series Navigationஅப்பாவின் கை பற்றி…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *