This entry is part 4 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா

நீ இல்லாமல்

நான் படும் பாட்டை

கவிதையாக வடித்து

என்னை வதைக்கும் 

தாபத்தை தீர்க்க முயன்றேன்

தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை 

மேலதிகமாக 

அந்த ‘நீ’ 

யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து  அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும்

அதை பற்றி வம்பு பேசி மகிழும் சிலரும்

பொறுக்காமல்

என்னிடம் ரகசியமாக

கேட்டே விடும் சிலருமாக

எனது நட்புலகம் சிறுத்துக் கொண்டிருக்கிறது 

தினம் தினம்

Series Navigationமுதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்