தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்

This entry is part 10 of 26 in the series 9 டிசம்பர் 2012

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பாசான நீர்க்கொடி போன்ற எனது
பாடல்கள்  அலை வெள்ள அடிப்பில்
பாதை தவறி எப்போதும்
திசை மாறிப் போகும் !
நங்கூரம் இல்லை அவற்றுக்கு !
ஆதார மற்ற காற்றிலே அவை ஏன்
ஆடி வருகின்றன  ?  அவை ஏன்
இடம் மாறிப் போகின்றன,
தடம் ஏதும் விடாது
தானியம் ஏதும் விளையாது ?
எம்முயற்சியும்  இல்லை  அவற்றுக்கு !
ஒன்றைக் குறிவைத்து போகும்
உள்ளோட்டம்  இல்லை !
எவ்விதப் பந்த மில்லை அவற்றில் !  ஆஹா
எந்த விதப் பற்று மில்லை !
பற்றில்லாத அவை,  ஒருவரிடம்
பற்றில்லாமல் செய்து விடுபவை !
இல்லமற்ற வாய்மொழி வழியில்
துள்ளிக் கொந்தளிக்கும்
புறக்கணிப்பு
வெள்ளப் போக்கில் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 5  தாகூர்  61 வயதினராய் இருந்த போது  1923 பிப்ரவரி 12 இல்  பழைய 15 ஆம் உணர்ச்சிப் பாடலை வேறு விதமாக பாலகச் சேமிப்புக் காகச்  சாந்திநிகேதனத்தில் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  December 5 , 2012
Series Navigationகண்ணீர்ப் பனித்துளி நான்ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *