இஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?

author
0 minutes, 18 seconds Read
This entry is part 3 of 15 in the series 29 நவம்பர் 2015

ayaanஅயான் ஹிர்ஸி அலி

நம்மிடையில் ஒரு பிரசினை வந்தடைந்திருக்கிறது – நரகத்திலிருந்து அல்ல , சொர்க்கத்திலிருந்து வருவதாய்ச் சொல்லிக்கொண்டு நம்மை வந்து அடைந்திருக்கிறது. ஆனால் அது குறித்த புரிதல் யார்க்கும் இல்லை. இஸ்லாமிய அரசு பற்றிப் பேசியபோது 2014-ல், அமெரிக்க கமாண்டர் ஜெனரல் இதை ஒப்புக் கொண்டார். “இந்த இயக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் புரிந்து கொள்ளும் வரையில் நம்மால் இதை வெற்றி கொள்ள முடியாது. ” அவர் துணிச்சல் பாராட்டத் தக்கது. ஆனால் இந்தப் புரியாமை ஒன்றும் புதிதல்ல. இந்த இஸ்லாமிய அரசின் தாக்குதல் பற்றி அவர்களுக்குப் புரியவில்லை என்பது மட்டுமல்ல, கருத்து ரீதியாக இதை எதிர்கொள்ளும் எந்த முயற்சியும் அவர்களிடம் இல்லை.

கருத்து மோதலில் நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம். கடந்த செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்லாமிய அரசு “இஸ்லாமிய” அரசு அல்ல அன்று சொல்கிறார். ஐ நா போது சபையில் “இஸ்லாம் அமைதியை போதிக்கிறது” என்றார். அமெரிக்க சமூக சேவகர் பீட்டர் காசிக் தலை துண்டிக்கப் பட்ட போது அது “தீய” செயல் என்றார். ஆனால் அந்தக் கொலையாளிகளின் “தீவிரவாத இஸ்லாம்” கோட்பாடு பற்றி எதுவும் சொல்லவில்லை. அரசு அளிக்கும் அமெரிக்க பத் திரிகைக் குறிப்புகளில் இந்த வார்த்தை காணவில்லை. அதற்குப் பதிலாக :வன்முறையான தீவிரவாதம் என்று சொல்கிறார்கள்.

 

இஸ்லாத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப் படும் வன்முறையை அதன் உண்மையான் பெயரான “ஜிகாத்” என்று இவர்கள் அழைக்காதது விசித்திரம். (அமெரிக்க ரஷ்ய ) பனிப் போரின் போது கம்யூனிசம் ஒரு அமைதிச் சித்தாந்தம் என்று அழைத்திருந்தால் என்ன விசித்திரமாய் தொநித்திருக்கும்? ஜெர்மனியில் பாதர் மெயின்ஹாஃப் என்ற குழு (கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட கம்யுனிஸ்ட் ஜெர்மன் குழு) நிஜமான மார்க்சிஸ்டுகள் அல்ல என்று சொல்லிஇருந்தால் அது எப்படிப் பட்ட தவறாக இருந்திருக்கும்? இஸ்லாமின் எதிர்காலம் பற்றி முற்போக்கு முஸ்லிம்களுக்கும், பிற்போக்கு முஸ்லிம்களுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் தெளிவாக அமெரிக்கா யாருக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

 

வாய் மூடிய மௌனம்

அமெரிக்கா எப்படி குழறுபடியாய்ப் பேசலாயிற்று? செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் போது புஷ் நிர்வாகம் தெளிவாய் பேசிய உணர்வு ஏற்பட்டது. “இது மனதை மாற்றுவதற்கான போராட்டம் என்று 2002-ல் பால் வுல்பொவிட்ஸ் (பெண்டகன் தலைவர்) கூறினார். இஸ்லாம் பற்றி என்ன நிலைபாடு மேற்கொள்வது என்று நிர்வாகம் விவாதித்தது. இதில் ஈடுபட்ட ஜோசப் பாஸ்கோ என்பவர், அரசு நிர்வாகத்தில் இருந்த இரட்டை நிலையைச் சுட்டிக் காட்டினார். “கிருஸ்துவம் எப்படி சீர்திருத்தப் பாதையில் சென்று இன்றைய சகிப்புத் தன்மையைப் பெற்றதோ அது போல ஒரு இயக்கம் இஸ்லாமில் வெற்றி பெற வேண்டும்” என்று கருத்தை முன்வைத்தனர். ஆனால் சமரசமாக, இனி எப்படி இதை குறிப்பிடுவது என்று விவாதிக்கையில் , முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தம் மதத்தை அமைதி வழியில் பின்பற்றுகிறார்கள், ஒரு சிறு குழு மட்டும் இஸ்லாமின் தோறுவாயில் இருந்த ஏழாம் நூற்றாண்டு வன்முறை வழியில் செலுத்துகிறார்கள் என்று சொல்ல முற்பட்டார்கள்

 அரசு யாரைக் குறிவைத்து தம் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று கூட தெளிவில்லாமல் இருக்கிறார்கள், சிந்தனை வறுமையா? சவுதி நிதியளிப்பா? அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பழைய தவறுகளா? என்ன காரணம் என்று தெரியவில்லை. எந்த திசையில் செல்வது என்று முடிவு செய்ய முடியாமல் குழப்பத்தில் எதுவுமே செய்யாமல் இருந்து விட்டார்கள்.

 

வழக்கமாக உள்ள அரசு நிர்வாக எல்லைகளை புரிந்து கொள்வதிலும் குழப்பம். அமெரிக்க சேனையின் பொதுமக்கள் மற்றும் உளவியல் துறை பேச்சு வார்த்தை, பத்திரிகை உலகம், ரகசிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தது. வெளியுறவுத் துறை தம் எல்லைக்குள் படைப் பிரிவு தலையிடுவதை உணர்ந்தார்கள். 2004 தர்தல் சமயத்தில் மதம் குறித்த எதிர்மறை கருத்துகளைத் தவிர்ர்குமாறு அறிவுரை வழங்கப் பட்டது. யாருடைய வழிகாட்டலும் இல்லாமல், கொள்கை திட்டம் எதுவும் இல்லாமல், யாரும் எதுவும் செய்யாமல் கழிந்தது  காலம்.

 

அரசு நிர்வாகம் ஒரு வழியாக “முஸ்லிம் தொடர்புத் துறை”யில் மனிதாபிமான திட்டங்களும், அரபு மொழியில் வானொலி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகளும் – பாப் பாடல்கள் , செய்திகள்) உருவாக்கினர். அதாவது இஸ்லாம் பற்றிப் பேசாமலேயே முஸ்லிம் தொடர்புத் துறையை உருவாக்கினர். வெளியுறவுத் துறையில், 2005-2007 காலகட்டத்தில் ,  துணைச் செயலராய்  இருந்த கரேன் ஹ்யூ சொன்னார் :”  மதம் பற்றியே பேசாமல் தான் பயங்கர வாதம் பற்றிப் பேசுவோம் என்று முடிவு செய்தோம். ”

 

புஷ் பின்பற்றிய கல்கியை ஒபாமாவும் பின்பற்றியது தான் ஆச்சரியம். 2009-2011-ல் ஜூடித் மக்ஹேல் , கரேன் முன்பு வகித்த பதவியை வகித்தவர். “இந்த முயற்சி கருத்துகளின் யுத்தம் அல்ல. பெருவாரியான மக்களின் மனங்களை வென்றெடுப்பது நம் நோக்கமல்ல. மாறாக சிறுபான்மையைனராய் உள்ள சில ஆபத்தான குழுக்களை அணுமி அவர்களை வன்முறை வழியிலிருந்து மாற்றுவது தான் நோக்கம்.” என்றார். “வன்முறை தீவிரவாதம்” என்ற சொற்றொடரை நோக்கும் போது, தீவிரவாதம் பரவாயில்லை, வன்முறை இல்லாமல் இருந்தால் போதும் என்ற அர்த்தம் வருகிறது. இந்த பார்வை, ஜிஹாத் பற்றி பரப்புரை செய்பவர்களுக்கும், அடஹிப் பின்பற்றி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளத் தவறி விடுகிறது. இஸ்லாம் எதிர்காலம் பற்றிய விவாதத்தை அமெரிக்கா ஒதுக்கி வைத்து விட்டதாய்க் காண்கிறது.

 

 
Faith healer: Imam Hassen Chalghoumi in Paris, May 2014.

 

தோல்வி

இஸ்லாம் பற்றிய விவாதத்தைத் தவிர்ப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. – ஒன்று உத்தி சார்ந்தது. இன்னொன்று அமெரிக்க உள்நாட்டு விவகாரம். இஸ்லாம் பற்றி விவாதிப்பதால் மத்திய கிழக்கு இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் சார்ந்த அமெரிக்க நலன் பாதிக்கப் படும் என்ற அச்சம். இரண்டாவதாக உள்நாட்டில் இஸ்லாமிய வெறுப்பாளர்கள் என்று அழைக்கப் படும் சிலருக்கு  இது வாய்ப்பாகிவிடக் கூடும் என்ற அச்சம். ஆனால் இது தேவையற்றது. மத்திய கிழக்கில் அமெரிக்கா பெரும் ஆதரவைப் பெற முடியவில்லை. இஸ்லாம் வெறுப்பாளர்களால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், தீவிரவாத இஸ்லாம் தரும் ஆபத்து அதிகம்.

ஜிஹாதி குழுக்களால் ஏற்படும் வன்முறையை இந்த அணுகலால் மறையச் செய்ய முடியாது. ஜிஹாதிகளின் கொள்கைகள் சிலவற்றிற்கு- ஷரியா சட்டம் புகுத்துவது, இஸ்லாமை விட்டு வெளியஎறுபவர்களைக் கொல்வது போன்றவற்றிற்கு – பல முஸ்லிம் மக்களின் ஆதரவும் உண்டு என்பதையும் மறக்கலாகாது. மத்திய கிழிக்கும், வட ஆப்பிரிக்காவிலும் மேலும் மேலும் வன்முறை வளர்கிறது. சிரியாவின் பெரும்பகுதி, ஈராக்கின் பகுதிகள் இஸ்லாமிய அரசு வசம் வந்தாயிற்று. ஏமன் பெரும் வன்முறைக் குழப்பத்தில் உள்ளது. லிபியாவில் இஸ்லாமிய அரசு பாசறைகள் உள்ளன. நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம்கள் நைஜர்- கேமரோன் பகுதியில் பெருத்த வன்முறையில் இறங்கி நிலைகுலையச் செய்துள்ளனர்.

1960-70களில் சோவியத்-அமெரிக்க நட்புறவு தொடங்கியபின்பு இந்த கருத்துப் போர் மெள்ள மறைந்தது. 1981-ல் ரொனால்ட் ரேகன் ஜனாதிபதி பொறுப்பு ஏற்ற போது, அமெரிக்கா தொடங்கி வைத்த ரேடியோ ஐரோப்பா, சுதந்திர ரேடியோ போன்ற அமைப்புகள் 1940- தொழில் நுட்பத்தில் துருப் பிடித்து கிடந்தன. ஆனால் ரேகன் காலத்தில் இந்த கருத்துப் போர் தொடர்ந்தது.

பனிப்போரின் வெற்றிக்கு பொருளாதார நெருக்கடிதான் காரணம் என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால் இது வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்வதாகாது. 1950-கள் தொடங்கி 1980 வரையில் அமெரிக்கா இரும்புத் திரைக்குப் பின்னிருந்த மக்களுக்கு தனி மனித விடுதலை சித்தாந்தம் பற்றியும், வாழ்க்கைத் தரம் பற்றியும், சட்ட ரீதியான அணுகுமுறை பற்றியும் தொடர்ந்த பிரசாரம் செய்து வந்தனர். சோவியத் விமர்சகர்கள் அலெக்சாண்டர் சோல்ஜெனிட்சின், அந்த்ரே சகரோவ், வக்லவ் ஹவல் போன்றவர்கள் நுகர் பொருள் தரம் பற்றவில்லை என்பதனால் சோவியத் யூனியனை விமர்சிக்கவில்லை. சோவியத் அமைப்பு சட்டங்களினை  மிதித்து, பொய்மையில் தோய்ந்து, ஊழல் மண்டிக் கிடந்தது என்பது தான் அவர்களின் விமர்சனம்.

இன்று இஸ்லாமிய நாடுகளிலும் மிகத் துணிச்சலுடன் இவர்களைப் போலவே போராடும் போராளிகள் இருக்கிறார்கள். பனிப் போரின் போது சோவியத் யூனியனுக்கு எதிராக பலதரப் பட்ட பின்னணிகளிலிருந்து மறுப்பு எழுந்தது போன்றே இஸ்லாமிய நாடுகளிலும் சீர்திருத்தம் கோரி குரல்கள் எழும்புகின்றன. சிலர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கிறார்கள், சிலர், அமெரிக்க ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த வேறுபாடுகளைத் தாண்டி இவர்கள் சீர்திருத்தம் கோருகிறார்கள். இவர்கள் பொதுப் போக்கு ஜிஹாதிற்கு எதிராகவும், சனாதனத்திற்கு எதிராகவும் போராடுவது. ஆனால் மேற்குலகு இவர்களை அங்க்கீகரிப்பதுமில்லை. இவர்களை ஆதரிப்பதும் இல்லை.

அமெரிக்காவின் தவறுகள்  இரண்டு. கம்யூனிசத்தின் தோல்விக்குப் பிறகு கருத்துப் போரின் காலம் முடிந்து விட்டது என்று கருதுவது. 1988-ல் அமெரிக்க அரசு யு எஸ் செய்தித் துரையை கலைத்தது. இஸ்லாமிய தீவிரவாதத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்வதில்லை என்று முடிவு செய்தனர். இஸ்லாம் பற்றிப் பேச அஞ்சுகிறார்கள்.

ப்ருகிங்க்ஸ் அமைப்பின் வில்லியம் மக்காண்ட்ஸ் என்பவர் சொல்கிறார்: ஒபாமா அரசு இந்த பிரசினையை மதம் சார்ந்த யுத்தமாக புரிந்து கொள்வதில்லை. இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளை அமெரிக்கா ஆதரித்தால், சீர்திருத்த வாதிகளுக்கு பாதிப்பு வரும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் சீர்திருத்தத்தை ஆதரிப்பது என்பது, மதப் போர் அல்ல. கருத்துப் போர் என்பது அமெரிக்க கொள்கைப் பிரகடனமும் அல்ல. நியாயமற்ற் சரியா சட்டங்களையும், பெண்களுக்கு எதிரான கொள்கைகளையும், வன்முறை ஜிஹாதையும் கொண்டிருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் விரும்பத்தக்கதல்ல என்று அழுத்திச் சொல்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்து வெளியில் மீண்டும்

இஸ்லாமிய சீர்திருத்தம் அரசினால் மட்டும் செய்ய முடிகிற ஒன்றல்ல. சிவில் சமூகமும் முக்கிய பங்காற்ற வேண்டும். அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் இதற்கு உதவ முடியும். அமெரிக்க பல்கலைக் கழகங்களும் இந்த முயற்சியில் ஈடுபட முடியும். பல முயற்சிகள் இஸ்லாம் பற்றிய கல்விக்கு உள்ளன, ஆனால் சீர்திருத்தம் பற்றி பேசுவதில்லை. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் “கலாசார ஏகாதிபத்தியம்” என குற்றச்சாட்டு வரும் என்று பயந்து இதை மேற்கொள்ள பயப்படுகிறார்கள்.

அரசு நிர்வாகம் ஒரு வழியாக “முஸ்லிம் தொடர்புத் துறை”யில் மனிதாபிமான திட்டங்களும், அரபு மொழியில் வானொலி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகளும் – பாப் பாடல்கள் , செய்திகள்) உருவாக்கினர். அதாவது இஸ்லாம் பற்றிப் பேசாமலேயே முஸ்லிம் தொடர்புத் துறையை உருவாக்கினர். வெளியுறவுத் துறையில், 2005-2007 காலகட்டத்தில் ,  துணைச் செயலராய்  இருந்த கரேன் ஹ்யூ சொன்னார் :”  மதம் பற்றியே பேசாமல் தான் பயங்கர வாதம் பற்றிப் பேசுவோம் என்று முடிவு செய்தோம். ”

புஷ் பின்பற்றிய கல்கியை ஒபாமாவும் பின்பற்றியது தான் ஆச்சரியம். 2009-2011-ல் ஜூடித் மக்ஹேல் , கரேன் முன்பு வகித்த பதவியை வகித்தவர். “இந்த முயற்சி கருத்துகளின் யுத்தம் அல்ல. பெருவாரியான மக்களின் மனங்களை வென்றெடுப்பது நம் நோக்கமல்ல. மாறாக சிறுபான்மையைனராய் உள்ள சில ஆபத்தான குழுக்களை அணுமி அவர்களை வன்முறை வழியிலிருந்து மாற்றுவது தான் நோக்கம்.” என்றார். “வன்முறை தீவிரவாதம்” என்ற சொற்றொடரை நோக்கும் போது, தீவிரவாதம் பரவாயில்லை, வன்முறை இல்லாமல் இருந்தால் போதும் என்ற அர்த்தம் வருகிறது. இந்த பார்வை, ஜிஹாத் பற்றி பரப்புரை செய்பவர்களுக்கும், அடஹிப் பின்பற்றி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளத் தவறி விடுகிறது. இஸ்லாம் எதிர்காலம் பற்றிய விவாதத்தை அமெரிக்கா ஒதுக்கி வைத்து விட்டதாய்க் காண்கிறது.

 

வாய்ப்பு

முதல் படி முஸ்லிம் உலகம் மதச் சீர்திருத்தத்தின் முதல் கட்டத்தில் இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இதன இயல்பைப் புரிதந்து கொள்ள வேண்டும் என்றால், முஸ்லிம்களில் உள்ள மூன்று குழுக்கள் பற்றி உணர வேண்டும். முதல் குழு ஷரியாவை சுமத்துவது தம் மதக் கடமை என்று காணும் ஒரு குழு. இரண்டாவது- இவர்கள் தான் பெரும்பான்மையினர்- தம்முடைய மதத்தின் தொழுகை போன்ற கடமைகளைப் பின்பற்றுபவர்கள். ஆனால் வன்முறையில் ஈடுபடாதவர்கள்.

இருந்தும் இஸ்லாம் சீர்திருத்தத்திற்கு இரண்டு பெரும் தடைகள் உள்ளன. ஒன்று – மிக மென்மையான சீர்திருத்தம் கோருவோர் கூட கொலை மிரட்டலுக்கு ஆளாகிறார்கள் இரண்டாவது-  சாமானிய முஸ்லிம் மக்கள் மத வாசகங்களில் உள்ள வன்முறையை அங்கிகரிக்க மறுக்கிறார்கள்.

நாசரின் விமர்சனக் கண்ணோட்டம் முஸ்லிம் சீர்திருத்தத்தின் அடிநாதமாய் உள்ளது. வரலாற்று ஒப்புமை மிக மேலோட்டமானது என்பது ஒரு குறைபாடு. ஏசுவின் போதனைகளுக்கும், முகம்மதுவின் போதனைகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. அமைப்பு ரீதியாகவும் வேறுபாடு உள்ளது. கிருஸ்துவம் படிநிலை கொண்ட அமைப்பு. அரசு சாராமல் இயங்க கூடியது. இஸ்லாம் மையமற்றது, ஆனால் அரசியல் அபிலாஷைகள் கொண்டது. இருந்தும் இன்று மத்திய கிழக்கில் ஏற்படும் மாற்றங்கள் 16-ம் நூற்றாண்டில் கிருஸ்துவ உலகில் நடைபெற்ற மாற்றங்களுடன் ஒப்பிடத் தக்கது. முஸ்லிம் உலகிலோ புதிய தகவல் தொடர்பு சாதனங்கள் முன்னில்லாத வகையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. சீர்திருத்தம் வேண்டும் குரல்கள் கெய்ரோ, டெஹ்ரான் மட்டுமல்லாமல் லண்டன், நியூ யார்க் என்று பரவலாக பாலா இடங்களில் கேட்கத் தொடங்கியுள்ளன. எகிப்து, எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களும் சீர்திருத்தம் சார்பாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மூன்றாவது குழு முஸ்லிம் உலகில் சீர்திருத்தம் வேண்டுவோர்.

என்னைப் போன்ற வெகு சிலர், முஸ்லிம் நம்பிக்கையாளர்களாய் தொடர முடியாமல் இருந்தாலும், இஸ்லாத்தின் எதிர்காலம் பற்றிய விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பெரும்பாலான சீர்திருத்த இஸ்லாமில் நம்பிக்கை வைப்பவர்கள். அரசியல் வன்முறைச் சாபத்தை எதிர்கால இஸ்லாமிய உலகம் தவிர்க்க வேண்டும் என்றால் இஸ்லாமில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும் என்று நம்புபவர்கள்.

இருந்தும் இஸ்லாம் சீர்திருத்தத்திற்கு இரண்டு பெரும் தடைகள் உள்ளன. ஒன்று – மிக மென்மையான சீர்திருத்தம் கோருவோர் கூட கொலை மிரட்டலுக்கு ஆளாகிறார்கள் இரண்டாவது-  சாமானிய முஸ்லிம் மக்கள் மத வாசகங்களில் உள்ள வன்முறையை அங்கிகரிக்க மறுக்கிறார்கள்.

அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம் கெய்ரோவில் உள்ள மதிப்பு வாய்ந்த மதக் கல்வி நிலையம். சுனி பிரிவினரின் கல்வி அங்கு. அதன் மாணவர் சுபியான் அல் -ஒமாரி பெல்ஜிய செய்தித்தாளுக்கு மார்ச் மாதம் சொன்னார்: ” இஸ்லாமிய அரசு வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. இஸ்லாமிய அரசு எந்த வாசகங்களை வைத்து தம்மை நியாயப் படுத்துகிறதோ அதையே தான் நாங்கள் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொண்டோம். வித்தியாசம் என்னவென்றால், இஸ்லாமிய அரசு இந்த வாசகங்களை நிஜமாகவே நடைமுறைப் படுத்துகிறது.” இந்த தர்க்கத்தினால் தான் இஸ்லாமிய அரசில் இணைய ஆர்வங்கொண்டது பற்றி அவர் தெரிவிக்கிறார். மொகம்மது அப்துல்லா -நாசர் என்ற இன்னொரு மாணவர் இஸ்லாமிய அரசில் இணைய ஆர்வம் காட்டவில்லை. “ஆனால் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் இஸ்லாமிய அரசில் போய் ஆயுதம் ஏந்தாவிட்டாலும்,இந்தக் கருத்துகளை அவர்கள் மூளையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகளை தம் அருகில் உள்ள சமூகக் குழுக்களில் பரப்புகிறார்கள்.” என்றார். 

ஏற்கனவே பல சாமானிய முஸ்லிம்கள் – முஸ்லிம் நாடுகளிலும், மேற்குலகிலும் – சீர்திருத்தம் வேண்டி குரல் கொடுக்கின்றனர். முஸ்லிம் சீர்திருத்தம், மதகுருக்களைக் காட்டிலும், இப்படிப்பட்ட சாமானியர்களால் தான் இயக்கம் பெறும். ஆனால் பல மத குருக்களும் சீர்திருத்தம் கோரி முக்கிய பங்கு வகிக்கின்றனர். பாரிஸ் நகரின் அருகில் டிரான்சி மசூதியில் உள்ள ஹஸன் சல்கௌமி “இஸ்லாம், யூத , கிருஸ்துவ மதங்களின் பாதையில் வரலாற்று ரீதியான சீர்திருத்தம் பெறும்” என்று கூறுகிறார். “ஆனால் இது வெறும் முஸ்லிம்களின் உள்சமூகப் பிரசினை மட்டும் தான் என்று பிற நாடுகள் அமைதி காத்தால் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை. ” என்கிறார்.

இப்படிப்பட்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள் புனிதப் போர், மோட்சம், பலியாதல் இவற்றை தூக்கிவைக்கும் ஒரு போக்கிலிருந்து விலகி சிந்திக்கிறார்கள். அப்தல் அழ-ஹமீத் அழ-அன்ஸாரி கத்தார் பல்கலையின் முந்திய தலைவர். அவர் “மதம் பற்றி உரையாற்றுபவர்கள் நம் இளைஞர்களை மரணத்தை நேசிக்க அல்ல, வாழ்வை நேசிக்கக் கற்பிக்க வேண்டும்” என்று கூறுகிறார். “மதகுருக்கள் தூண்டுதலினால் வன்முறையில் ஈடுபடும் இளைஞரக்ள் சார்பாக அந்த மதகுருக்களை பொறுப்பாக்கி வழக்குத் தொடர வேண்டும் என்று கூறுகிறார். ஈராக் மத குறு அஹமத் அழ-கபாஞ்சி “குரான் முகம்மதுவினால் உருவாக்கப் பட்டது, ஆனால் கடவுளின் தூண்டுதல் காரணம்” என்று கூறுகிறார். சனாதனிகள் குரான் கடவுளால் நேரடியாய் அருளப் பட்டது என்று கூறுவதிலிருந்து மாறுபட்ட ஒன்று இது. ஷரியாவை வரிக்கு வரி பின்பற்றாமல் அதன் பொருளைக் கண்டுணர்ந்து அதன்படி சட்டங்கள் இயற்றப் படவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். மதத்தையும், அரசையும் பிரித்துணர வேண்டும் என்று ஈராக் மதகுரு அயத் ஜமால் அல் -தீன் கூறுகிறார்.

சீர்திருத்தவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள்.

அமெரிக்க ஜனாதிபதிகளும், அமைச்சர்களும், இஸ்லாம் பற்றி உரை நிகழ்த்த வேண்டியதில்லை. ஆனால் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று கோருவது தவறில்லையே. மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும்போது சீர்திருத்த வாதிகளுக்காக குரல் எழுப்பவேண்டும். சீர்திருத்தத்திற்கு எதிரான இஸ்லாமிய நடைமுறைக்கு சப்பைக் கட்டு கட்டுவதை நிறுத்த வேண்டும்.

இந்த யோசனைக்கு முன் உதாரணம் உண்டு. பனிப் போரின் போது கம்யூனிச எதிரிகளுக்கு ஆதரவு அளித்து சோவியத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. கலாசார சுதந்திரத்திற்கான அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல், கார்ல் ஜாஸ்பர்ஸ் , ழக் மரிடன் போன்ற அறிவுஜீவிகளுக்கு தலைமைப் பொறுப்பு அளித்தது. ஆர்தர் கோஸ்லர் போன்றவர்கள் முன்னாள் கம்யூனிஸ்ட்களாய் இருந்தவர்கள். சர்வாதிகாரத்தின் ஆபத்தை விளக்கியவர்கள். அமெரிக்க ஆதரவால் பல பத்திரிகைகள் வெளியாயின.

நான் இனவாதியல்ல. ஆனால் முஸ்லிம்களை விமர்சிக்கும் அனைவரையும் இனவாதிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்கும் போக்கிற்கு நானும் பலியாகியுள்ளேன். அரபு மக்களும், ஆப்பிரிக்க மக்களும் இயல்பாகவே பின்தங்கியவர்கள் என்று நான் நம்பவில்லை. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கக் கூடியவன், மனசாட்சி உள்ளவன் என்றே நான் நம்புகிறேன். அறிவையும், மனசாட்சியையும் பின்னுக்குத் தள்ளி சில வசனங்களை முன்வைத்து கொலைகளையும் அடிமைத் தனத்தையும் நிகழ்த்தும் போகோ ஹராம், இஸ்லாமிய அரசு அமைப்புகளில் சிலர் சேரலாம். ஆனால் இந்த செயல்பாடுகள் ஏற்கனவே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. சீர்திருத்தவாதிகளை என்னதான் மிரட்டினாலும், சீர்திருத்தம் நின்று விடாது.

ஆமாம், முஸ்லிம் சீர்திருத்தத்தின் முக்கிய பொறுப்பு முஸ்லிம்களுக்கானதே . ஆனால் மேற்குலகு இந்த சீர்திருத்த முஸ்லிம்களுக்கு உதவி செய்வது அவர்களுக்கு  நன்மை பயக்கும் ஒன்று தான். இது அவர்கள் கடமையும் கூட. சோவியத் கம்யூனிசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு முன்னர் உதவி செய்தது போல இதுவும் தேவை. இல்லையெனில் இஸ்லாமிய அரசு முஸ்லிம் உலகை மட்டுமல்ல, முழு உலகத்தையே நரகத்திற்குத் தள்ளிவிடும்.

 

Series Navigationஎழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழாஅவன் அவள் அது – 12
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *