குருட்ஷேத்திரம் 5 (விதுரரின் தராசு என்றும் நியாயத்தின் பக்கமே சாய்ந்தது)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 17 in the series 22 ஆகஸ்ட் 2021

 

 

 

விசித்திரவீர்யன் மரணமடையவே குருதேசத்துக்கு வாரிசில்லாமல் ஆனது. பீஷ்மரின் சிற்றன்னை பரிமளகந்தி தனது புதல்வனான வியாசனை அழைத்து சந்திர வம்சத்தை காப்பாற்றும்படி வேண்டுகிறாள். வியாசர் தனக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் பிறந்த மகனுக்கு விதுரன் என பெயரிட்டார். அவருக்கு ஏற்கனவே அம்பிகாவின் மூலமாக திருதராஷ்டிரனும், அம்பாலிகாவின் மூலமாக பாண்டுவும் பிறந்திருந்தனர். சத்ரிய வம்சத்தில் பிறந்ததால் திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் கிடைத்த அரசமகுடம் சூதன் என்பதால் விதுரருக்கு கிடைக்கவில்லை. பீஷ்மர் சாஸ்திர அறிவையும், அஸ்திர பயிற்சியையும் மூவருக்கும் ஒரே மாதிரியாக அளித்தாலும். விதுரருக்கு அமைச்சன் ஸ்தானத்தையே அளித்தார். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும், பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய அரசிளங்குமரிகளை மனைவியாக தேர்ந்தெடுத்த பீஷ்மர் விதுரருக்கு ஒரு பணிப்பெண்ணின் மகளையே தேர்ந்தெடுக்கிறார். சத்ரியர்கள் சூதப் பெண்களை மணந்து கொண்டனர் ஆனால் ஒரு சூதன் சத்ரியப் பெண்களை விவாகம் புரிந்ததாக எதிலும் நீங்கள் காண முடியாது.

 

பாண்டவர்களை ஒழித்துக்கட்ட சகுனி வகுத்த திட்டத்தை துரியோதனன் திருதராஷ்டிரனிடம் கூறுகிறான். பாசக்குருடனான திருதராஷ்டிரன் அத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தருகிறான். அதன்படி கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையேயான போட்டி பொறாமையைத் தவிர்க்க பாண்டவர்கள் வாரணாவதத்தில் தங்கி ஆட்சி புரியுமாறும் அவர்களுக்குத் துணையாக அமைச்சன் புரோசனனை அனுப்புவதாகவும் திருதராஷ்டிரன் கூறி கபட நாடகத்தை அரங்கேற்றுகிறான். யுதிஷ்டிரன் இந்த முடிவை ஏற்றுக்  கொண்டான். சதித்திட்டத்தை நிறைவேற்ற ஏதுவாக வாரணாவதத்தில் பாண்டவர்களை புரோசனன் அரக்கு மாளிகையில் தங்க வைக்கிறான். துரியோதனனின் சதியை முன்கூட்டியே அறிந்திருந்த விதுரர் அரக்கு மாளிகையை கட்டிய தச்சர்களில் ஒருவர் மூலம் பாண்டவர்கள் தப்பிக்க சுரங்கப்பாதையை அமைக்கச் சொல்லியிருந்தார். எந்த நேரத்திலும் அரக்கு மாளிகைக்கு தீ வைக்கப்படலாம் என்றும் தப்பிக்க சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பதையும் நம்பிக்கையான ஆள் மூலம் பீமனுக்கு தகவல் அனுப்பியிருந்தார் விதுரர்.

 

வேட்டுவச்சியும், ஐந்து வீரர்களும் அரக்கு மாளிகைக்கு தீ வைக்க ஒளிந்திருந்தனர். யாரும் எதிர்பார்க்காத வேளையில் பீமன் அரக்கு மாளிகைக்கு முன்கூட்டியே தீ வைத்துவிட்டு குந்தியையும், சகோதரர்களையும் சுரங்கம் வழியே அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதி வழியே தப்பினான். புரோசனனும், வேட்டுவச்சியும் அவளுடன் வந்த ஐந்து வீரர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடலைப் பார்த்து பாண்டவர்கள் இறந்துவிட்டதாகக் கருதி கெளரவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தர்மவான்களை சத்தியம் நிச்சயம் காக்கும் என்று விதுரர் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார். சத்தியத்தைக் காக்கும் பொருட்டு உயிரை துச்சமாக மதித்து நீதியை நிலைநாட்ட எவர் முன்வருவர்.

 

இந்திரப்பிரஸ்தம் நகரில் பாண்டவர்களால் கட்டப்பட்ட பளிங்கு மாளிகையை கண்டு வந்த பிறகு துரியோதனன் உறக்கமின்றி தவித்தான். முற்றத்தில் சற்றே தடுமாறிய போது திரெளபதி சிரித்த கேலிச் சிரிப்பொலி அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சகுனியின் திட்டப்படி அஸ்தினாபுரத்தில் மாளிகை கட்டப்பட்டது. மாளிகையை காண்பதற்கு பாண்டவர்களை அழைத்து தருமனை எப்படியாவது சூதாட்டத்துக்கு சம்மதிக்க வைப்பது, சகுனியுடன் சூதாடச் செய்து தந்திரத்தால் அவனது உடைமைகள் ஒவ்வொன்றையும் பணயப்பொருளாக வைத்து இழக்கச் செய்வது என்று வியூகம் வகுக்கப்பட்டது. யார் கூப்பிட்டால் பாண்டவர்களால் தட்டமுடியாது என்று உணர்ந்திருந்த துரியோதனன் விதுரரை அனுப்பும்படி திருதராஷ்டிரனைக் கேட்டுக் கொண்டான். தேள் கொட்டியது போல் இருந்தது விதுரருக்கு அவரால் அரசகட்டளையை மீற முடியவில்லை. சகுனியின் கையில் தான் ஒரு பகடைக்காயாகிவிட்டோமே என்ற கவலை இருந்தது விதுரருக்கு.

 

பாண்டவர்கள் வனவாசம் முடிந்து தங்களுக்கு சேர வேண்டிய பகுதிகளை கொடுக்கும்படி கெளரவர்களிடம் கண்ணனை தூது விட்டிருந்தனர். அஸ்தினாபுரம் வருகை தந்த கண்ணன் விதுரர் மாளிகையில் தங்கினான். மறுநாள் நடத்திய பேச்சு வார்த்தையில் துரியோதனன் எதற்கும் வளைந்து கொடுக்காததால் போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று கூறி புறப்பட்டான் கண்ணன். துரியோதனனின் கோபம் கண்ணனுக்கு விருந்தோம்பல் செய்த விதுரரிடம் திரும்பியது. உங்களின் பிறவிக் குணத்தைக் காட்டிவிட்டீர்கள் அல்லவா என்று விதுரர் ஒரு சூதன் என்பதை குத்திக் காட்டினான் துரியோதனன். கோபமடைந்த விதுரர் போரில் கெளரவர்களுக்காக வில்லேந்த மாட்டேன் என்று சொல்லி தனது கோதண்டத்தை இரண்டாக உடைத்துப் போட்டார். கெளரவர்கள் சபையில் அமைச்சராக இருந்தாலும் விதுரரின் நீதி என்றும் தர்மத்தின் பக்கமே இருந்தது.

 

டு, சகோதரர்கள் என அனைத்தையுமே சூதாட்டத்தில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். திரெளபதியை வைத்து ஆடேன் இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடலாம் என்று சகுனி ஆசைகாட்ட, திரெளபதியையும் வைத்து இழந்து தருமன் தலைகுனிந்து நிற்கிறான். இங்கே தலைகுனிந்து நிற்பது தருமன் மட்டுமல்ல நல்லவர்களுக்கு என்றுமே துணையாய் நிற்க வேண்டிய கடவுளும் தான்.

Series Navigationவிருட்சம்  117வது இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *