This entry is part 1 of 7 in the series 26 ஜனவரி 2025

ரவி அல்லது

தேக்க முடியாதென

தெரிந்து

பார்த்துக் கொண்டிருக்கின்றேன்

எப்பொழுதும். 

மொண்டு குடித்த

நீங்கள்

அவரவர்

விரும்பிய 

பானத்தையொத்திருப்பதாக

சொல்கிறீர்கள்

எப்பொழுதும். 

பூரிப்பில் லயித்து

அப்படியே

அதுவாகவே

இருக்கின்றேன்

துலக்கிய

அன்பின்

பிரவாகமாகமெடுத்தோட

யாவையும்

நேசித்து

எப்பொழுதும். 

***

-ரவி அல்லது. 

ravialladhu@gmail.com

Series Navigationநூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)