ரவி அல்லது
மிடறுகளின்
சுவையில்
மிதந்து கிடக்கிறது
வெளி.
வெற்றுக் கோப்பையின்
இறுதிப் பருகலில்தான்
உயிர்த்திருக்கிறது
தருணம்
அழைத்துவிட்ட
ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து.
யாவற்றுக்குமான
இந்த
அனுசரணையில்
இச்சொற்களுக்கு
மட்டும்
தேவையாக இருக்கிறது
கதகதப்பூட்டும்
மௌனம்
இத்தனிமையின்
ஓய்வைப்போல.
***
-ரவி அல்லது.