தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

கொத்துக்கொத்தாய்….

Spread the love

வெடிக்க வெடிக்க
வீழ்ந்தார்கள்

வீழுந்து
துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க
ஓடினார்கள்

கேட்பாரற்றவர்களை
காப்பாற்ற வருபவர்களென்று
காத்திருந்து காத்திருந்து
வெடிக்கிறது வெடிக்கிறது

வெடித்ததே வெடிக்கிறது

குருதியில் சதசதக்க
சதை சகதியில்
கொத்தணிக்குண்டு விதை

விதைக்கயிலேயே அறுவடை
உயிர் உயிராய்
அறுவடைக்குப் பின்னும்
அறுவடை

அந்த கொத்துக்குண்டின் மிச்சம்

தன் கூட்டத்தை இழந்த
ஒரு குழ்ந்தையை
கொன்றுப்போட்டிருகிறது
இன்று.

இருந்தவரை கொன்று
இடம் பிடிக்க

நாளை
விதைத்தவனுக்கா அறுவடை?

எவரும்
வெடிக்க வெடிக்க
விழ வேண்டம்.

போருக்கு பின்
அமைதியில்
சத்தமாய் வெடிக்கும்

இந்தக்
கொத்துக்குண்டின்
கூட்டல் பெருக்கல் கணக்கில்

குழந்தைகள்கூட
சுழியனாய் சுழிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு.

காலில் பாய்ந்த குண்டு
வெடிப்பதற்குள்
காலை
வெட்டி வீசும் மருத்துவர்கள்

கண்ணெதிரே
காலை இழந்து
காப்பாற்றிக் கொண்டதாய்
கதறும் நெஞ்சம்

கொத்து கொத்தாய்
குண்டடிபடும் குழந்தைகளை
அள்ள
கையிருந்தும்
ஓட
காலில்லாமல்
கதறும் நெஞ்சம்

எல்லாம்
இக்காலதில்தான்

எமக்கு
கையிருந்தும்
காலிருந்தும்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்பங்கு

One Comment for “கொத்துக்கொத்தாய்….”

  • சோமா says:

    குழந்தைகள்கூட சுழியனாய் சுழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு.. வலி மிகுந்த வரிகள்..நன்றி..தமிழ்மதி


Leave a Comment

Archives