குடும்பம்

குடும்பம்
Deadvlei valley, dried lake in desert of Namibia. Sossusvlei dead vlei. Black acacia trees. Sand dunes, national park. Mystic witch place. Sunny summer day. Travel Africa.
This entry is part 5 of 5 in the series 21 ஜூலை 2024

தோப்பின் நடுவே ஒரு

செல்ல மரம்

அணில்கள் குருவிகள்

பூச்சிகள் வாழ்த்தின

கும்மியடித்தன

குறுஞ்செடிகள்

ஆரத்தி சுற்றின

மற்ற மரங்கள்

செல்ல மரத்தின்

பூக்கள் சிரித்ததில்

சுரந்த தேனை

வண்டுகள் மேய்ந்தன

வழிந்த தேனை

எறும்புகள் செரித்தன-அதன்

பிள்ளை பேரர்கள்

காடுகள் வளர்த்ததில்

மழைகள் வாழ்த்தின

ஒரு பொட்டல் வெளியில்

தனிமரம் ஒன்று

ஒத்தையாய் நின்று

ஒத்தையாய்  செத்தது

அமீதாம்மாள்

Series Navigationயுகள கீதம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *