கஜாலா ஜாவேத் அவர்களது கொலை
தாவூத் கட்டக்
ஜூன் 18 ஆம் தேதி பிரபலமான பஷ்தோ பாடகி கஜாலா ஜாவேத் சுட்டுக்கொல்லப்பட்டார். அமைதியான சட்டத்தை மதிக்கும் குடிமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அரசாங்கம் சட்டத்தை மதிக்காத தீவிரவாதிகள், கடத்தல் கொள்ளையர்கள் முன்னால் கையாலாகாத அரசாங்கமாக இருக்கிறது என்பதைத்தான் இசையையும் கலைகளையும் விரும்பும் மக்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக காட்டுகிறது.
கஜாலாவின் வயது 24.
பெஷாவரின் தாப்காரி கார்டன் பகுதியில் உள்ள அழகு நிலையத்திலிருந்து ஒரு கச்சேரிக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் அவரையும் அவரது தந்தையாரையும் சுட்டுகொன்றார்கள்
இந்த தாப்காரி கார்டன் பகுதிதான் கலைஞர்களுக்கும், நடனமாடுபவர்களுக்கும் இசைவாணர்களுக்கும் ஓவியர்களுக்கும் பாதுகாப்பான பகுதியாக அறியப்பட்டு வந்தது.
இவை எல்லாமே முத்தாஹிதா மஜ்லிஸ்-ஈ-அமால்(Muttahidda Majlis-e-Amal (MMA)) என்ற ஐந்து இஸ்லாமிய தீவிரவாதகட்சிகள் கூட்டணி கைபர் பக்தூன்க்வா மாநிலத்தில் 2002இல் ஆட்சிக்கு வந்த போது முடிவுக்கு வந்தது.
இந்த மதவாத கட்சி அரசாங்கம் அங்கிருந்த பாடகர்களையும், நர்த்தகிகளையும், இசைவாணர்களையும் அங்கிருந்த நிஷ்டர் ஹால் என்னும் புகழ்பெற்ற அரங்கில் பாடுவதற்கு தடை விதித்தார்கள். பிறகு அந்த தாப்காரி கார்டன் பகுதியிலிருந்த கலைஞர்களை அங்கிருந்து போகவேண்டும் அல்லது இந்த கலைகளை தொடரக்கூடாது என்று ஆணையிட்டார்கள். சரியான முஸ்லிம் ஆக வேண்டும் என்பது அவர்கள் நிபந்தனை.
அதே நேரத்தில், முஸ்லீம் தீவிரவாத இளைஞர்கள் அங்கிருந்த கடைகளையும், உடைகளை காட்டுவதற்காக வைத்திருந்த பெண் உருவங்களையும் உடைத்து எரிந்தார்கள். அப்படிப்பட்ட பெண் உருவங்களை வைத்திருக்கும் கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி, சமூகத்தில் ஆபாசத்தை பரப்புவதாக கடும் எச்சரிக்கை விடுத்தார்கள்.
அது வெறும் ஆரம்பம்தான்.
தாலிபன் காட்டுமிராண்டித் தனம்
அங்கே இருந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு 2007-2009இல் தாலிபானால் ஆக்கிரமிக்கப்பட்டு, தாலிபான் காட்டுமிராண்டித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக ஆனது. தீவிரவாதிகள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், வீட்டுக்குள்ளேயே திருமணம் போன்ற சடங்குகளில் பாடல்களை பாடுவதற்கும் தடை விதித்தார்கள்.
ஸ்வாத் பள்ளத்தாக்கில் இருந்த பான்ர் தெருவில் வாழ்ந்து வந்த இசைவாணர்களை, இசை மற்றும் கலைகளை நிறுத்த வேண்டும் இல்லையேல் அங்கிருந்து ஓடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.
இந்த காலகட்டத்தில், அங்கிருந்து பல இசைவாணர்கள் கலைஞர்கள் வெளியேறி பெஷாவர், லாகூர், கராச்சி போன்ற பெரிய நகரங்களுக்கு ஓடினார்கள். அப்படி வெளியேறிவர்களில் ஒருவர்தான் கஜாலா ஜாவேத்.
கஜாலா போன்றவர்கள் ஸ்வாத் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி பெஷாவர் போன்ற நகரங்களுக்கு சென்று தப்பித்தது போல, மற்ற கலைஞர்கள் அப்படி அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.
அப்படிப்பட்ட பெண் நர்த்தகிகளில் ஒருவர் ஷபானா.
அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு, பான்ர் பஜாரின் நெருக்கமான தெருக்களில் தரதரவென்று இழுத்து வரப்பட்டு க்ரீன் ஸ்குயர் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த க்ரீன் ஸ்குயரை அங்கிருந்தவர்கள் ரத்த ஸ்குயர் என்று அழைத்தார்கள். காரணம் இங்கேதான் போலீஸ்காரர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க ஊழியர்கள், மற்றும் தாலிபான் கருத்துக்களை ஒப்புகொள்ளாதவர்களை தாலிபான் சுட்டுக்கொல்லும் இடமாக இருந்தது.
இந்த காலத்தில் பல ஆண் பாடகர்கள் தங்கள் பாதுகாப்புக்காக, தப்லீகி என்ற இஸ்லாமிய பிரச்சார அமைப்பில் சேர்ந்துகொண்டார்கள், பலர் பாடுவதை நிறுத்தினார்கள். பலர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஆரம்பித்தார்கள்
இவர்களில் பிரபலமானவர் பஷ்தோ பாடகர் குல்ஜார் ஆலம். இவர் இப்போது தாடி வளர்த்துகொண்டு பாகிஸ்தானின் மெகாசிட்டியான கராச்சியில் டாக்ஸி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
2008இல் பெஷாவர் பிரஸ் கிளப்பில், பாடகர் குல்ரெஸ் டபாஸம் தன் கண்களில் கண்ணீர் பொங்க தான் இனிமேல் பாடப்போவதில்லை என்று அறிவித்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
பஷ்தூன் இளைஞர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நாயகர் அலம்ஜெப் முஜாஹித் அவர்களை கடத்திச் சென்று பல நாட்கள் லஷ்கர் ஈ இஸ்லாம் அமைப்பு கைதியாக வைத்திருந்து விடுவித்தபின்னால், தனது தொழிலையே விட்டுவிட்டதும் அனைவருக்கும் தெரியும்.
முஜாஹித் பிறகு பாகிஸ்தானை விட்டு வெளியேறி தற்போது மலேசியாவில் வாழ்கிறார். தனது முன்னாள் தொழிலுக்கு அவர் திரும்பவில்லை.
ஆனாலும், 2008 பொது தேர்தலின் போது இந்த இஸ்லாமிய மதவாத கட்சி கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டு, அவாமி தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தது.
அன்றிலிருந்து, பல மாறுதல்கள் நடந்துவருகின்றன. பாடகர்களுக்கும் கலைஞர்களுக்கும், பண உதவி அளிப்பதும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஒரு அரசாங்க அமைப்பும், நிஷ்டார் ஹாலை மீண்டும் நாடகங்கள் நடத்த அனுமதித்ததும் இதில் அடங்கும்.
இருந்தாலும், கலைஞர்களுக்கும் இசைவாணர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத பயங்கரமான நிலையே தொடர்ந்து நிலவுகிறது.
இன்னும் கஜலா ஜாவேத்தை கொன்றவர் யார் என்று துல்லியமாக தெரியவில்லை.
அவர் பாடுவதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், கஜாலா விவாகரத்து பெற்றுகொண்ட முன்னாள் கணவரே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் சொல்லுவதை அப்படியே ஏற்றுகொண்டாலும், இந்த சூழ்நிலையில் பாடகர்களுக்கு, அதுவும் பெண் பாடகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
சில மாதங்களுக்கு முன்புதான் ஐமான் உதாஸ் என்ற பாடகர் இதே போல பெஷாவரில் அவரது வீட்டு தட்டப் பட்ட போது, யார் தட்டுவது என்று பார்க்க திறந்தபோது, அவரது சகோதரரே பல முறை துப்பாக்கியால் சுட்டு ஐமான் உதாஸைக் கொலை செய்தார்.
உதாஸின் கொலைக்கு பின்னால், அரசாங்க அதிகாரிகள் தொலைக்காட்சிகளில் வந்து எல்லா கலைஞர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், உதாசின் கொலைகாரர்கள் பிடிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.
கஜாலா பெஷாவரில் ஓரளவுக்கு பாதுகாப்பாகவே இருப்பதாக நம்பி இருந்தார். முந்தைய அரசாங்கத்தை போலல்லாமல், இந்த அரசாங்கம் சகிப்புத்தன்மை கொண்டதாக இருந்தது என்று நம்பினார்.
இருந்தாலும், அவரது கொலை நடந்த இடத்துக்கு 500 மீட்டர் தொலைவிலேயே போலீஸ் தடையிருப்பு இருந்தாலும், கொலைகாரர்கள் எளிதில் தப்பித்து சென்றுவிட்டனர் என்பதை பார்க்கும்போது கஜாலாவின் நம்பிக்கை பயனற்றது என்றே தெரிகிறது.
கைபர் பக்தூன்வா அரசாங்கம் இனிமேலாவது கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப கலைஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா? கொலையாளர்களை கண்டுபிடித்து தண்டிக்குமா?
எனக்கு நம்பிக்கை இல்லை. கலைஞர்களுக்கும், நர்த்தகிகளுக்கும், பெண் பாடகர்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமென்றும் தோன்றவில்லை.
— Daud Khattak
http://tribune.com.pk/story/
http://www.rferl.org/content/
- முள்ளாகும் உறவுகள்
- சங்கர் தயாளின் “ சகுனி “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
- உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
- நினைவுகளின் சுவட்டில் – 90
- சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
- எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
- மனநல மருத்துவர்
- முள்வெளி அத்தியாயம் -14
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
- கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
- பழையபடி மரங்கள் பூக்கும்
- திருக்குறள் விளம்பரக்கட்டுரை
- திருடுப் போன கோடாலி
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
- தப்பித்து வந்தவனின் மரணம்.
- துருக்கி பயணம்-7
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
- மஞ்சள் கயிறு…….!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
- நினைவுகள் மிதந்து வழிவதானது
- காசி
- இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
- குரோதம்
- நினைவு
- “காலம் தீண்டாத கவிஞன்…….கண்ணதாசன்”
- “செய்வினை, செயப்பாட்டு வினை“
- பஞ்சதந்திரம் தொடர் 49
- நான் ‘அந்த நான்’ இல்லை
- நீட்சி சிறுகதைகள் – பாரவி
- நிதர்சனம் – ஒரு மாயை?
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
- இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
- அவனுடைய காதலி
- எனது வலைத்தளம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
- கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
- எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2