This entry is part 17 of 31 in the series 20 அக்டோபர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 86

உன்னதத் தருணம் .. !

cover-bangla-desh1

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

வாழ்வின் உன்னதத் தருணத்தை

நழுவ விடாதே !

கர்வம் பெண்ணே ! தருணத்தைத்

தவற விடாதே !

காலம் வீணாய்ப் போகுது !

பந்தய விளை யாட்டுகள் யாவும்

முடிவடைந்து போகும் !

அமுதம் விற்கும்

வர்த்தகச் சந்தையும்

நிறுத்தப் போகுது வாணிபத்தை,

கர்வப் பெண்ணே !

ஆத்மாவிற்கு இணையவன் வருகிறான்

இரகசியமாய்

உன்னருகில் நிற்பதற்கு !

பின்னர் விட்டு விலகிச் செல்வான்

புன்னகை செய்த வண்ணம்,

அலைமேல் கட்டுமரத் தோணியில்

மிதந்து கொண்டு !

மெய்வருந்தி

அரிய

போட்டிப் பரிசுப் புதையல்

பெறுவதற்கு

விரைந்து வாராய்

கர்வப் பெண்ணே !

பூங் கொத்துகளை ஏந்திய வண்ணம்

புது வசந்தம் போகும் போது

எது கொண்டு உனக்கு

மாலை பின்னிக் கொள்வாய் ?

கர்வப் பெண்ணே !

வெகு தூரத்துக் காற்றினிலே

கேட்கும்

புல்லாங் குழல் வாசிப்பு,

கண்ணீர்த் துளி ஊடே

வெட்ட வெளியை நோக்கி !

தருணம் நழுவுகிறது,

கடந்து செல்லும் கால் பாதங்கள்

நடக்கும் அரவம்

பகல் இரவு பூராவும்

துடிக்கும் எனது இதயத்தில்

கர்வப் பெண்ணே !

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 198 1938 ஆண்டு டிசம்பரில் தாகூர் 77 வயதினராய் இருந்த போது, “மயார் கேளா” நாட்டிய நாடகத்துக்கு [Mayar Khela Dance Drama] இறுதியாகத் திருத்தமாகி முடிக்கப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  October  16 , 2013

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழைஎன்ன இது மாற்றமோ ..?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *