Articles Posted by the Author:

 • வளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை

  வளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை

                                  முனைவர் ந. பாஸ்கரன் சிறுகதை, புதினம், கவிதை [மரபு, நவீனம்], கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருபவர் வளவ. துரையன். அவர் எழுதி இதுவரை வந்துள்ள நூல்களைப் பற்றிய பருந்துப் பார்வையாகும் இது. அவரின் முதல் நூல் “தாயம்மா” இது சிறுகதைத்தொகுப்பாகும். இதில் மொத்தம் 13 சிறுகதைகள் உள்ளன. ”தாயம்மா” ஒரு முக்கியமான கதை. அதுவே நூலின் பெயராக அமைக்கப்பட்டுள்ளது. ”தாயம்மா செத்துக் கிடந்தாள்” எனும் அமங்கலச் சொற்றொடருடன் கதை […]


 • களவு

  களவு

    குணா (எ) குணசேகரன் “காமம் காமம்” என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.       ஊருக்கு ஒரு தேர் தான். ஒருத்திக்கு ஒருவன் தான். மாறு பட்டால்…   கள்ளத்தோணி ஏறி கரை தேடி வந்த போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்ததுவோ, இல்லை அவளும் நோக்கி இருந்ததுவோ அவனுக்கு அவள் மேல் […]


 • வானவில் (இதழ் 121)

  வானவில் (இதழ் 121)

  வானவில்‘ 11வது ஆண்டில் VAANAVIL issue 121 – January  2021 has been released and is now available for download at the link below. 2021 ஆண்டு தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 121) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். வானவில் இதழின் முகநூல் பக்கம்: வானவில் ‘Vaanavil’ […]


 • கடலோரம் வாங்கிய காற்று

  கடலோரம் வாங்கிய காற்று

  குணா (எ) குணசேகரன் அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் மயில் கண் அன்ன மாண் முடிப்பாவை நுண் வலைப் பரதவர் மடமகள் கண் வலைப் படூஉம் கானலானே மூத்தகுடி சொல்லிக் கேட்டதில்லை காதல் இல்லையென்று, காதல் நடந்ததில்லையென்று, காதலைக் கண்டதில்லையென்று. நாம் நடந்த பாதையிலே நல்லதுவோ கெட்டதுவோ ஐம்புலனும் உணர்வதும் மெய்தானே. நேரம் ஒரு பொருட்டல்ல, […]


 • கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி

  அழகியசிங்கர்           நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை.  இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது.  ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை.  ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன்.  என்னால் எதை ரசிக்க முடிகிறது என்று வரிசைப்படுத்த விரும்புகிறேன்.           அதே சமயத்தில் விட்டுப்போன கவிதைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்று தோன்றுகிறது.           மணல்வீடு பதிப்பகம் சிறப்பாகக் கொண்டு வந்த “பூஜ்ய விலாசம்” என்ற நெகிழன் கவிதைத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் பல […]


 • தேன்மாவு : மூலம்  : வைக்கம் முகமது பஷீர்

  தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்

  மொழி பெயர்ப்பு : மலையாள மொழி சிறுகதை மூலம்   : வைக்கம் முகமது பஷீர் ஆங்கிலம் : மினிஸ்தி நாயர் தமிழில்  :தி.இரா.மீனா                           “நீங்கள் கேள்விப்பட்டிருப்பது  எல்லாமே முட்டாள்தனமானது .நான் எந்த மரத்தையும் பூஜிக்கவில்லை;இயற்கையையும் வழிபடுவதில்லை.ஆனால் இந்த மாமரத்தோடு எனக்குத் தனியான நெருக்கமிருக்கிறது.என் மனைவி அஸ்மாவுக்கும் கூட.விதிவிலக்கான ஒரு பெருமுயற்சியின் அடையாள வில்லைதான் இந்த மரம்.அதை நான் நுட்பமாகச் சொல்கிறேன்…” நாங்கள் அந்த மாமரத்தினடியில் உட்கார்ந்தோம்.அது மாங்கனிகளால் நிறைந்திருந்தது.சுற்றிலும் பெரிய வட்டமாக வெள்ளை மணல் பரவி […]


 • ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!

  ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!

  ஜெ.பாஸ்கரன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்திருந்த எழுத்தாளர் ஆர் சூடாமணி – அவரது படைப்புகள் இன்றைக்கும் வாசிப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வுகள் அதே வீச்சுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பது, அவரது காலம் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும் எழுத்துக்கும், சமூக சிந்தனைகளுக்கும் சான்றாகும். இறந்து போன பாட்டியின் பேத்தி ஶ்ரீமதியின் பார்வையில் சொல்லப்படுகிறது கதை – பாட்டி இறந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது – தாத்தா அழவே இல்லை – […]


 • ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்

  ஒரு கதை ஒரு கருத்து – ஆர்.சூடாமணியின் நாகலிங்க மரம்

  அழகியசிங்கர்           கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை.             நான் மதிக்கும் பெண் எழுத்தாளர்களில் ஆர்.சூடாமணி ஒருவர்.  இலக்கியத் தரமான எழுத்து  வெகு ஜன எழுத்து என்று இரண்டு பிரிவுகள் தமிழில் உண்டு.            இலக்கியத் தரமான கதைகளைக் கவனத்துடன் படிக்க வேண்டும். பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலும் வெகு ஜன வாசிப்பு எழுத்தாளர்கள்தான்.             இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் கதைகளை எடுத்துப் படித்துவிட்டுத் தூக்கிப் போட வேண்டியதுதான். அதனால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை.  இன்னொரு முறை படிக்கவேண்டுமென்ற எண்ணமும் ஏற்படப்போவதில்லை.           ஆர்.சூடாமணியின் […]


 • மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

  மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [ Sara Teasdale ] தமிழில் :தி.இரா.மீனா எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும் ரோகிணி, திருவோணம் என்று நட்சத்திரங்களை அவற்றின் பெயர் கொண்டு எனக்குத் தெரியும் சொர்க்கத்தின் அகன்ற படிக்கட்டில் அவைகள் போகும் பாதை எனக்குத் தெரியும். ஆண்களின் கண் பார்வையிலிருந்து அவர்களின் ரகசியங்கள் எனக்குத் தெரியும் அவர்களின் தெளிவற்ற, விசித்திர எண்ணங்கள் சோகமும் விவேகமும் உடையவளாக என்னை உருவாக்கியிருக்கின்றன ஆனால் உன் கண்கள் என்னை அழைப்பதாகத் தெரிந்தபோதும்– அவை […]


 • பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்)

  ஜெ.பாஸ்கரன் பால்யகால சகி  – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில்: குளச்சல் மு.யூசுப்) காலச்சுவடு பதிப்பகம். “ அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பலதரப்பட்ட மனித உள்ளங்களின் துடிப்புகள் தெளிவாக ஒலித்துக்கொண்டிருக்கும். மேல் நாட்டு இலக்கியத்தோடு ஒப்புவமை கூற  எங்களுக்கோர் பஷீர் இருக்கிறார் என மலையாள இலக்கியம் அபிமானம் கொள்கிறது “ என்னும் ஆ.மாதவனின் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை! ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்தக் குறுநாவல், இன்றும் உயிர்த்துடிப்புடன் இருப்பது பஷீர் என்னும் ஆளுமையின் எழுத்தின் வசீகரம் என்றால் […]