தமிழில் : வசந்ததீபன்
________________________________
(1)
நீ
இந்திரன்
கெளதம்
ராம்
எந்த உருவத்தில் இருந்தாலும்
எப்போது புரிந்து இருக்கிறாய் என்னை
கெட்ட பார்வை
சாபம்
இரட்சிப்பு
இதுவாக இருந்து கொண்டு
என் நியதி
தவறாக தங்கிப் போனேன்
நான் தான்
ஒவ்வொரு முறை
நீ கடவுள்களின் ராஜா
தர்ம பாதுகாவலர்
மீட்பர்
மஹான்களுக்கு ஆனாய்
மற்றும் நான்
ஒவ்வொரு முறை
அப்பாவி அகல்யா.
ஹிந்தியில் : ரஞ்சனா ஜெய்ஸ்வால்
தமிழில் : வசந்ததீபன்
(2)
நான் அந்த மரணத்தைப் பற்றி
அடிக்கடி யோசிக்கிறேன்
அது
கணம் _ கணம் தேய்ந்து
போய்க் கொண்டிருக்கிறது _
நம்முள், உன்னுள், எல்லாருள்.
ஹிந்தியில் : தர்மவீர் பாரதி
தமிழில் : வசந்ததீபன்
(3)
“நான் யார்?
கருப்பா ? இல்லை வெள்ளையா ?
அடிமை ? இல்லை ராணி ?…
பிறந்த நேரத்தில்
என் முகத்தில்
ஒரு வரைபடம் கூட இல்லை,
நான்
என் சொந்த மண்ணை
சுயமாக பிசைந்தேன்
என் முகத்தை
நானே உருவாக்கினேன்,
என் முகம் மிகவும் அழகாக இல்லை …
ஆனால் வரைபடங்கள் முழுமையானவை “…
ஹிந்தியில் : அமிர்தா ப்ரீதம்
தமிழில் : வசந்ததீபன்
(4)
குளத்தில் மூழ்கிய
அவன் நினைத்தான்
அவனுடன் அவனது துயரமும் மூழ்கிவிடுமென்று
அது தவறாக இருந்தது
அவன் மூழ்கியவுடன்
இங்கு வந்தது அவனது துக்கம் மேற்பரப்பின் மேல்
அந்த நீர்த்தேக்கம்
உண்மையில் ஒரு துன்பத்தேக்கம்
என்று அழைக்கப்பட முடிகிறது
அங்கே லேசான மற்றும் கனமான
பெரிய, சிறிய மற்றும் துக்கங்கள் மிதந்திருந்தன
எவர் பார்த்து இருந்தவர்கள்
தம்மை விட பெரிய
அந்தத் துயரங்களை
பார்த்து இருந்தார்கள்
மற்றும்
திரும்பிப் போய் இருந்தார்கள்
எவர் பார்க்க முடியாமல் இருந்தவர்கள்
அவர்கள்
தம்மையும் துக்கமதற்கு
ஒப்படைத்துப் போய் இருந்தனர்
சொல்வதற்கு அவசியம் இல்லை
அது மிகவும் நேர்மையானது என்று.
ஹிந்தியில் : அசுதோஷ் துபே
தமிழில் : வசந்ததீபன்
.
(5) குழந்தை
______________
குழந்தை தனக்கு தானே குறைந்தபட்சம் என்ன வேண்ட முடிகிறது?
ஒரு நிலா
ஒரு சிங்கம்
ஏதோ உபகதையில் தனது பங்களிப்பு
அல்லது உங்களுடைய காலணி.
நீங்கள் அக்குழந்தைக்கு அதிகபட்சம் என்ன கொடுக்க முடிகின்றது?
நீங்கள் அக்குழந்தைக்கு கொடுக்க முடிகின்றது ஒரு பொருள் மட்டும் _
உங்களுடைய காலணி :
பாக்கி மூன்று பொருள்கள்
நீங்கள் புத்தகத்தை ஒப்படைத்தீர்கள் என்று
பின்னர் அந்தக் குழந்தை
வாழ்வு முழுக்க
நினைத்துக் கொண்டிருக்கிறது
தனது கால் எதில் வைப்பது…
அந்த புத்தகத்தில்
அல்லது
உங்களுடைய காலணியில் என்று.
ஹிந்தியில் : அவதார் குமார்
தமிழில் : வசந்ததீபன்
.
(6)
இந்த நாட்டில்
எப்போதும் சிலர்
ஒரு மனிதனை சுற்றி வளைத்து
சாதாரணமாக
கொன்று கொண்டு இருக்கிறார்கள்
அவனை அசிங்கமாக வைவதையோ…
பாக்கியசாலி
தூரமாக நின்று பார்க்கிறாய்
நீ புரிந்து கொள்ளவில்லை…
இது எல்லாம்
அந்த ரத்தம் தோய்ந்த
தனிமையான மனிதனை மட்டும்
கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
இந்தியில்: விஷ்ணு கரே
தமிழில் : வசந்ததீபன்
.
- ஹிந்தி குறுங்கவிதைகள்
- தமராகித் தற்றுறந்தார் வாழி!
- உற்றவன்
- விதண்டா வாதம்