வேட்டைக்காரனும் இரையும்

author
0 minutes, 2 seconds Read

 

ஹிந்தியில் : ரஞ்சனா ஜாய்ஸ்வால்

தமிழில் : வசந்ததீபன்

_________________________________________

முன்னோர்கள் வேட்டைக்காரர்களாக இருந்தார்கள்

வேட்டையாடுவதை விட்டு விடவில்லை.

பார்க்கத்தான் வேட்டைக்காரன்…

வன்முறை ஒளியுடன்

நிரம்பி விழிக்கின்றன அவனது கண்கள்

அதை ஏதோ ” நேர்மையான” ஒளியென

சொல்கிறான் அவன்.

எவ்வளவோ ஆகிப் போய் இருக்கிறது நாகரீகம்

கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டு இருக்கிறது

வேட்டையாடுவதற்காக 

புதிய _ புதிய முறைகள்

இன்று அப்பாவித்தனம் இவ்வளவு  இல்லை என்பது

அப்படி ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுவது என்பது

தனித்த பார்வையாகவும்

இரை எச்சரிக்கையாகவும் இருக்கிறது

எந்த வயதிலும் இருக்கிற வேட்டைக்காரன்

விட்டு விடுவதில்லை வேட்டையாடுவதை

இருக்கிற முதுமையோ

முதுமையான சிங்கத்தைப்போல

காண்பிக்கிறது தங்கத்தின் வளையல்

கொக்கு போன்ற பக்தனாக மாறுகிறான்

இருக்கிற இளைஞன்

விட்டு விடுகிறான் அப்படிப்பட்ட கஸ்தூரி வாசனையை

இரை நடந்து வருகிறது

இழுக்கப்பட்டு தானாகத்தான்…

எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறதானாலும் இரை

வெளியேறத்தான் செய்கிறது அடைப்புகளின் வெளியேயும் உணவின் தேடலிலும்

புறப்படுகிற அவைகளைத் தான்

குறிவைத்து தூக்குகிறார்கள் வேட்டைக்காரர்கள்…

சில சமயம் இரையும்

செய்கிறது திருப்பி தாக்குதல்

நாட்டுப்புற கதைகளில் வரும் வெள்ளாட்டுக் குட்டியைப் போல

ஓநாயுடன் தானும் கொல்லப்படுகிறது

நூற்றாண்டுகளாக இரையினைப்

பார்த்து _ சகித்து

ஆகிப் போகிறான் இரையாக பிச்சைக்காரன்_ பிச்சைக்காரன் வேட்டைக்காரனும்.

ஆனால் பலகீனமான இரையைத்தான் கொல்லுகிறான்

மிகச்சிறியதற்கு சிறியது

சிறியதிற்கு நடுத்தர அளவில்

நடுத்தர அளவிலானதற்கு பெரியது

பெரியதற்கு அதைவிடவும் பெரியதை கொல்கிறான்

இந்த வரிசை அதிகரித்து விட்டுத்தான் செல்கிறது

மற்றும் மீன் நீதியென அழைக்கப்படுகிறது

யோசிக்கிறேன் எப்போது ஒவ்வொரு வேட்டைக்காரன்

யாருக்கும் அல்லது எவனுக்கும்

இரையின் வலி பற்றி ஏன் புரியவில்லை

என்பது இருவருக்கு நடுவே

நிற்க 

பெரிய ‘ ஈ ‘ யின் வேறுபாடு இருக்கிறது

இறுதியில் அந்த ‘ ஈ ‘ யிலிருந்து கடவுள் ஏன் படைக்கப்படுகிறார் ?

🦀

ஹிந்தியில் : ரஞ்சனா ஜாய்ஸ்வால்

தமிழில் : வசந்ததீபன்

🦀

மீன் நீதி

___________

பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்பது போல் சிறியவை பெரியவைகளால் அல்லது பலவீனமானவை வலிமையானவைகளால் உண்ணப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன என்பது நம்பிக்கை.

🦀

ரஞ்சனா ஜாய்ஸ்வால்

___________________________

பிறப்பு : 

__________ 03 , ஆகஸ்டு 1968

பிறந்த இடம் :

________________. பட்ரெளனா , கோரக்பூர் மாவட்டம் , உத்திரபிரதேசம்.

சில முக்கிய நூல்கள் : 

________________________. 1. மீன்கள் காண்கின்றன கனவுகள் ( 2002 )

2. துக்கக் காற்றாடி ( 2007 )

3. எப்போது நான் பெண்ணாக இருக்கிறேன் ( 2009 )

4. வாழ்வின் காகிதத்தின் மீது ( 2009 ) இவை எல்லாம் கவிதைத் தொகுப்புகள்.

5. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *