நதியில் கனவுகளை படகாக்கி

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 8 in the series 20 அக்டோபர் 2024

வசந்ததீபன்

வானத்தில் மிதக்கிறது

குளத்தில் மிதக்கிறது

என் கனவிலும் மிதக்கிறது நிலா

மயிர் நீப்பின்

உயிர் வாழா கவரிமான்

இலக்கியம் புனைவானது

கண்காணிப்பு காமிரா

வருபவர்களை கண்டுபிடிக்கணும்

அவள் மீது அவன் கண்காணிக்கிறான்

காகிதத்தில் எழுதி மகிழ்கிறான்

500 கோடி

ஆயிரம் கோடி

அடித்து வெளியே எறிந்தபடியே இருந்தேன்

அந்த கரப்பான்பூச்சி வந்தபடி இருந்தது 

தனியனான என்னோடு இருக்கட்டுமென விட்டுவிட்டேன்

இருளைக் குடித்தது

ஒளியாய் உருவெடுத்தது

தீபத்தின் சுடர்

தெருவோரத்தில் உட்காருகிறான்

இந்த நாட்டுக் குடிமகன்

வீடற்ற அவன்

என் இருப்பு எரிச்சலூட்டுகிறதா? சீவித்தள்ளுங்கள்

என் கவிதைகள் உறுத்துகிறதா? நறுக்கிவீசுங்கள்

என் கனவுகள் குடைகிறதா? வெட்டித்தள்ளுங்கள்

நதியில் கனவுகளை படகாக்கி

என் உயிர் பூக்களை நிரப்பி

நீண்ட தூரப்பயணத்திற்கு

நிதமும் அனுப்புகிறாள் அந்தக் கள்ளி.

Series Navigationபுனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம் வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு
author

Similar Posts

Comments

  1. Avatar
    R.jayanandan says:

    கனவுகளை படகாக்கி, உயிர் பூக்களை நீண்ட பயணத்தில் அனுப்பகிற கவிஞன்
    வாழ்வின் நிச்சயங்களற்ற தருணத்தில் தவிக்கும் தவிப்பே தெரிகின்றது.

    சிறப்பான பார்வை.
    பயணங்கள் தொடரருட்டும்.

    ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *