தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.

This entry is part 36 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012



மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்னோடு நடத்தும்
இந்த நாடகம் அந்தோ
என் ஆத்மா வுக்கு !
ஓ காதலே !
நீ காண்பது என் காதலி
மிக மிக ஆர்வமோ டுள்ளது
இன்றென் இதயம் !
விளையாட்டுப் போட்டியில்
இழப்பு களை நீ
எளிதாய் ஏற்றுக் கொள்ளாய்.
இப்படி நீ ஒருத்தி தான்
எப்போதும்
எனக்கு வர்ணம் பூசி விட்டு
ஏகி விரைவாயா ?
பிடிபட்டுக் கொள்ள
பிரபு நீ
விரும்ப மாட்டாயா
என்னிட மிருந்து நிறத்தை
எடுத்து உன் நெஞ்சின் மேல்
தடவிக் கொள்ள ?
அவன் இதயத் தாமரை
சிவப்பு மகரந்தத் தூளால்
வண்ணம் பூசட்டும்
உன் தோள் துண்டு மேல் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 88 தாகூர் தன் 49 ஆம் வயதில் “ராஜா” என்னும் பாட்டு நாடகத்தில் தாதாவின் பாட்டாக எழுதியது (டிசம்பர் 1910).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] July 30, 2012

Series Navigationபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்பஞ்சதந்திரம் தொடர் 55
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *