பொறுப்பு – சிறுகதை

This entry is part 26 of 35 in the series 29 ஜூலை 2012

வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்த‌து தெரிந்த‌து. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள். “ஹாய், ரவி” “ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க?” […]

விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு

This entry is part 25 of 35 in the series 29 ஜூலை 2012

1939 ஜனவரி 29 வெகுதான்ய தை 16 ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழை ரயிலடியே அதிசயித்து நிற்க நடேசன் ரயிலேறினார். யாராக்கும் புள்ளிக்காரன், ராஷ்ட்ரியக் காரனோ, மதராஸியிலே வல்ல சம்மேளனம் ஏதும் ஒத்து சேரும் பரிபாடியோ? அம்பலப்புழ நீலன் வக்கீலோட குமஸ்தன். வக்கீல் குமஸ்தன்மாரே, வரூ, நமக்கும் உக்ரனாயிட்டு ஒரு ஹர்த்தால் நடத்தலாம் என்று அஜெண்டா குறிச்சு ஆளனுப்பி வரவழைத்திருப்பார்கள். பாண்டிப் பிரதேச ஜனங்களுக்கு இதெல்லாம் சுபாவத்தில் இல்லாத விஷயம். இங்கே இருந்து அங்கே ஒண்ணும் ரெண்டுமாகப் போய்ச் சேர்ந்த […]

பஞ்சதந்திரம் தொடர் 54

This entry is part 24 of 35 in the series 29 ஜூலை 2012

முட்டாளுக்குச் செய்த உபதேசம் ‘’ஏதோ ஒரு காட்டில் மரக்கிளையில் கூட்டைக் கட்டிக்கொண்டு ஒரு பக்ஷ¢ தம்பதிகள் வசித்து வந்தன. ஒரு சமயம் தை மாதத்தில் காலமற்ற காலத்தில் பெய்த மழையில் நனைந்து இளம் காற்றினால் உடல் நடுங்கிய ஏதோ ஒரு குரங்கு அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தது. பற்கள் வீணை வாசித்துக் கொண்டு, மிகவும் பரிதாபகரமாக கைகளையும் கால்களையும் ஒடுக்கிக்கொண்டு இருக்கும் அதனிடம் பெண் குருவி இரக்கத்துடன் சொல்லிற்று: கால்களையும் கைகளையும் பார்த்தால் மனிதனுக்கு இருப்பது போலிருக்கிறது. […]

முள்வெளி அத்தியாயம் -19

This entry is part 19 of 35 in the series 29 ஜூலை 2012

மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல பத்திரிக்கைகள் மருத்துவர் எழுதும் மனநலம் பற்றியவை. ஒரு ‘ஃபிலிம் ஃபேரோ’ , ‘ஃபேஷன் மேகஸைனோ’ இல்லை. ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக அந்த ஆள் […]

ஜிக்கி

This entry is part 16 of 35 in the series 29 ஜூலை 2012

அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று சனிக்கிழமை. இப்போது போல், பள்ளிகளில் சனிக்கிழமைகளில் எல்லாம் பள்ளிக்கூடத்தைத் திறந்து வைத்துக் கொடுமை பண்ணியதில்லை. அப்பா என்னைக் கூப்பிட்டு, டேய்… மூர்த்தி அப்பா என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா …. இங்க பாரு, அழகான நாய்க்குட்டி!. இப்பொழுது எனக்கு இருபத்தெட்டு வயதாகிறது. இதுவரையிலும் அப்பா, எனக்கு வாங்கிக் கொடுத்தவை எத்தனையோ இருக்கும். அத்தனையையும் விஞ்சி, ஜிக்கி மட்டும் என்னை பலமுறை நினைவுக்குள் கொண்டு செல்கிறான். அது ஒருவேளை ஜிக்கியைத் […]

கசந்த….லட்டு….!

This entry is part 9 of 35 in the series 29 ஜூலை 2012

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம். இன்னைக்கு என்ன அதிசயம்….?  மழை கொட்டோ…..கொட்டுன்னு கொட்டப் போகுது, அங்க பாருங்க…நாடகத்தை….என்று ..பல்லைக் கடித்துக் கொண்டு ரகசியமாகக் கண்ணைக் காண்பித்துச் சொன்ன பியூன் செல்வராசைத் தொடர்ந்து சுற்றியிருந்த  அத்தனை பேர்  அதிசயக் கண்களும் அவன் சொன்ன திசைநோக்கித் திரும்பின. “அடடா…..எச்சில் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டானே…இந்தக் கடைஞ்செடுத்த  கஞ்சன்..கணக்கன்..! இன்னைக்கு என்ன.. சிடுமூஞ்சியில் இத்தனை சிரிப்பு…!  கொடைக் கர்ணன் வேஷம்  போட்டு  என்னைக்கும் இல்லாத திருநாளா… ஒவ்வொருவருக்கும் லட்டு தானம் பண்ணராரே….காணக் கண் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5

This entry is part 8 of 35 in the series 29 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

பரிணாமம் (சிறுகதை)

This entry is part 2 of 35 in the series 29 ஜூலை 2012

தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் ‘சுளீர், சுளீர்’ என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம்பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. அவன் மனைவி ‘உர்ர்ர், உர்ர்ர்’ எனத்தேய்த்துக் கொண்டிருந்த உருமிமேளம் அந்த நிகழ்வை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தது. கூட்டம் வேடிக்கை பார்த்து விட்டுப் போய்க்கொண்டே இருந்தது. அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் ஜெகனும் ஒருவன். ஜெகனுக்கு நமக்கென்ன என்று சும்மா பார்த்துக் கொண்டிருக்கமுடியவில்லை. அவன் அடித்துக் கொள்கிற ஒவ்வொரு சாட்டையடியும் ஜெகனின் மனத்தில் அடிப்பதாக இருந்தது. […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36

This entry is part 14 of 35 in the series 29 ஜூலை 2012

42. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய நகர சாம்ராச்சியத்தை உலுக்கிய உள்நாட்டு பிரச்சினை முடிவுக்கு வந்ததைப்போல தெரிகிறது. கிருஷ்ணபுர படை எறும்பு கூட்டத்தில் தீக்கங்கு விழுந்ததுபோல சிதறி ஓடுகின்றது. ஆளுயர புரவியொன்றில் இரகுநாதநாய்க்கர் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ஆழம்குறைந்திருக்குமென நம்பப்பட்ட கொள்ளிட நதியின் நீர்ப்பரப்பைத் தேடி நடந்தும் நீந்தியும் அவரது படைகள் பின் தொடர்வதையும் அவதானித்தாள். குதிரைகளின் அடிவயிற்றை எந்தி வெருட்ட அவை நுரையொழுக முன்கால்களை வதைத்துக்கொண்டு பரபரப்பதும்; ஆற்றை நெருங்க யோசித்து துதிக்கையை உயர்த்தி பின்னர் பெரும் […]

விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 37 of 37 in the series 22 ஜூலை 2012

இரா.முருகன்   1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]