NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

This entry is part 25 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  மனக்குகை ஓவியங்கள் :சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள் இரு சம்பவங்கள் 1. சகுனி கோபப்பட்டதாக பாரதத்தில் சொல்லப்படவில்லை. பொதுபுத்தியில் சகுனி மோசமானவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளான்…. இன்றைய ஆப்கானிஸ்தான் அன்றைய காந்தாரம்., காந்தாரி என்பவள் அவர்களுக்கு குலதெயவம். பிதா மகன் பீஸ்மர்.  பீதாம்பரங்களையும் வைர வைடூரியங்களையும்  காட்டி குருடனுக்கு காந்தாரியை இல்லத்தரசியாக்கினான்..அவர்கள் குல தெயவ வழிபாட்டில் உறுதியானவர்கள், ஆகவே ஆட்டை நிறுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள். இதை அறிந்த பிதாமகன் தன்னுடைய பெரும் படையை  அனுப்பி காந்தார நாட்டு […]

சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்

This entry is part 8 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

  எனக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று…நிலாநிழல் !  இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய்  வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன்.   கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் […]

வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதி

This entry is part 30 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்த்து..குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும்,கொங்கு வட்டாரப் பிரயோகம் […]

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

This entry is part 29 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’ The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது. 1. Nightwood – Djuna Barnes. 2. A tale of a Tub – Jonathan swift 3. The Phenomenology of the sprit -G.F. Hegel 4. to […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25

This entry is part 25 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.   ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்றோ பார்த்து பாதிக்கப்பட்ட உணர்வுகள் இதயத்தில் ஆழமாகப் புதைந்து தங்கிவிடுகின்றன. அதன் எதிரொலி பிற்காலத்தில் வரலாம் அல்லது வராமலும் போகலாம். கல்லூரிப் படிப்பை முடிக்கவும் படித்த பள்ளியிலேயே வேலை கிடைத்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. அப்படியே தொடர்ந்திருந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகும்வரை நீடித்து அங்கேயே இருந்திருக்கலாம். பிள்ளைப் பருவம் முதல் ஓடி விளையாடிய பூமியில் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். காலம் என்னைப் […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-13)

This entry is part 22 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மண்ணின் மணம் பரப்பிய கவிஞர்கள் பாட்டு பாரதியின் கையிலும், பட்டுக்கோட்டையின் கையிலும் பண்பட்ட கருவியாக விளங்கியது. அக்கருவியை அவர்கள் கையாண்ட முறைமை இருவருக்கும் இலக்கியப் பெருமையை ஈட்டிக் கொடுத்தது. கவிஞர் இருவரின் கவிதைகளும் மெருகேறி நின்றமைக்குக் காரணம் அவர்களது பாடல்கள் நாட்டுப்புறத் தன்மையின் மீது வேர் கொண்டு நின்று மண் மணம் பரப்பியதே ஆகும். நாட்டுப்புற இலக்கியத்தின் சாயலையும் சார்பையும் தன்மயமாக்கிக் கொண்டு, […]

எம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

This entry is part 21 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கிண்ணியா மண்ணில் தங்களது நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களான ஏ.ஏ.எம். அலி, கிண்ணியா நஸ்புல்லாஹ், ஜே. பிரோஸ்கான், ஏ.கே. முஜாராத், ஏ.ஏ. அமீர் அலி, பாயிஸா அலி, ஜெனிரா கைருள் அமான் போன்றோர்கள் இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியினூடாக கவிஞர் எம்.சி. சபருள்ளாவும் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். முஹம்மது காஸிம் வெளியீட்டகத்தினூடாக, 110 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 46 கவிதைகள் […]

சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 19 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே […]

தியாக தீபம் – அன்னை இந்திரா (1917 – 1984)

This entry is part 17 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

“If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying……!” Indira Gandhi.   ”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” – மகாகவி பாரதி.   நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும்  அஞ்சா நெஞ்சமும் […]

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 7 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) உதட்டில் ஒன்றோடும் உள்ளத்தில் வேறொன்றோடும்  புரட்டுக்கள் புரியாத  புனித மனம் கொண்டோருக்கு  இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.  கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய […]