தாகூரின் கீதப் பாமாலை – 28 முடிவு காலம் நோக்கி

This entry is part 14 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உறுதியற்ற உன் வருகைக்கு
காத்தி ருக்கப் போவதில்லை நான் !
திறந்த வெளிநோக்கிப்
பறந்து செல்வேன் ஆயினும் !
சருகான பூக்களி லிருந்து
தரையில் உதிரும் இதழ்கள் !
காற்று ஓங்கி அடிக்குது !
கடல் குமுறுது !
உடனே வந்து அற்று விடு
வடத்தை !
படகு நதி நடுவே மிதக்கட்டும்
படகோட்டி நான் !
காரணம்
முடிவு நோக்கிப் போகுது
கால நேரம் !

வெளுத்து விட்டது இரவு
தனியே வானில்
வெண்ணிலா
விழித்துக் கொண்டுள்ளது !
காலப் பயணப் படகு
கனவுக் கடலில்
சீராய் மிதந்து செல்லும் !
பாதை தெரிய வில்லை உனக்கு !
பாதை தெரியா விட்டால்
என்ன
மனத்துக்குச் சுதந்திர இறக்கைகள்
இணைந்துள்ள போது ?
இருளைக் கடக்க முடியுமென
அறிவேன் உறுதியாய் !
எனது பயணம் தொடங்கட்டும்
காரணம்
முடிவு நோக்கிப் போகுது
கால நேரம் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 290 தாகூர் தன் 50 ஆம் வயதில் (அக்டோபர் 1911 ?) எழுதி, பின்னால் தாகூரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1936 இல் அவரது கவிதை, நாடகத் தொகுப்பில் 62 ஆவது பாடலாய் இணைக்கப் பட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 23, 2012

Series Navigationஆழி – ஜாகீர்ராஜா நூல்கள் வெளியீடுஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 34) முகிலும், மழையும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *