மாரி.கிருஷ்ணமூர்த்தி
- உள் முகம்
பாகனுக்கு தெரியும்
யானை ஒரு போதும் நூறு
அடக்கி விட முடியாதென்று
யானைக்கும் தெரியும்
பாகனிடம் ஒரு போதும்
முற்றிலும் மீறி
விடமுடியாதென்று
பாகன் சொல்கிறான் என்று
ஒவ்வொரு முறையும் யானை
அடிபனிவது அந்த மிச்ச விகிதத்ததின்
கருணையினால் தான்
2.பயணம்
ஏதோ ஒன்று நம்மை
பிணைக்கிறது
ஏதோ ஒன்று
நம்மை பிரிக்கிறது
அந்த ஏதோ ஒன்றை
புரிந்துக்கொள்ளத்தான்
மொத்த ஜீவிதத்தையும்
தொலைக்கிறோம்
3.தூரப் பறவை
சுழலும் வட்டத்தில்
தெரிந்துக்கொள்கிறது
வந்தமரும் கிளையின்
அன்றைக்கான வீட்டை
*****
மாரி.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை