This entry is part 4 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா

தீர்மானங்கள்  தாண்டாது

ஒரு நாள் கூட

எனத் தெரிந்தும்

செய்த நாட்கள்

போய் விட்டன

துரோகங்களுக்காக கொதித்த நாட்கள்

போய் விட்டன

நம்பிய கட்சியும்

தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று  ‘மைக்’கில் குரலோங்கிய

நாட்கள்

போய் விட்டன

அனுபவங்கள் கனக்கின்றன

அவற்றை

தூக்கி போட்டு

மிதித்து

மீண்டும் போராடும்

மன இளமை

தா

தாயே பராசக்தி!

Series Navigationஒருவருள்  இருவர்