அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
லட்கே பிரமணோன்கே சேண்டல் பரி ஜெபீனேன்
எனது இதயத்தைக் கொள்ளைகொண்டு போன அந்த பிரமணப் பையன்…
அவன் அழகிய நெற்றியதில் அதிமணம் வீசும் சந்தனம்…
– கஜல் கவிஞன் மிர் தாகி மிர்
குமாரி குல்பாரி, தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்
அவன் என்னைத்தான் இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆனால், என்னோடு எதுவும் பேசாமலேயே, அடுத்த பாடலுக்குள் போய் விட்டான்.
அவனது இசைக்குப் பின்னால் இருக்கும் பாடல் என்னவென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், அவன் அவனது ரூபாப்பில் இசைத்த இசை மட்டும் எனது காதுகளுக்கு மிகவும் இனிமையாய் இருந்தது.
இவனை நான், அவன் இங்கே வந்ததில் இருந்தே கவனித்துக்கொண்டே இருக்கிறேன். நன்கு இசைக்கிறான். ஆனால், இங்கே என்ன பாடலுக்கு இசை இசைக்கிறானோ, அதையேதான், முதலாளி இங்கே வரும்போதும், அவர் முன்னாலும் இசைக்கிறான்.
‘இவனோ ஒரு பச்சா பாசி. அப்படியென்றால், அவன் இசைக்கும் அந்த இசைக்குப் பின்னால் இருப்பது, ஒரு ஆம்பளை-ஆம்பளை காதல் பாடலோ?’ எனக்கு இப்போது ஒரு நக்கல் சிரிப்பு வந்தது. கூடவே கொஞ்ச நேரத்தில் எரிச்சலும் வந்தது.
‘நான் இவனுக்காய் மெனக்கெட்டு மண்டு கொழுக்கட்டை செய்து கொண்டு இருக்கிறேன்… ஆனால், இவனோ… என்னை உதாசீனப்படுத்திவிட்டு, ரூபாப் இசைப்பதிலேயே குறியாய் இருக்கிறான். ச்சே.. என்ன மனுஷன் இவன்’.. நான் ஆத்திரத்தில், சப்பாத்திக்கட்டையில், பெரிதாய் சத்தம் வரும் அளவிற்கு, அரிசிச் சப்பாத்தி தேய்த்தேன்.
தடக் தடக் என்று வரும் எனது சப்பாத்திக் கட்டை சத்தம் கேட்டு, அவன் இசைப்பதை நிறுத்திவிட்டான். என்னையே பார்த்தான்.
“இந்தச் சப்பாத்திக் கட்டையை, நீ ஏன் இந்த உருட்டு உருட்டுகிறாய்” அவன் கேட்ட அந்தக் கேள்வியில், எனக்குக் கோபம் வந்தது.
“கட்டை உருட்டாமல் அப்புறம்? நான் கட்டை உருட்டி, சமையல் செய்து, உன் தட்டில் வைத்தால்தானே, நீ உன் வயிறு வீங்கக் கொட்டிக்க முடியும்?”
அவன் இப்போது கோபப்படுவான் என்று நினைத்தேன். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மாறாய், ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தான். கூடவே, அவனது ரூபாப்பை, கீழே இறக்கி வைத்துவிட்டு, எனக்கு மிக மிக அருகில் உட்கார்ந்து கொண்டான்.
காலையிலேயே குளித்துவிட்டான் போலும். சோப் வாசனை எனக்குக் கொஞ்சம் தெரிந்தது. அந்த சோப் வாசனையையும் மீறிய அவனது குர்தாவில் இருந்த வந்த அத்தர் வாசனை… எனக்கு அவன் மீது கொஞ்சம் மயக்கம் வந்தது. ஆனால் எல்லாம் ஒரு நிமிடம்தான். அவன் மறுபடியும் நக்கலுடன் பேச ஆரம்பித்தான்.
“சமையல்தான் செய்யனும்னா நீ சமையக்கட்டுலேயே இருந்து செய்யலாமே? எதுக்கு, அப்புறம், நான் வாசிக்கற இடத்துக்கு நேரா வந்து உட்காரணும்?” அவன் கொஞ்சம் நேரம் விட்டு, மறுபடியும் நக்கலுடன் பேசினான்.
“உண்மையைச் சொல்… நீ என் இசையைக் கேட்க இங்கே வரவில்லை. மாறாய்… என்னைப் பார்த்து மயங்கத்தானே இங்கே வந்தாய்? உண்மையைச் சொல்”
அவனது இந்தக் கேள்வியை, நான் எதிர்பார்க்கவேயில்லை. அவன் கேட்ட கேள்வியில், ஓரளவு உண்மை இருந்தபோதும், என்னால் எனது தன்மானத்தை விட்டுத் தர முடியவில்லை. கூடவே, அவன் மீது இருந்த கோபமும் என்னோடு சேர்ந்துகொள்ள, நானும் விடாபிடியாக, அவனிடம் நக்கலாகப் பதில் சொன்னேன்.
“நபீல்… நீயோ ஒரு பச்சா பாசி. பல ஆண்களுக்கு உன் உடலை விருந்தாக்கும் ஒரு ஆண்… அப்படியிருக்க, உன்னிடம் ஏன் நான் மயங்க வேண்டும்?”
எனது இந்த பதிலில், அவன் நொறுங்கிப் போனான். அவனது கண்களில் இப்போது தாரை தாரையாய்க் கண்ணீர். நான், அப்படிப் பேசி இருக்க வேண்டாம் போலும்.
அவன் நிறைய நேரம் அழுதான். அப்புறம் அந்த அவனது அழுகையின் ஊடேயே, என்னிடம் ஏதோ சொல்ல, அவனது உதடுகள் துடித்தது. ஆனால், அவனால் உடனடியாகப் பேச முடியவில்லை.
நீண்ட நேரம் கழித்து, அவன் அமைதியானான். அப்புறம், அவன் சொல்ல வந்ததை என்னிடம் சொன்னான்.
“குல்பாரி.. நான் பச்சா பாசிதான்.. ஆனால் அது நான் விருப்பப்பட்டு தேடிக்கொண்ட வாழ்க்கை இல்லை.” என்றான்.
நான் அமைதியாய் இருந்தேன். அவன் தொடர்ந்தான்.
“எல்லா ஆப்கானியச் சிறுவர்கள் போலவே, நானும் எனது கிராமத்து மண் புழுதியில், புரண்டு புரண்டு விளையாடிக்கொண்டு இருந்தவன்தான். எங்கள் வீட்டில், எனக்கும் முன்னால், மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். நான்தான் எங்கள் வீட்டின் கடைசிப் பையன்.”
“காட்டிலே தேடிக் கிடைத்த கட்டைகளைக் கொண்டு, சக்கர வண்டி செய்து, அதை நீண்ட கழியால், ஓடவிட்டு, அதன் பின்னால் நான், சந்தோசமாக ஓடிக்கொண்டே இருந்த ஒரு நாளில்தான், எங்கள் கிராம வீட்டிற்கு, ஒரு தடிமனான, பெரியவர் வந்தார்.”
“அந்த நாள்தான், நான் எனது தாயையும் தந்தையையும், எனது சகோதர்களையும் பார்த்த கடைசி நாட்கள் குல்பாரி.”
“தந்தையின் சொல்லை, எப்போதும் தட்டாது செய்யும் நான், அந்தப் பெரியவரின் கைப்பிடித்து, போகும்படி, எனது தந்தை சொன்னபோது, நானும் அப்படியே செய்தேன்.”
“நீண்ட பயணத்திற்குப் பிறகு, மலையோரம் இருந்த அந்த விடுதிக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.”
“விடுதிக்கு வந்து சேர்ந்த அடுத்த நாளே, நான் பெண் உடை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டேன். ஏன் என்று கேட்டதற்கு, சரியான அடியும் உதையும் கிடைக்க, நான் வலியில் அலறிக்கொண்டே சம்மதம் தெரிவித்தேன்.”
“நான் இடுப்பை ஒடித்து, பெண் போல ஆடவேண்டும். என்னாலோ முடியவில்லை குல்பாரி. எனக்கு பாடத்தெரியும். ஆனால், அதுவரை ஆடத்தெரியாது. பெண் போல இடுப்பை ஒடித்து ஆடிப் பழகும் வரை, நான் என் இடுப்பில் வாங்கிய உதைகள், கொஞ்ச நஞ்சமல்ல குல்பாரி”.
“கடைசியில், என் முகத்தில் வெண்மாவு பூசப்பட்டது, எனது உதடுகளில், உதட்டுச் சாயம் பூசப்பட்டது.” திடீரென்று என்ன நினைத்தானோ?
நபீல், என் கிட்ட வந்தான். என்னை இன்னும் நெருங்கி, கெஞ்சும் குரலில் பேசினான். “இருப்பினும்.. குல்பாரி… உன் முன்னால் மட்டும், நான் ஒரு தகுதியான ஆண்தான். எனது மனம், உன்னைப் பார்த்து மயங்குகிறது என்பதுதான் உண்மை குல்பாரி”
எனக்கு அவன் பேசியது விந்தையாக இருந்தது. கூடவே, ஒரு அடிப்படை சந்தேகமும் எழுந்தது.
“நபீல்.. நீ நம்ம முதலாளியை விரும்புகிறாயா இல்லையா?” நான் அவனிடம் வெளிப்படையாகவே கேட்டேன்.
அவன் அமைதியாகவும் தீர்க்கமாகவும் பேசினான்.
“குல்பாரி. நான் முதலாளியை இன்றளவும் விரும்புகிறேன். ஆனால், அந்த எனது விருப்பம், அவர் உடல் மீது உள்ள ஆசையால் அல்ல. மாறாய், அவரது ஆசையைத் தீர்க்க, அவரது ஒரு பணியாள் போல, அவர் மீது நான் காட்டும் விசுவாசம்.”
“எனக்குப் புரியவில்லை” என்றேன். அவன் தொடர்ந்தான்.
“குல்பாரி.. பச்சா பாசி சிறுவர்கள் விடுதி வாழ்க்கை குறித்து, உனக்கு எந்த அளவிற்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. அந்த வாழ்க்கை, சிறுவர்களுக்கான சொர்க்கம் இல்லை. அது ஒரு படு பயங்கராமான நரகம். பெண்கள் போல, இடுப்பை வளைத்து நெளித்து ஆடத் தெரியாத சிறுவர்கள் பலருக்கு, அடியும் உதையும், அவ்வப்போது தாராளமாகக் கிடைக்கும். வாய் நாறும் வாடிக்கையாளர் ஆண்கள், சிறுவர்களின் உதடுகளை, ஏதோ பேரீச்சம்பழம் சாப்பிடுவது போல், கடித்து துப்புகிறபோது, ஏற்படும் ரணவலியைச் சகித்துக்கொள்ள வேண்டும். நூறு கிலோவிற்கும் மேலான எடை கொண்ட உடம்பை, சிறுவர்களின் மேல் ஏற்றி, ஆண் முதலாளிகள் விளையாடுகிறபோது, சிறுவர்கள், மூச்சுத்திணறி எழுந்து போகாமல் இருக்கவேண்டும். அப்புறம்… தனியறைக்குக் கூட்டிப்போய், வியர்வை நாற்றமும், கவிச்சி வாசமும் வீசும், அவர்களது ஆண்குறியை எடுத்து, சிறுவர்களின் வாய்களைப் புண்ணாக்கி….”
“போதும் நபீல்.. இதற்கு மேல் எனக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. ஆனால், ஒரு கேள்வி? நம்ம முதலாளியும் இப்படிப்பட்டவர்தானே?” நான் கேட்ட இந்தக் கேள்வியை அவன் உடனே மறுத்தான்.
“நம்ம முதலாளி அப்படிப்பட்ட கொடுமைக்ககாரர் இல்லை. மிகவும் நல்லவர். என்னை, பச்சா பாசி விடுதியில் இருந்து, தனியிடத்துக்கு அழைத்துச் சென்று, தங்க வைத்து இருக்கிறார். எனக்கு, நல்ல கல்வியைக் கொடுத்து இருக்கிறார். எனக்கு, நல்ல சங்கீதம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார். எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, நல்ல துணிகள் கொடுத்து…. இதற்கு மேல் ஒரு நல்லவன் என்ன செய்வான் குல்பாரி?…”
நான், “இதெல்லாம் ஒன்றும் பெரிய விசயம் இல்லை நபீல்…” என்று எதிர்த்துப் பேச ஆரம்பிப்பதற்குள், அவனே மறுபடியும் பேசினான்.
“நான் இன்னும் முடிக்கவில்லை குல்பாரி. நம்ம முதலாளி ஒரு நல்ல ஆண்மை நிறைந்த ஆண். என்னை ஒரு பெண் போல நினைத்துத்தான் உடலுறவு கொள்கிறார். அவர் அப்படி நடந்து கொள்வதற்கு ஆயிரம் தனிப்பட்ட காரணம் இருக்கலாம். ஆனால், அந்த ஆண்மை நிறைந்த முதலாளி, ஒரு பெண்ணிடம், படுக்கையறையில், என்ன கருணை காட்ட முடியுமோ, ஒரு பெண்ணிடம் எப்படி நாகரிகமாக நடந்து கொள்ளமுடியுமோ, அவை எல்லாவற்றையும், ஒரு பெண்ணாக என்னை நினைத்து என்னிடம் காட்டுகிறார்.”
நான் திரும்பவும் நக்கலடித்தேன். “அப்படியென்றால் நீ ஒரு ஆண் இல்லையா?”
அதன் பிறகு நடந்தது, நான் எதிர்பாராதது. அவன், என்னை நன்கு நெருங்கி வந்து என்னை ஆரத் தழுவினான். எனது உதடுகள் இரண்டும், அவனது உதடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டது. எனது மார்பகங்கள் அவனது இறுகிய பிடியில் நசுங்கியது.
நான் திமிறினேன். ஆனால், அவனோ என்னை விடுவதாக இல்லை. அவனது பலம் கொண்ட அரவணைப்பில், எனது எலும்புகள் நொறுங்குவது போல எனக்குத் தோன்றியது.
நான் கொஞ்சம் கொஞ்சமாக அவனது அணைப்பிற்கு இணங்க ஆரம்பித்தேன்
அவன் எனது மார்பகங்களைத் தடவ ஆரம்பித்தான். நான் மறுப்பேதும் சொல்லவில்லை.
“நான் ஒரு ஆண்தானடி” என்று, அவனது ஒவ்வொரு செயலிலும் எனக்கு உணர்த்திக் கொண்டு இருந்தான். நான் அதை ரசித்துக் கொண்டு இருப்பது போல எனக்குத் தோன்றியது.
நான், எனக்குப் பிடித்த ஒருவனை, எனக்கே எனக்காய் சொந்தமாக்கிக் கொண்டது போல, ஒரு சந்தோசம் என்னுள் நிறைய ஆரம்பித்தது. அவன், எனது மேலாடையைத் தூக்கி, எனது இடையில் கைவைத்தான். என் உணர்ச்சிகள் இன்னும் கூடியது.
அவன் இப்போது குனிந்து எனது இடையருகே வந்தான். நான், ஒன்றும் மறுக்கவில்லை.
ஆனால், அந்த நேரத்தில் தான்…
“குல்பாரி… வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டாயா?” பின்னால் நின்று கொண்டு இருந்த முதலாளியம்மா சத்தம் போட்டாள்.
நாங்கள் இருவரும் சரேலென விலகினோம்.
அவள் எங்கள் அரவணைப்பை நிச்சயம் பார்த்து இருப்பாள். ஏன் நாங்கள் பேசியதைக் கூட கேட்டு இருக்கலாம். எனக்கு அவள் என்ன சொல்வாளோ என்று பயமாக இருந்தது.
ஆனால், முதலாளியம்மா, நடந்தவை குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
“குல்பாரி.. நாளை முதலாளி இங்கே வருகிறார். எனவே வீடு முழுவதையும் சுத்தம் செய். இந்தப் பையனின் அறையையும் சுத்தம் செய். சரியா?”
அவள் என்னை அதட்டாமல் மிரட்டாமல் பேசியது எனக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது. “சரிங்கம்மா” நான் அவசரமாகத் தலையாட்டினேன். அவள் தொடர்ந்தாள்.
“இன்றைய சமையலைச் சீக்கிரம் முடி. முடித்துவிட்டு, நம் வீடு வந்து சேர்” அவள் விருட்டென்று திரும்பி வீட்டிற்கு வெளியே நடந்தாள்.
முதலாளியம்மா.. நபீலிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
எனக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும், நான் பயந்துகொண்டே, அவசரம் அவசரமாக, சமையலறைக்குள் ஓடினேன்.
தொடரும்