கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு
சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா
கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் இன்னும் பத்தாண்டுக்குள் 4800 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள் புதிதாக நிறுவகம் ஆகப் போகின்றன என்று அரச ஆட்சி மன்றத்தில் மாநில முதல் மந்திரி டக்லஸ் ஃபோர்டு 2023 ஜூலை 5 ஆம் தேதி அறிவித்தார். 2050 ஆண்டு நீண்ட காலத் திட்டமாக, அண்டாரியா மாநில அரசு தீர்மானித்தது. கடந்த 30 வருடங்களாக இத்தகைய பெரிய அணு மின்சாரத் திட்டங்கள் எவையும் எடுத்துக்கொள்ளப் படவில்லை. இப்பெரும் அணுமின் நிலையத் திட்டங்கள் சுமார் 4.8 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் பரிமாறும். மேலும் அணுமின்சாரக் கட்டுமான வேலைகள், சாதனங்கள் உற்பத்தி & இயக்க வேலைகள் பல்லாயிரம் பேருக்கு ஊழியம், ஊதியம் தொடர்ந்து அளிக்கும்.
கிரீன்ஹௌஸ் வாயுக்கள் வெளியேற்றாத, பேரளவு மின்சக்தி, உற்பத்தி அணுக்கரு விலிருந்து கிடைக்கிறது. உலக யுரேனிய உலோக இருப்பு தற்போது ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆஃபிரிக்கா, ரஷ்யா, யுக்ரேயின், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. கனடாவில் சஸ்காட்சுவன் மாநிலத்தில் பேரளவு யுரேனியச் சுரங்கம் உள்ளது.
கனடாவின் அண்டாரியோ மாநிலத்தில் பேரளவு சுவைநீர் உள்ள ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றான ஹூரன் ஏரிக்கரையில் புரூஸ் பவர் நிறுவனம் இயக்கி வரும் புரூஸ் A & B 6000 மெகாவாட் நிலையங்கள் அருகில் புருஸ் C 4800 மெகாவாட் ஆற்றல் மிக்க புது நிலையம் கட்டப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது அண்டாரியோ மாநிலத்தில் 30% மின்சாரப் பரிமாற்றம் அணுமின்சக்தியால் நிகழ்ந்து வருகிறது. கரித்தூள் உற்பத்தியாகாத தூய எரிசக்தி மின்சார உற்பத்தி யுரேனியம் பயன்படும் அணுமின் நிலையங்கள் எதிர்கால 2030-2040 ஆண்டு தொழிற்துறை வளர்ச்சிக்குக் கட்டப்படும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.
கனடாவில் சிறிய கட்டமைப்பு அணுமின்சக்தி நிலையங்கள்
அகில தேச அணுசக்தி ஆணையகத்தின் [IAEA, INTERNATIONAL ATOMIC ENERGY AGENCY, VIENNA ] மேற்பார்வையில் காண்டு டிசைனில் [Natural Uranium, Heavy Water Reactors] சிறிய பயன்பாட்டுக்கு 10 மெகாவாட் முதல் 300 மெகாவாட் திறமுள்ளவை [மொத்தம் 700 மெகாவாட்] அமைக்கப் படப் போகின்றன. உலகளாவிய முறையில் சுமார் 100 [SMR SMALL MODULAR REACTORS] IAEA ஆணையகத்தின் கீழ் கட்டப் படும்.
World Nuclear Association (2021)
Rank | Country/Region | Uranium production (2021) (tonnes U)[1] | Percentage of World Production (2021) |
20 | Malawi | 0 | < 0.01% |
19 | Germany | 0 | < 0.01% |
18 | France | 0 | < 0.01% |
17 | Romania | 0 | < 0.01% |
16 | Czech Republic | 0 | < 0.01% |
15 | United States | 8 | 0.02% |
14 | Brazil | 29 | 0.06% |
13 | Pakistan | 45 (est.) | 0.09% |
12 | Iran | 71 (est.) | 0.15% |
11 | South Africa | 385 (est.) | 0.80% |
10 | Ukraine | 455 | 0.94% |
9 | India | 615 (est.) | 1.27% |
8 | China | 1,885 (est.) | 3.90% |
7 | Niger | 2,248 | 4.65% |
6 | Russia | 2,635 | 5.45% |
5 | Uzbekistan | 3,500 (est.) | 7.24% |
4 | Australia | 4,192 | 8.67% |
3 | Canada | 4,693 | 9.1% |
2 | Namibia | 5,753 | 11.90% |
1 | Kazakhstan | 21,819 | 45.14% |
World | 48,332 | 100.00% |
- முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 5
- கனடாவில் புதிதாக $4800 மெகா வாட் ஆற்றல் உடைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைப்பு
- ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
- நாவல் தினை அத்தியாயம் இருபத்தைந்து
- பூர்வ உத்தராங்கம்
- ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்