நகுலன்
வீதிகளை மறந்து
வீட்டையும் மறந்த கலைஞன்.
விலாசம் தெரியா காட்டில்
அலையும் தத்துவக்கவி.
கவி,
தொலை தூரத்து
பறவைகளின் பாடல் கேட்பதாக
சொல்லும் வயோதிகன்.
பூதக்கண்ணாடிகளை
இலக்கிய பூச்சோலையில்
விட்ட கவிஞன்.
ராமசந்திரன்
வந்து விட்டான என
கேட்டுக்கொண்டே இருக்கின்றார்.
பூனைகளிடம் தான்
கேட்க வேண்டும்
நகுலன் வீடு எங்கே,
அவைகள்தான்
நகுலன் கவுச்சி வாசனை
பிடிக்க இழுத்துச்செல்லும்.
ஜெயானந்தன்