ஆஷாவின் போட்டோ படங்களை உடனே அழித்து விட்டேன். முக மூடி இல்லாது முதியோர் வசிப்பு இல்லத்தில் காப்பு மகளிர் உலவுவது தெரிந்தால் வேலையிலிருந்து நீக்கப் படுவார். எனக்கு குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு, முடக்கு வாதப் பாத வலி சிகிட்சை செய்யும் எல்லா வித மகளிர்க்கும் காஜூ, லட்டு இனிப்பு தின்பண்டம் அளித்தேன். இராப் பொழுது, ஒரு கதவைத் தட்டி ஆண்குரல் கேட்ட பொற்கைப் பாண்டியன் பக்கத்து வீட்டுக் கதவுகளை எல்லாம் தட்டிய கதை போன்றதுதான். ஆஷாவுக்கு மட்டும் இனிப்பு தினம் கொடுப்பது, அவளை நேசித்துக் கொண்டது, எப்படியோ முதியோர் காப்பக மேலாள மேடம் ஹாமில்டனுக்கு தெரிந்து விட்டது.
அடுத்து நாள் ஓடி வந்த மேடம், ஒழுக்க நெறிச் சட்ட விதிகளை யாவரது முன்னிலையில் ஒப்பித்தாள். அனைவரும் விழித்தார். குசுகுசுப்பு, முணு முணுப்புகள் செவிக்கு அருகில் எழுந்தன.
“இனிப்பு தருவது தவறு , பரிசு தருவது கூடாது, மகளிரை அணைப்பது நிறுத்தப்பட வேண்டும். ஆண்-பெண் கைகுலுக்கல் மட்டுமே அனுமதிக்கப்படும்.
முதியோர் காப்பகத்தில் அணைப்பு கூடாது, இனிப்பு கூடாது, காதலிப்பு கூடாது.
கண்காணிப்பு மகளிர் யாருக்கும் முதியோர் காஜூ, லட்டு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்பக மகளிர் வாங்கக் கூடாது. மறுக்க வேண்டும். புதிய ஆணைகள் இவை.
வந்த சில நாட்களில், முதியோர் காப்பக மகளிர் சுறுசுறுப்பாக, யந்திரம் போல் பணி புரிவது கண்டு அவரைப் “பாதுகாக்கும் அணங்குகள்” என்று பாராட்டினேன்.
நோக்குமிடம் எல்லாம் நொந்த மகளிர் மௌன முகத்தில் ஒளிவீசியது. பலரது முகத்தில் புன்னகை மின்னியது. இப்போது இனிப்புத் தின்பண்டம் கொடுத்தால், யாரும், வாங்குவது கிடையாது.
ஆனால் ஒரே ஒரு நர்ஸ் மட்டும் விதியை மீறினாள். என் அறைக்கு வரும் போது, பணி முடிந்த பின், இனிப்புத் தின்பண்டம் எடுத்துக் கொள் என்று வேண்டினால், சிரித்துக் கொண்டு, ஒரு காஜூவோ, லட்டுவோ எடுத்துக் கொள்வாள்.
One thought on “முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4”
பலவருடங்களுக்குப் பிறகு இப்பதான் தற்செயலாக நினைவு வந்து திண்ணைக்குள் நுழைந்தேன். அழகும் புதுப்பொலிவுமாய் மேம்பட்டிருந்தது திண்ணை, முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4
சி. ஜெயபாரதன், கனடா 4ம் பகுதி வாசித்தேன், கட்டாயம் முதலில் இருந்து வாசிக்கவேண்டுமென தோன்றியது. படைப்புகளை எப்படி அனுப்புவது?
வாழ்த்துக்களுடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
fb Jaya Palan
Whatsapp 00919941484253 visjayapalan@gmail.com
பலவருடங்களுக்குப் பிறகு இப்பதான் தற்செயலாக நினைவு வந்து திண்ணைக்குள் நுழைந்தேன். அழகும் புதுப்பொலிவுமாய் மேம்பட்டிருந்தது திண்ணை, முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 4
சி. ஜெயபாரதன், கனடா 4ம் பகுதி வாசித்தேன், கட்டாயம் முதலில் இருந்து வாசிக்கவேண்டுமென தோன்றியது. படைப்புகளை எப்படி அனுப்புவது?
வாழ்த்துக்களுடன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
fb Jaya Palan
Whatsapp 00919941484253
visjayapalan@gmail.com