This entry is part 1 of 8 in the series 20 அக்டோபர் 2024

சசிகலா விஸ்வநாதன்

அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும்

அவனை அடைந்து

அவலம் நீத்தார்.

அவர்  தகுதி நோக்கான்;

அன்பினால் தன்  தகுதி ஒன்றே தேறுவான்

படகோட்டும் குகனும்,

சுக்ரீவ ராசனும்,  

அசுர  விபீடணும்,

ஒன்றே;அந்தப் 

பரமார்த்த  பரபிரும்மத்திற்கு.

சிரக்கம்பம் வைத்து

இறைஞ்சிய பாஞ்சாலியும், 

ஒன்றுமே கேளாத

வறியவன் குசேலனும்

கண்ணன் கண்ணுக்கு  ஒன்றே நிகர்.

பக்த அம்பரீசனும்,

பிரஹலாத சிறுவனும்,

உத்தவனும்,  விதுரனும், 

வீட்டுமனும்,அவன் கழலே  நிழல் என்ற கொண்டு 

வென்றார் பரமபதம்.

Series Navigationவிலாசமில்லா கடிதங்கள்,விலகி போன மேகங்கள்.