(ஈசூன் சென்ட்ரல்
வீட்டுத்தொகுதி 323ல்
அண்டைவீட்டுச்
சண்டையில் ஒருவர் கொலை)
உளிமுனையில்
உயிர்சேர்த்து
சித்தமே சுத்தியலாய்
தட்டித்தட்டிச் செய்த
சிற்பத்தை
உடைத்த மகளை
தண்டிப்பானா தந்தை
மன்னிப்பு இல்லையென்றால்
குடும்ப உறவுகள் என்றோ
முடிந்துபோயிருக்கும்
தேனீக்களே
தேன்கூட்டை ச்
சிதைக்கத் துணிந்திருக்கும்
மன்னிக்கத்
தெரியா மனிதனை
செல்லநாயும்
கடித்துக் குதறும்
மன்னிக்கத்
தெரியாதவன்
மனிதனல்ல
காகங்களுக்குள்
சண்டையென்றால்
காக்கை இனமே
காணாமல் போயிருக்கும் .
அமீதாம்மாள்