ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)

This entry is part 8 of 41 in the series 8 ஜூலை 2012

++++++++++++++
காதலரின் இரவுச் சிந்தனைகள்
++++++++++++++

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா -27)

++++++++++++++
காதலரின் இரவுச் சிந்தனைகள்
++++++++++++++

கடும் உழைப்பில் களைத்து படுக்க நான் விரைந்தேன்
உடல் உறுப்புக் குகந்த ஓய்வு பயணக் களைப்பால்
அதன் பின் துவங்கும் என் மூளையில் பயணம்.
மனத்தை ஆட்கொளும், உடற் பணிக்குப் பிறகு !
எனது சிந்தனை அலையும் என் வசிப்பிடம் தாண்டி.
உனை நோக்கிச் செல்லும் அந்த உற்சாகப் பயணம்
உறங்கும் கண்ணி மைகள் திறந்தே இருக்கும்.
குருடன் காணும் இருளைத் தேடிய வண்ணம்
காணாது ஆத்மா தன் கற்பனைக் காட்சி தவிர !
என்விழி நோக்கா உன் திரைநிழல் காட்டும்
பயங்கர இரவில் தொங்கும் தோரண அணிபோல்
கருமை இரவு எழிலாகும் பழைய முகம் புதிதாகும்.
எப்படி உளது பகலில் என் உறுப்பு இரவில் என் மனம்
உனக்கோ எனக்கோ ஓய்வே இல்லை மெய்யாய்.

+++++++++

SONNET 27


Weary with toil, I haste me to my bed,
The dear respose for limbs with travel tired,
But then begins a journey in my head
To work my mind, when body’s work’s expired.
For then my thoughts (from far where I abide)
Intend a zealous pilgrimage to thee,
And keep my drooping eyelids open wide,
Looking on darkness which the blind do see.
Save that my soul’s imaginary sight
Presents thy shadow to my sightless view,
Which like a jewel (hung in ghastly night)
Makes black night beauteous, and her old face new.
Lo thus by day my limbs, by night my mind,
For thee, and for my self, no quiet find.

++++++++++++++

Sonnet Summary : 27

The poet describes himself as being “weary with toil” and trying to sleep. The somber mood announces a new phase in the relationship. In the first four lines, the poet likens his state of mind to traveling afar. Restlessly, he cannot sleep because his mind is filled with thoughts of the youth: “Lo, thus, by day my limbs, by night my mind, / For thee and for myself no quiet find.”

With Sonnet 27, the poet seems to regard the youth’s affection less securely. Their absence from each other signals a coolness in the relationship. The physical distance, however, does not dull the youth’s alluring beauty; the poet imagines the young man as a blinding, brilliant jewel. In line 10, the poet’s seeing the youth’s “shadow” makes their relationship seem more tenuous, for “shadow” in this context represents the youth’s image, which no longer has substance.

++++++++++++++++++++++++

. Sonnet 27 .

(paraphrased)

01.     Weary from work, I promptly go to bed,

02.     The welcome repose for limbs tired from travel,

03.     But then, I begin a journey in my brain,

04.     Which occupies my mind, after’s the body’s work is done;

05.     And then my thoughts (wandering far from where I dwell,)

06.     Set out upon a devoted journey to you,

07.     And keep my sleepy eyelids open wide,

08.     As I look upon the kind of darkness which the blind must “see.”

09.     (We are) Apart, except that my soul’s imaginary eyes,
which can’t really see, but can form images,
10.     Bring their “ghost,” of you, into my empty field of view,

11.     Which, like a brilliant decoration (suspended in horrid night)

12.     Makes the black night beautiful, and makes the old, familiar face
of night look fresh and novel;
13.         So behold, how my limbs, by day, and my mind by night,

14.         Find no rest, for either you or me.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) July 4, 2012
+++++++++++++

Series Navigationவாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20அம்மாவாகும்வரை……!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *