ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்

This entry is part 18 of 44 in the series 22 ஏப்ரல் 2012

+++++++++++++++
காதல் உபதேசம்
+++++++++++++++

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா – 16)

+++++++++++++++++
காதல் உபதேசம்
+++++++++++++++++

ஆதலால் நீ உறுதியான வழியைப் பின்பற்ற மாட்டாயா
இரத்த வெறி பிடித்த கால மூர்க்கன் மேல் போர் தொடுக்க ?
ஆயுள் தேயும் உனக்கு அரணில் பாதுகாப் பளிப்பாய்
வெல்லும் வசதிகள் உள்ளன வெறும் ஓசைநய மின்றி.
இன்பப் பருவத்தின் மேல் நீ இப்போது நிலவி வருகிறாய்
கன்னித் தோட்டத்தில் நீ இன்னும் வித்திட வில்லை !
கறைபடாக் கன்னியர் பெறுவர் உனக்கு வாழும் பூக்கள்
உன்னை ஒத்தி ருக்கும், ஓவியப் பிரதி போலின்றி !
வாழ்வு தொடர வாரிசு, அதனால் வாழ்வைப் பராமரி
கால எழுத்தாணியா அல்லது என் கல்வி எழுத்தாணியா ?
உள்ளத்தின் உள்ளே இல்லை, வெளிப் பொழிவில் இல்லை
மனிதர் விழிகள் முன்னே நீ தனியாய் வாழ முடியுமோ ?
இல்வாழ் வில் நீ இறப்பினும் உன் சந்ததி தொடரும்
இறுதியில் நீ வாழ வேண்டும் இனிய திறனோ டிணைத்து !.

+++++++++

Sonnet : 16

But wherefore do not you a mightier way
Make war upon this bloody tyrant, Time?
And fortify your self in your decay
With means more blessed than my barren rhyme?
Now stand you on the top of happy hours,
And many maiden gardens, yet unset,
With virtuous wish would bear you living flowers,
Much liker than your painted counterfeit:
So should the lines of life that life repair,
Which this, Time’s pencil, or my pupil pen,
Neither in inward worth nor outward fair,
Can make you live your self in eyes of men.
To give away yourself, keeps yourself still,
And you must live, drawn by your own sweet skill.

++++++++++++++

Sonnet Summary : 16

This seems to take its cue from the preceding sonnet, and the two together are in the form of a continuous meditation. Here the poet takes a step backwards from the declaration of promised immortality, for he has second thoughts and his verse (his pupil pen) is found to be inadequate to represent the young man as he really is, or to give a true account of his inner and outer beauty. Therefore the boy is urged once more to give himself away, in marriage, and thus to recreate himself.

Lines 9-12 present difficulties of meaning which probably can never be fully resolved. See the commentary below.

+++++++++++++++++

Information :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)
5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6. The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 17, 2012
+++++++++++++

Series Navigationபிறந்தாள் ஒரு பெண்அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *