மாமியார் வீடு

This entry is part 5 of 37 in the series 22 ஜூலை 2012

(திருமதி ஒல்கா அவர்களின் “அத்தில்லு ” என்ற சிறுகதையை ‘மாமியார் வீடு” என்ற தலைப்பில் அனுப்பி உள்ளேன். ஒல்கா வின் புகைப்படத்தை இணைத்துள்ளேன். ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தொடர் திண்ணையில் வெளிவந்துள்ளது, ஒல்காவின் படைப்புதான்.) தெலுங்கு மூலம் : ஓல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் மின் அஞ்சல் : tkgowri@gmail.com இப்போதுதான் செய்தி வந்தது, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று அனுப்பி விடுவார்கள் என்று. சுதந்திர தினத்தன்று எனக்கு சுதந்திரம். சிறுவயதில் பார்த்த வண்ண வண்ண […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35

This entry is part 4 of 37 in the series 22 ஜூலை 2012

40.     மகன் சிக்கம நாயக்கனா, கிருஷ்ணப்ப நாயக்கரா யாரை குற்றம் சொல்வது, ஏதோவொரு அமானுஷ்ய சக்தி ஜீவனுள்ள பொம்மைகளைக்கொண்டு காட்சிகளாக நகர்த்துகிறது. கடந்த சில தினங்களாக தெற்கே யுத்தமென்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் கொலைகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும், காட்டு விலங்குகளைப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக வெட்டிமடிவதற்கும் ராஜகிரிபோல, தில்லை கூத்தபிரான்போல, காவற்காட்டு மரங்களைப்போல இவளுமொரு ஊமை சாட்சி. பசியால் வாடும் வீரர்கள் மீது கடும் வெயிலும் தாக்குதலை நடத்துகிறது. வீரர்களில் பலர் கூர் மழுங்கிய வேல்களை ஏந்தியிருந்தனர்.  உடைந்த […]

விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 42 of 42 in the series 22 மே 2011

    1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]

இழப்பு

This entry is part 31 of 32 in the series 15 ஜூலை 2012

நிலாவண்ணன் எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு ஏழூருக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி தன் இசைக்கருவியிவின் நாதத்தில் ஆழ்ந்து போனார். “ஏம்பா உங்களுக்கு […]

பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்

This entry is part 30 of 32 in the series 15 ஜூலை 2012

சமயோசித புத்தியற்ற குயவன்   ஒரு ஊரில் ஒரு குயவனிருந்தான். அவன் ஒரு சமயம் கவனமில்லாமல் வெகு வேகமாக ஓடி கூர்மையான நுனி உடைய ஒரு உடைந்த பாத்திரத்தின் மேல் விழுந்தான். அதன் கூரிய நுனி அவனுடைய நெற்றிக்கட்டை நன்கு கிழித்து விட்டது. ரத்தத்தினால் நனைந்த உடலுடன் எப்படியோ எழுந்திருந்தான். பிறகு சரியாக அதற்கு வைத்தியம் செய்யாததால் அந்தக் கூர்மையான அடி கோடுமான பெரிய வடுவாக ஆகிவிட்டது.   ஒரு சமயம் ஊர் பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டபொழுது பசியால் […]

உய்குர் இனக்கதைகள் (2)

This entry is part 28 of 32 in the series 15 ஜூலை 2012

3. எப்போது எண்ணலாம்? மதியாளன் மிகவும் செல்வந்தராக இருந்த காலம். எல்லோரும் அவருடைய நெருங்கிய நண்பர்களாக ஆக வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டு, போட்டா போட்டி போட்டிக் கொண்டு, அவருடைய நட்பு வட்டாரத்தில் இருக்க விருப்பினர். அப்போது ஒரு நாள், ஒருவர் அவரிடம், “நசிர்தின்.. அப்பப்பா.. எத்தனை நண்பர்கள்? உங்களால் அவர்கள் எல்லோரையும் எண்ணிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். முடியாது என்பதை தலையை ஆட்டிக் காட்டி விட்டு, “எண்ணுவதா? எல்லோரையுமா? இப்போதைக்கு அது சாத்தியமில்லை. […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு

This entry is part 26 of 32 in the series 15 ஜூலை 2012

இரா.முருகன் 1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து கொண்டு இருக்கிறாள். இருட்டு தான் எங்கேயும். அது விலகி சூரியோதயம் ஆகிறதுக்கு ரொம்ப நேரம் செல்லும். வெளிச்சத்துக்காக சத்திரத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. போயே ஆக வேண்டும். போய்க் கொண்டிருக்கிறாள். பகவதிப் பொண்ணே, வேண்டாம்டி, சொன்னாக் கேளு. திரும்பிடலாம் வா. ஆம்பிளைகள் இல்லாம இப்படி புலர்ச்சை வேளையில் தனியா எங்கேயும் போகண்டா, […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34

This entry is part 24 of 32 in the series 15 ஜூலை 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா 39. பிள்ளை மனம் குழப்பத்தில் இருந்தது. கிருஷ்ணபுரத்தில் நாளைய தினம் எதுவும் நடக்கலாமென்ற நிலை. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயநகரத்தில் ஏற்பட்டிருருந்த தலைகீழ் மாற்றம், பேரரசின் கீழிருந்த சிற்றசர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. விஜயநகர சாம்ராச்சியத்தை உரிமைகோரி, இரு அணிகள் மோதிக்கொள்ளும் நிலமை உருவாகியிருந்தது. மன்னர் வெங்கடபதியாருக்குப்பின் விஜய நகர சாம்ராச்சியம் வேறொருவர் கைக்குப் போகக் கூடாதென்றெண்ணி அவருடைய மூத்ததாரமும் கோபுரி வம்சாவளியைச் சேர்ந்தவளுமான வையாம்பிகாவும் அவள் சகோதரர் ஜெகராயரும் எங்கோ பிறந்த சிக்கமராயனை […]

100 கிலோ நினைவுகள்

This entry is part 22 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை – இராம வயிரவன் —————————- ‘நண்பா…சாரி டு டிஸ்டப் யு. நாலுநாள் ஹாலிடே வருதுல்ல. ஜென்ட்டிங் போலாமுன்னு கெளம்பியாச்சு. எல்லாம் அந்த லதாவின் ஏற்பாடு. ரெண்டுநாள் அங்கே தங்கப்போறோம். ரூம் எல்லாம் அவளே புக் பண்ணிட்டா..யாராவது என்னை கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க… ரொம்பத்தொந்தரவு பண்ணினாச்செத்துட்டான்னு சொல்லிடுங்க..நண்பா!..வர்ட்டா…? என்ஜாய்னு சொல்லி வாழ்த்தி அனுப்புங்க நண்பா!…’ நவீன் என்னை வாழ்த்தச் சொல்லிக் கேட்டபோது வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி. சற்று முன்னர்தான் கடின உழைப்புக்குப் பிறகு கட்டையை நீட்டிக் […]

பொன்னாத்தா அம்படவேயில்ல…

This entry is part 20 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை ஜாசின் ஏ.தேவராஜன் 12.3.1970 மத்தியானம் ரெண்டு மணிக்கப்புறம் காலம்பரவே எஸ்டேட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குக் களம்பிக்கிட்டிருத்திச்சிங்க. ஸ்கூலுன்னா கெரவல் கல்லு சடக்குல கித்தா காட்டு வளியா நாலு மைலு தாண்டிதான் பக்கத்து எஸ்டேட்டுக்குப் போணும் வரணும்.அது பெரிய எஸ்டேட்டு.எடையில அசாப்புக் கொட்டா, அதான் குப்ப எரிக்கிற கூண்டு. கூண்டுக்கு மேலா போங்காவா பெரிய ஓட்ட. அதுக்குள்ளாறதான் குப்பைய கொட்டுவாரு பரமேசு தாத்தா. அவரு ஒரு வயசான தனி ஆளு. அவருக்குன்னு எளுதி வச்ச மாரி இந்தியாவிலர்ந்து நாப்பது […]