ஜெயானந்தன்
உடைந்து போன
ஞாபக கண்ணாடிகளில்
நழுவி சென்றது
சித்திரை நிலா.
போன நித்திரையில்
ராமகிருஷ்ணன்
வீடகன்று போனான்.
போனவன்
வெளிச்சத்தையும்
கொண்டு போய் விட்டான்.
வீடு
இருளாகத்தான்
காய்ந்து கிடக்கின்றது.
இன்று வந்த
நிலாவும்
அவனைத்தான் தேடியது
கூடவே அவனது கவிதைகளும்.
பெட்டி நிறைய
தழும்புகிறது
அவனது
இலக்கிய தாம்பத்யம்
எதிர் வீட்டு
சன்னலிலிருந்து
எட்டி பார்க்கும்
பத்மனி
குட்டிக்கூட
என்னை பார்க்க வருவதுபோல்
அவனை
ஓரக்கண்ணால்
பார்த்து சென்றது
என் கடந்த போன
யவனத்திற்கு தெரியும்.
தூரத்து
கோயில்
மணியோசையில்
அவனது
ராக ஆலோபனையும்
வரைந்து சென்ற
சித்திரங்கள் ஏராளம்.
பாத சுவடுகளில்
விட்டு சென்ற
அன்பின் முத்தங்களை
அம்மாவின்
முந்தானை வாசத்தில்
முடிந்து வைத்தவன்
ராமகிருஷ்ணன்.
பத்து மணி
ரயில்
என்
வீட்டை கடக்கும் போது
இன்றாவது வருவானா
என
ஏக்கம் தான்
மிஞ்சி
தண்டவாளத்தில்
தாண்டவமாடும்.
கொடியில் காயும்
எனது
வெள்ளைப்புடவையில்
பட்டு நழுவும்
நிலா விடம்தான்
சொல்லி
அனுப்ப வேண்டும்
நாளைய
என்
வாழ்வின்
ஆரம்ப நொடிகளின்
இதய ரகசியத்தை.
– ஜெயானந்தன்