மௌனம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 2 in the series 19 மே 2024

ஆர் வத்ஸலா

முன்பும் இருந்துள்ளன

திட்டமிடப்படா

மௌனங்கள்

நம்மிடையே

– எவ்வளவோ‌ முறை‌ –

நமது நெஞ்சங்களை அண்டாமல்

நீ கேட்காத

ஒரு கேள்வியும்

நான் கூறாத

ஒரு பதிலும்

இப்போதைய மௌனங்களை விஷமாக்கி

நிற்கின்றன

நமது நெஞ்சங்களின் மேலேறி

மிதித்துக் கொண்டு

Series Navigationதனித்திரு !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *