தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்

சி. ஜெயபாரதன், கனடா

Spread the love


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எந்தப் பூவும் பூந்தோப்பில் இல்லை
இதயத் துள்ளே
அவை மலர்ந் துள்ளன.
எவரது மந்திர சக்தியால்
இதயத்துள் வசந்தம் மலர்கிறது ?
பட்டுப் போன மரக் கிளைகளில்
பூ மொட்டுகள் வெடிக்கும் !
மௌனப் புள்ளினத்தை
நடுங்க வைக்கும் !
பாலை வனத்தூடே
சிரித் தோடும் ஓர் ஆறு.

துயருக்கு அஞ்சாதவன் நான்
பிரிவில் நேரும் மனவலிக்கு
ஒரு குடில் கட்டி வைத்தேன்.
தேனீக்கள் ரீங்காரம் செய்யும்
இன்னும்
இதய இடை வெளியில்.
இன்பத் துக்கு வாழ்வுக் கூடு
இதயம்தான்.
உள்ளத்தின உட்கருவில்
மரண மில்லை நம்பிக் கைக்கு !
காதல் என்பது என்றும்
நிரந்தர அடிமையாய்ச்
சுவாசிக்கும்
வாழ்வுக் கூண்டில்

+++++++++++++++++++
பாட்டு : 141 தாகூர் தன் 34 ஆம் வயதில் எழுதியது (அக்டோபர் 1895).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 18, 2012

 

 

Series Navigationஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)

One Comment for “தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்”

 • jayashree shankar says:

  அன்பின் உயர்திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
  வணக்கம்…!
  அக்கினிப் புத்திரிக்குப் பிறகு மீண்டும் ஒரு சீன மங்கை…..!
  வழக்கம் போலவே கவி படைத்துப் பாராட்டியதோடு கண்களுக்கு இனிய வண்ணப் படங்களோடும் தொகுத்த விஞ்ஞானக் கட்டுரை…
  தேனீ போல் பல மலர்களிலிருந்து சேகரித்த தேனை ஒரு கூட்டில் அடைப்பது போல….எத்தனை புத்தகங்களைப் படித்து தக்க ஆதாரத்தோடு
  எளியோருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம், விஞ்ஞானமும், விண்வெளியும் அனைவரின் கருத்துக்கும் எட்டும் கனியாக்கி பெட்டகமாய்த்
  தரும் உங்கள் எழுத்துப் பட்டறை ஒரு ஆச்சரியம் தான்…!
  சாதகப் பறவை போல தாகூரின் கீதாஞ்சலியை அப்படியே உறிஞ்சி அதன் ருசியை எங்களுக்குச் சொல்லும்போது எங்கள் மனதிலும் மழை பெய்கிறது.
  புகழின் உயரத்தின் உச்சியைத் தொட்ட ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களையும் தமிழாக்கம் செய்து ஹோமாப் பறவை போல்…அதை மீண்டும் உயரத்திலயே பறக்க வைக்கும் உங்கள் ஈரேழ்வரிப் பாக்கள் அவரோடு சேர்ந்து உமது பெருமையும் பேசும்.
  பெர்னார்ட் ஷாவின் நாடகத்தை அப்படியே படமாக எழுதி மேடம் மோனிகாவைத் வாரா வாரம் திண்ணையில் சீரியலாக எண்ணத்தில் துரத்தும் வண்ணப் படம்..உங்களைப் பற்றி வீண் பெருமைக்காக இதை எழுதவில்லை…..படித்ததும் மனதில் வசந்தம்…..எழுதத் தூண்டியதில் தவறுமில்லை.
  தங்களின் நெஞ்சின் அலைகள் கன்னியாகுமரி வரை அடிக்கிறது….!
  மிக்க நன்றி.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.


Leave a Comment

Archives