This entry is part 8 of 10 in the series 22 டிசம்பர் 2024

ரவி அல்லது

தேவகுமார பாடுகளின்
திருப்பலியில்
சிதறியோடிய
மந்தையை
சேகரம்
பண்ண
ஜீவிக்கும்
பொருட்டு.
உயிர்தெழும்
உன்னத சுவிசேஷத்தில்.

ஹிருதய சுத்தியற்ற
விசுவாச
கீதங்கள்
இசைத்த வண்ணமிருக்கிறது
பரலோக சாம்ராஜ்யத்தை
பற்ற முடியாத
பரிசேய பாங்கில்.

நித்திய ஜீவியத்தில்
நானே வழியென
தட்டும்

கதவுகள்
போஜனம்
பண்ணாத
புதிராக
திறக்கப்படாமல் இருக்கிறது
எப்பொழுதும்
பெலனாகாத ஜெபித்தலில்

மட்டும்

ப்ரியம் பண்ணி. 


-ரவி அல்லது.
ravialladhu@gmail.com

Series Navigationமுகராத வாசனையின் நோதல்அதுவல்ல நீ