This entry is part 10 of 12 in the series 16 பிப்ரவரி 2025

ரவி அல்லது

பாயோடு

பாயாக படுத்துக்கிடப்பனுக்கு

பணிவிடைகள்

செய்யும் பாட்டி

ஒரு பொழுதும்

சொன்னதே இல்லை 

நான் உன்னைக்காதலிக்கிறேனென

எப்பொழுதும்.

தோல் போர்த்தி

துவண்டு

கிடக்கும்

கிழவனும்

மனதாரக் காதலிக்கிறேனென

மருகவில்லை

வாழ்வில்

ஒருபொழுதும்.

வார்த்தைகளில்

வீழாத

அவர்களின்

வயோதிகத்திலும்

நிரம்பி

வழிகிறது

காதல்

அருந்தி மகிழுமாறு

அடுத்த தலைமுறைக்கு 

நேச நெகிழ்வில்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationஅமெரிக்கா – என் பருந்துப் பார்வை !தள்ளி வைத்த தயக்கம்