மன்னிப்பு

மன்னிப்பு

பென்னேசன்            இதுவரை ஐந்து முறை   வாட்ஸாப் அழைப்பை நிகராகரித்து விட்டான் ருக்மாங்கதன். இப்போது ஆறாவது முறையாக மீண்டும் அழைப்பு. ஒலிப்பானை அமைதிப்படுத்தியிருந்தாலும் தொலைபேசித் திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அமைதியானது. நிச்சயம் மெசேஜ் அனுப்பியிருப்பான் மாங்கேலால்.  இடது பக்கத்து இருக்கைக்காரன்…
கோமா

கோமா

ஜீயெஸ் வானத்தின் இருளை இரண்டாகக் கிழித்துக் கொண்டு,  பல கிகாவாட் சக்தியோடு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை  தாக்கியது அந்த மின்னல். தொடர்ந்து, காதை பிளக்கும் ஓசையுடன் பாறாங்கற்களை உருட்டி விட்டாற்போல இடியும் இறங்கியது. அந்த உக்கிரசக்தியை தாங்க முடியாமல் அந்த ஹாஸ்பிடலில்…
ஜே கே சார் – கௌதமன் – வாசக அனுபவம்

ஜே கே சார் – கௌதமன் – வாசக அனுபவம்

பி.கே. சிவகுமார் கௌதம் சாரின் ஜே கே சார் புத்தகத்தை இரண்டு வாரங்களில் நிதானமாகப் படித்து முடித்தேன். ஏறக்குறைய முதல் 125 பக்கங்கள் வரை நிதானமாகப் போய்ப் பின்னர் ஒரே மூச்சில் ஒரு நாளில் படித்து முடிக்கும்படி இருந்தது. ஒரு புத்தகத்தைப்…

வலி வாங்குதல்

வளவ. துரையன் நேற்று அவள் பேசியஒரு வார்த்தைதான்பிடரி பிடித்து என்னைஉந்தித்ள்ளுகிறது.அழைக்காதவள் அழைப்பதுஇந்த முடவனுக்குக்கொம்புத்தேன்.என்னை உற்று உற்றுப்பார்ப்பவர்க்கு என் அவசரம்நிச்சயம் புரியாது.ஏனென்று யாரும்கேட்கவும் முடியாது.காலச்சக்கரம் மிகமெதுவாகச் சுழல்வதுபோலக்கனத்த என் மனத்துக்குத்தோன்றுவது உண்மையா?அவளிடம்போய்சேர்ந்துஅன்புமொழி பேசிப்பிரியும்போதுவலி வாங்கவேண்டுமேஅதற்காகத்தான்போய்க்கொண்டிருக்கிறேன்

நீதி வழுவா நெறி முறையில்.

ரவி அல்லது பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்விழுங்கியஉணவு கவலத்திற்குஅம்மாவின் கேவல்தெரியாது. சிருங்காரித்துசேர்ந்தமர்ந்துசெல்லும்வாகனத்தின்டமா டமாவின்கரும்புகையோடானமல்லிகை வாசனைவியக்க வைப்பவர்களுக்குஅம்மாவின்விசும்பல்தெரியாது. பிறிதொரு சமயம்மூன்றாம் வகுப்பில்சாயலொத்த ஒருவன்இருக்கிறானென்றவியப்பில்சொன்னதற்குஅம்மாஅழுததுஅப்பொழுதுஅதன் காரணம்எனக்குத் தெரியாது. ஆள் காட்டி விரலுக்குஅசைந்தாடும்கூட்டத்திற்குஅறக்கூற்றானஅப்பாநீதியாகஎனக்குள்நின்றிருந்ததைபொட்டழிக்காமல்புறப்பட்ட அம்மாபொசுக்கிவிட்டுபோனது அவருக்கே தெரியாது. நடு நிசிகனவெனநான்நினைத்தஒரு கேவல்…ஒரு அறை…ஒரு கெஞ்சலின்…பொருட்டாகசிறாரில் தொடங்கிவிடுதி மாறிவிடுதியாகவேலையெனவெகு…