இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது முதலாவது நாவலும் நானும் மட்டுமானது வனசாட்சி ‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், […]
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என […]
தூக்கிப் போட்ட சிகரெட்டுக்காக கைதட்டத் துவங்கியதிலிருந்து ஊழலுக்கெதிராக போராடுபவர்களை நிராகரிக்கவும் குற்றங்களுக்கெதிரான தண்டனைகளை தவிர்த்துவிடபோராடவும் தானே கற்றுக் கொள்ளுகிறது பின்னவீனத்துவ சமூகக் குழந்தை இனப்பற்றுக் கான போராட்ட அடையாளம் மொழியைக் காப்பாற்றுவதில் தொடங்கி குற்றங்களுக்காதரவாக போராடுவது வரை நீளுகின்றது. உணர்வாளர்களை அறிவுத் தளத்தில் யோசிக்க விடாமலிருப்பதை முன்பெல்லாம் இந்தியாவை வெல்ல நினைத்தவர்கள் செய்தார்கள். இப்பொழுது நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கின்றோம் பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் தனித்த அடையாளங்களுக்காக பொதுமை நியாயங்களை நிராகரிப்பவர்கள்
திலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய இயந்திரமாய் பழக்கிய காலத்தில் நான் உனை காடுகளை முகரவும் தூரத்து ஆபத்தில் காலடிச் சுவட்டை வாசிக்கவும் காற்றில் மிதந்து வந்த தேனின் வாசத்தைப் பற்றிக் கொண்டு பூக்களிடம் சேகரிக்கவும் கற்பித்தவள் சிங்கங்களின் தேசம் முயல்களின் […]