This entry is part 3 of 5 in the series 8 டிசம்பர் 2024

                   வெயிலில் நடந்து 

வாடும்போதுதான் 

நினைவுக்கு வருகிறது

தோட்டத்துச் செடிக்கு 

நீர் ஊற்றாதது

நடும்போதே நான் 

சொன்னேன்ல

தெனமும் வந்து

தண்ணி ஊத்தணும்னு 

அம்மா கத்துவார்

ஆனால்

நம்பிக்கை இருக்கிறது

திட்டித் திட்டி எனக்குச் 

சோறு போடுவதுபோல 

அம்மா அதற்குத்

தண்ணீர் ஊற்றி இருப்பார்

நான் என்னை 

நம்பியா வைத்தேன் 

அம்மாவை நம்பித்தானே 

அம்மா இல்லையா?

Series Navigationதிருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24பார்வை