This entry is part 4 of 5 in the series 26 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா

மல்லாந்து படுத்து

கருநீல வானின்

வைரங்களை

விடிய விடிய

எண்ண ஆசைப்படும் வரை

ஒவ்வொரு பூனையின்

ஒவ்வொரு முகபாவமும்

வெவ்வேறாகத்‌ தோன்றும்  வரை

முன்பின் தெரியாத

கைக்குழந்தை

என்னை பார்த்து

களுக்கென சிரிக்கும் வரை

மரத்தில் இருந்து

உதிர்ந்த மலரின் 

அழகை காணத் தெரிந்த வரை 

ஜன்னல் வழியே

பறவைகளையும்

பறக்கும் விமானத்தையும்

கண்டு

அதிசயக்கும் வரை

இருக்கிறது

தகுதி

எனக்கு

வாழ

Series Navigationதகுதி 1ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 5