பொன்னாத்தா அம்படவேயில்ல…

This entry is part 20 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை ஜாசின் ஏ.தேவராஜன் 12.3.1970 மத்தியானம் ரெண்டு மணிக்கப்புறம் காலம்பரவே எஸ்டேட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குக் களம்பிக்கிட்டிருத்திச்சிங்க. ஸ்கூலுன்னா கெரவல் கல்லு சடக்குல கித்தா காட்டு வளியா நாலு மைலு தாண்டிதான் பக்கத்து எஸ்டேட்டுக்குப் போணும் வரணும்.அது பெரிய எஸ்டேட்டு.எடையில அசாப்புக் கொட்டா, அதான் குப்ப எரிக்கிற கூண்டு. கூண்டுக்கு மேலா போங்காவா பெரிய ஓட்ட. அதுக்குள்ளாறதான் குப்பைய கொட்டுவாரு பரமேசு தாத்தா. அவரு ஒரு வயசான தனி ஆளு. அவருக்குன்னு எளுதி வச்ச மாரி இந்தியாவிலர்ந்து நாப்பது […]

முள்வெளி அத்தியாயம் -17

This entry is part 14 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன் மதியம் மணி இரண்டு. கிருட்டினன் கவிதையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த கவிஞனான அவனுக்குத் தன் படைப்புகளை யாரும் தன் எதிரில் படிப்பது வரவேற்கத் தக்கதல்ல. தனது அருகாமையின் கட்டாயத்தால் தான் அவர்கள் படிக்கிற மாதிரி ஒரு தோற்றம் வந்து விடுகிறது. கண்படாமல் மேம்போக்காகப் படித்து விட்டுப் பிறகு ‘நன்றாக இருக்கிறது’ என்னும் வெற்று இரு வார்த்தைகளால் உற்சாக கர்வத்தைத் தகர்ப்பதே தேவலாம். கிருட்டினன் தமது வீட்டு வரவேற்பறையில் நடத்தும் இலக்கிய அமர்வுகளில் கவனம் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3

This entry is part 12 of 32 in the series 15 ஜூலை 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்)  அங்கம் -2 பாகம் -3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் […]

சிறிய பொருள் என்றாலும்…

This entry is part 8 of 32 in the series 15 ஜூலை 2012

கோமதி நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். என் வேலைகளின் நடுவில் நேரமேயில்லை. அதனால் எனக்கு எந்தச் சிற்றுண்டி சாப்பிடும்போதும் என் வித்யாவின் தோசையே மனதில் நின்றது. கண்ணன் பாட்டில் சொல்வார்களே, ‘பஞ்சுபோல் தோசைவார்த்து அஞ்சு தோசை வைத்து அதன்மேல் வெண்ணெய் வைத்து”, என்று. அப்படி அருமையாக வித்யா தோசை வார்ப்பாள். நான் மறுபடி ஊருக்குப் போகக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். […]

லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

This entry is part 4 of 32 in the series 15 ஜூலை 2012

ஆங்கிலம் வழி தமிழில்: ராகவன் தம்பி பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் கிழித்துப் போடப்பட்ட இதயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்கள் மனிதர்கள். ஒவ்வொரு தெருவிலும் சிறிய சந்து பொந்துகளில் கூட மறுவாழ்வுக் கமிட்டியை அமைத்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் உற்சாகத்துடன் வேலைகள் நடந்தன. பணி வாய்ப்பு முகாம்கள் வழியாக அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அகதிகளை பண்ணை நிலங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஆனால் […]

எனக்கு வந்த கடிதம்

This entry is part 3 of 32 in the series 15 ஜூலை 2012

ரமணி திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி உணவு சாலையில் வேலையில் இருந்தார். நல்ல வெங்கலக்குரல் அவருக்கு. தள்ளித் தள்ளி நட்டுவைத்த மரங்கள் போல சில பற்கள் மாத்திரம் இருக்கும் அவர் வாய்க்குள். எப்போது அவர் பொன்மலைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எங்களுக்கு ஏதாவது தின்பதற்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ” மாவு மில் மாதிரி என்னடா வாய் அரைச்சுண்டே இருக்கு ” என்று […]

மீளாத பிருந்தாவனம்..!

This entry is part 1 of 32 in the series 15 ஜூலை 2012

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம், சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும் கூடவே வந்ததும், அலுப்பு தான் வந்தது அவருக்கு….நாலு தூத்தல் போட்டால் போதும் கரண்டுல கையை வைக்க இவங்களுக்கு ஒரு சாக்கு…..என்று அங்கலாய்தபடியே….வாசல் கதைவத் திறந்தார். இதமான குளிர்காற்று லேசான சாரலோடு முகத்தைத் தடவியது.சூரியன் மேகத்தை […]

பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்

This entry is part 41 of 41 in the series 8 ஜூலை 2012

ஏதோ ஒரு கிணற்றில் கங்கதத்தன் என்ற பெயருடைய தவளையரசன் இருந்தது. அது ஒருநாள் தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, கிணற்றில் தொங்கிய வாளியில் ஏறி படிப்படியாக வெளியே வந்து சேர்ந்தது. ‘’இந்த உறவினர்களுக்கு தீங்கு செய்வதற்கு என்ன வழி? ஆபத்து வந்தபோது உதவி புரிகிறவனுக்கும், கஷ்ட தசையை எள்ளி நகையாடுகிறவனுக்கும் உதவி புரிந்தால் மனிதன் மறுபிறப்புப் பெறுகிறான். என்றொரு பழமொழி உண்டு என்று எண்ணமிட்டது. இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் நுழைவதைத் தவளையரசன் பார்த்துவிட்டது. அதைக் கண்டதும் […]

சுப்புமணியும் சீஜிலும்

This entry is part 40 of 41 in the series 8 ஜூலை 2012

  ஜாசின் ஏ.தேவராஜன்     (குறிப்பு: இக்கதை மலேசியத் தமிழ் இளந்தையர்களின் விளிம்புநிலை கூட்டத்தாரின் பேச்சு மொழியில் சொல்லப்பட்டது. தளச்சூழலில் தமிழும் மலாயும் கலந்து பேசுகின்ற நிலை வெகுநாட்கள் புழக்கத்தில் உள்ளன. பின்வரும் சொற்கள் வாசகர்களின் புரிதலுக்காக வழங்குகிறேன். சீஜில்- சான்றிதழ், பெர்ஹிம்புனான் – பள்ளியில் மாணவர் சபை கூடல், ஹரி அனுகெராஹ் செமெர்லாங்- விருதளிப்பு நாள், துங்கு டுலு- முதலில் காத்திரு, ஜபாத்தான் – (கல்வி) இலாகா, எஸ்.பி.எம் – 17/18 வயதில் அமரும் […]

புள்ளியில் விரியும் வானம்

This entry is part 39 of 41 in the series 8 ஜூலை 2012

புதிய கம்பெனியில் முதல்நாள் அனுபவம். உற்சாகத்துக்குக் குறைவு இல்லை. வேலை எனச் சேர்ந்தவர்களே வெவ்வேறு ஊர்க்காரர்கள். புதிய பாஷைக்காரர்கள். ஆனால் எல்லாருமே தாய்மொழியை விட ஆங்கிலம் அதிகமாகவும், நன்றாகவும் பேசினார்கள். ஒரே பாஷைக்காரர்களே கூட தங்களுக்குள் ஆங்கிலம் பேசிக்கொள்ளவே விரும்பினார்கள். மணிவண்ணனுக்குத்தான் என்னமோ தாய்மொழி என்று, அதில் தான் சரியாக ஊட்டம் பெறவில்லை என்று இருந்தது. தமிழ்பேசும் இன்னொரு புதியவனைப் பார்த்ததும் என்னமோ மனசு இளகிக் கொடுத்தாப் போலிருந்தது. ஆனால் மற்றவன் இவனது எல்லா தமிழ்க் கேள்விக்கும் […]