RSS Chennai requests the public to donate for Flood Relief Fund. For Chennai Flood relief Account’SEVABHARATHI TAMILNADU’ Andhra Bank, Chetpet branch, Chennai A/C no.078410011014427 IFSCode ANDB0000784 MCIR code : 600011005. Income Tax 80 G Exemption is available. இன்று 2/12/2015 முதல் 6/12/205 வரை. அடுத்தவாரமும் தேவைப்பட்டால் தொடருவோம் ! கடலூர்,வெள்ளத்தால் பலர் உயிர் இழந்தும் போதிய மீடியா வெளிச்சம் இல்லை. கடலூர் மக்களுக்கு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/5tGYuGr-s14 https://youtu.be/bFCfRM_JNj8 +++++++++ அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி ஆக்கினார். உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உயிரின மூலம் கண்டார், அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும்; கடவுள் துகள் ! தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே புரோட்டான்கள் மோதி சக்தியைத் துகளாய் மாற்றும் ! கனமான நுண் துகளே பரமாணுக்கு […]
அயான் ஹிர்ஸி அலி நம்மிடையில் ஒரு பிரசினை வந்தடைந்திருக்கிறது – நரகத்திலிருந்து அல்ல , சொர்க்கத்திலிருந்து வருவதாய்ச் சொல்லிக்கொண்டு நம்மை வந்து அடைந்திருக்கிறது. ஆனால் அது குறித்த புரிதல் யார்க்கும் இல்லை. இஸ்லாமிய அரசு பற்றிப் பேசியபோது 2014-ல், அமெரிக்க கமாண்டர் ஜெனரல் இதை ஒப்புக் கொண்டார். “இந்த இயக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் புரிந்து கொள்ளும் வரையில் நம்மால் இதை வெற்றி கொள்ள முடியாது. ” அவர் துணிச்சல் பாராட்டத் தக்கது. ஆனால் […]
தஸ்லிமா நஸரீன் என்னுடைய தாய்நாட்டைப் போற்றிப் பாராட்டும் தேசபக்தி பாடல்களை நான் ஒரு காலத்தில் பாடுவதில் விருப்பத்துடன் இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அந்த விருப்பம் இல்லை. ஏனெனில், அந்தப் பாடல்களை நான் நம்புவதில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை தருவதில் என்னுடைய நாடு மிகவும் பின் தங்கி இருக்கிறது என்பது மறுக்கமுடியாதது. அதன் குறைகளை எல்லாம் தாண்டி, ஒரு நாட்டை உலகத்திலேயே மிகச்சிறந்த நாடு என்று, சொந்த நாடு என்ற காரணத்திற்காக ,உணர்ச்சியுடன் சொல்ல முடியாது. என்னுடைய […]
. அத்தை மகள் என்மீது அளவற்ற பாசமழை பொழிந்தாள். அவளுடைய பிஞ்சு மனதில் அத்தகைய ஆசையை அத்தைதான் வளர்த்துவிட்டிருந்தார். அது தவறு என்று நான் கூறமாட்டேன். உறவு விட்டுப்போகக்கூடாது என்று தொன்றுதொட்டு நம் சமுதாயத்தில் நிலவிவரும் ஒருவித கோட்பாடு இது. அத்தைக்கு தன்னுடைய அண்ணன் மகன் மருமகனாகவேண்டும் என்ற ஆசை. அதுபோன்றுதான் அம்மாவுக்கும் தன்னுடைய அண்ணன் மகள் உமாராணி மருமகளாக வரவேண்டும் என்று ஆவல்! இடையில் அப்பாவின் மனதில் என்ன உள்ளது என்பது யாருக்கும் […]
(மணிமாலா) எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற மாதம் பாராட்டுவிழா ஒன்று ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2015 இல் இந்த நிகழ்வு ரொறன்ரோ, 3300 மக்னிக்கல் அவென்யூவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசிய கீதத்தை செல்வி சாலினி மணிவண்ணனும், தமிழ் தாய் வாழ்த்தை […]
( 12 ) அடுத்த இரண்டாவது நாள் கண்ணனும், சுமதியும் நேருக்கு நேர் சந்திக்கத்தான் செய்தார்கள். நடந்தது எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ என்ற பயத்தில் அவளை நேரே காணக் கூசியவனாய்த் தயங்கி நின்றான் கண்ணன். கண நேரத்தில் ஏற்பட்ட அந்தத் தவறுக்காக என்னை நீ மன்னிச்சிடு. இனி ஜென்மத்துக்கும் அம்மாதிரி ஒண்ணும் நடக்காது. இது சத்தியம்…. அழாத குறையாய் அவளது விழிகளோடு கெஞ்சினான் கண்ணன். உங்களோட சரியும், தவறும் என்னோடுதான். மூன்றாவது நபருக்கு அதைத் தெரிய விடமாட்டேன். […]
AUSTRALIA NEWS: அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் – வாசிப்பு அனுபவப்பகிர்வு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 – 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neghbourhood House ( 36 – 42 Mackie Road, Mulgrave – Vic – 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் […]
முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில் உன் விளக்கங்கள் மறிதலிப்புக்கள் செலாவணிகளாய் இலக்காய்த் தென்படும் புள்ளிகள் வேகம் திசை யாவும் வசப்படுத்தும் வித்தை ரகசியமில்லை மௌனம் மனம் திறப்பு சொல்லாடல் தேர்வாகும் நொடி அந்தரங்கம்