சூளாமணியில் சமயக் ​​கொள்​கையும் நிமித்தமும்

This entry is part 18 of 28 in the series 10 மார்ச் 2013

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com தமிழில் ​தோன்றிய காப்பியர்களில் குறிப்பிடத்தக்க காப்பியம் சூளாமணியாகும், ​​சிலம்பு, ​மேக​லை, சிந்தாமணி என்ப​தைத் ​​தொடர்ந்து இக்காப்பியமும் பெண்களின் த​லையில் அணிந்து ​​கொள்ளும் அணிகலனின் ​பெயரில் அ​மைந்திருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது. சமண சமயக் கருத்துக்க​ளைக் கூறும் இக்காப்பியம் சு​வைபட அ​மைந்து கற்பாற்கு இன்பமளிக்கின்றது. சூளாமணி -​​பெயர்க்காரணம் சூளாமணிக் காப்பியம் தோலாமொழித் தேவர் இயற்றியதாகும். இதன் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகும் (கி.பி. 925-950). காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி […]

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 17 of 28 in the series 10 மார்ச் 2013

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத […]

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (14)

This entry is part 12 of 28 in the series 10 மார்ச் 2013

வாலிகையும் நுரையும் (14)   பவள சங்கரி   பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல.   பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை: ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக் காட்டிலும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவே உள்ளது.   உம் முன்னால் தெளிவானதொரு கண்ணாடியாக யாம் நிற்கும் தருணம், நீவிர் எம்மை உறுத்துப் பார்த்து உம் உருவத்தையேக் கண்டீர் ஆங்கே… பின் நீவிர், “யான் உம்மை விரும்புகிறேன்” […]

லங்காட் நதிக்கரையில்…

This entry is part 10 of 28 in the series 10 மார்ச் 2013

சுப்ரபாரதிமணியன் திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக் கழிவுகளும் ஓடும் ஜம்மனை பாலம், முனிசிபல் வீதி என்று பிரதான சாலைகளைக் காட்டுவேன். மறைந்து போன நதி பற்றி இரங்கலாய் சில வார்த்தைகள் சொல்வார்கள். மலேசியாவில் லங்காட் நதியைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற ஆசை மலேசிய எழுத்தாளர் ரங்கசாமியின் லங்காட் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.

This entry is part 9 of 28 in the series 10 மார்ச் 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’. வே.சபாநாயகம். கீத் மில்லர் சொல்கிறார், “உண்மையான கதைகளை எழுத வேண்டாம். யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்”. அப்படித்தான் இந்தக் கதைகளும். எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசகம் கலக்கப்பட்டவைதான். கீத்மில்லர் சொன்னதுபோல் உண்மைச் சம்பவங்களை எழுதினால் யார் நம்பப்போகிறார்கள்? நாலு வருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை. ஆப்பிரிக்கா, கனடா, பொஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், […]

திருக்குறளில் ‘இயமம் நியமம்’

This entry is part 31 of 33 in the series 3 மார்ச் 2013

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இவ்யோகக் கலையாகும். விலங்கு போன்று வாழ்ந்த மனிதன் ஒவ்வொரு படிநிலையினையும் கடந்து இன்றுள்ள பண்பட்ட நிலைக்கு உயர்ந்துள்ளான். தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயருவதற்கு இவ்யோகநெிறயைக் கண்டறிந்து அதனைக் கைக்கொண்டான். இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோகநெறிகள் பலவாகும். […]

தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்

This entry is part 30 of 33 in the series 3 மார்ச் 2013

து.ரேணுகாதேவி முனைவர் பட்ட ஆய்வாளர் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஒருவர் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே வரையின், அது தன்வரலாறு எனப்படும். ‘ஒரு தனிமனிதனின் வரலாறு அவனால் எழுதப்படும் அளவு முழுமையோடும் உண்மையோடும் வேறு எவராலும் எழுதப்படமுடியாது’ என்கிறார் டாக்டர்.ஜான்சன். (ப.66) தன்வரலாறுகள் வழிப் பதிவாகியுள்ள தீண்டாமை, அடிமை நிலை, மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மனித இன்னல்கள் ஆகியவற்றை இவ்வாய்வானது எடுத்தியம்புகிறது. மஹர்களின் அடிமைநிலை மஹாராஷ்டிராவில் உள்ள சடாரா என்னும் சிறுநகரத்திலுள்ள பால்தானைச் […]

வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்

This entry is part 19 of 33 in the series 3 மார்ச் 2013

     முனைவர்,ப,தமிழ்ப்பாவை                               துணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை                   _ஜீ,வி,ஜீ,விசாலாட்சி மகளிர் கல்லூரி(தன்னாட்சி)                                     உடுமலைப்பேட்டை,     தமிழ் இதழியல் வரலாறு என்பது கி,பி, 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வந்துள்ளது,  இடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள் தோன்றியவண்ணமும் மறைந்தவண்ணமுமாக உள்ளன,  1842 தொடங்கி இன்றுவரை 3000 க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன,  இவற்றுள் தமிழ் இதழ்கள் 2500 க்கும் மேற்பட்டன (தமிழ் இதழியல் வரலாறு(1842-1950). ரோஜா முத்தையா நூலகத்தரவுகள்), இவ்விதழ்கள். சிற்றிதழ். […]

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?

This entry is part 11 of 33 in the series 3 மார்ச் 2013

நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல்  போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம்.   அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல்  படித்து ரசித்திருக்கிறோம். இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும் கதை சொல்லி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று நகரங்களில் வாழும் ஏன் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கூட கல்வியைத் தாண்டி ஏதும் சிந்திக்க முடியவில்லை. கதை சொல்லும் தாத்தா பாட்டிகளும் அம்மா அப்பாக்களும் அருகி விட்டார்கள். […]

சிலம்பில் அவல உத்தி

This entry is part 23 of 26 in the series 24 பிப்ரவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நிகழும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. மனித மனம் இன்பத்தை மட்டுமே விரும்புகின்றது. அம்மனம் துன்பத்தைச் சந்திக்கும்போது துவண்டு போகின்றது. மனிதன் துன்பத்தில் உழலுகின்றபோது தன்னை இழந்துவிடுகின்றான். துன்ப முடிவினைக் கொண்டு முடியும் உலக இலக்கியங்கள் மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கின்றன. உலகின் மிகச்சிறந்த அவலக் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இக்காப்பியத்தில் அமைந்திருக்கும் அவலம்போன்று வேறு […]