வளவ. துரையன்
எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
உண்மையை நேசிப்பவன்.
மண்ணால் சுவர் வைத்து
புறஞ்சுவருக்கு அழகாக
வண்ணம் தீட்ட எண்ணமில்லை.
வார்த்தை அம்புகளைத்
தடுக்க உன்னிடம்
வலுவான மனக் கேடயம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பொய் மழை பெய்கையில்
முழுதும் நனைந்தாலும்
புறந்தள்ளிப் போகிறாய்.
எதிரி நாகங்களை
எதிர்கொள்ளக் கைவசம்
ஆடும் மகுடி உண்டு.
ஆனால்
துளைத்திடும் முள்கள் கொண்ட
தோள்களால் தழுவுகையில்
என்ன செய்வது?