தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 ஜூலை 2018

மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி

எகனாமிஸ்ட் பத்திரிக்கை

Abul-Kalam-Azadபாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிவதற்காக நடந்த போரில் சுமார் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டு சுமார் 41 வருடங்களுக்கு பிறகு, பங்களாதேஷ் போர் குற்ற ட்ரிப்யூனல் தனது முதலாவது தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனவரி 21, 2013ஆம் தேதி அன்று, அபுல் கலாம் ஆஜாத் என்பவருக்கு, 1971இல் நடந்த 9 மாத போரின் போது இனப்படுகொலைக்காகவும், கொலைகளுக்காகவும் மரணதண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுக்கும், அவரது அவாமி லீக் கட்சிக்கும் வெற்றியாக கருதப்படுகிறது. அவர் தனது பதவிக்காலத்தில் செய்யபோவதாக உறுதியளித்த விஷயங்களில் முக்கியமானது இது.

பங்களாதேஷிகள் வெகுகாலமாக நீதிக்காக காத்திருந்திருக்கிறார்கள். இந்த டிரிப்யூனலில் நோக்கங்கள் பரவலாக ஆதரிக்கப்பட்டாலும், இந்த டிரிப்யூனலை ஷேக் ஹஸீனாவின் முக்கிய எதிர் அரசியல்வாதியான முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவாலும் அவரது பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சியாலும்(BNP) அரசியலுக்குள்ளாக்கப்பட்டிருந்தது. இதன் நேர்மையைப் பற்றி குரல்கள் எழுப்பப்பட்டன. டிசம்பரில், இதன் நீதிபதிக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு வக்கீலும் பேசிக்கொண்டதை எகனமிஸ்ட் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. அந்த நீதிபதி பதவி விலகினார். அஜாத் பற்றிய இந்த தீர்ப்பு இரண்டாவது டிரிப்யுனலால் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜமாத் இஸ்லாமி அமைப்பின் இளைஞர் அமைப்பு தலைவராக குறிப்பிடப்படும் ஆஸாத், அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் முக்கிய கட்சியாகவும் இப்போதும் பங்களாதேஷின் முக்கிய இஸ்லாமிய கட்சியாகவும் இருக்கிறது. அதன் இளைஞர் அமைப்பு பாகிஸ்தானை விட்டு கிழக்கு பாகிஸ்தான் பிரியக்கூடாது என்று தீவிரமாக வேலை செய்தது. அதன் உறுப்பினர்கள் ஏராளமான குடிமக்களை கடத்திச் சென்று கொலை செய்த்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆஸாத்தே 12 இந்துக்களை கொலை செய்ததற்காகவும், பாலுறவு பலாத்காரங்கள் செய்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிறகு பங்களாதேஷில் முக்கியமான அரசியல் தலைவராகவும், இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் பிரச்சாரகராகவும் உருவானார். சென்றவருடம் அவர் பங்களாதேசை விட்டு தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படுகிறார்.

திருமதி ஜியா (முன்னாள் பிரதமர்) தனது கட்சியை ஜமாதே இஸ்லாமி கட்சியை விட்டு விலகி நிற்க வைக்க முடியாமல் இருக்கிறார். இந்த வருடம் தேர்தல் நடந்தால், அவருக்கு ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் ஆதரவு வேண்டும். இன்னும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 முக்கிய தலைவர்களில் இரண்டு பேர் திருமதி ஜியாவின் கட்சியில் முக்கிய தலைவர்களாகவும் அவரது நெருங்கிய ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். 1971இன் கறையால் BNP-ஜமாத் கூட்டணி மீது மக்களுக்கு வெறுப்பு வந்து, தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று ஷேக் ஹஸீனா நம்பிக்கையுடன் இருக்கிறார்

மூலம்

 

தொடர்புடைய செய்திகள்

http://www.bbc.co.uk/news/world-asia-21118998

http://bdnews24.com/bangladesh/war-crimes-trials/2013/01/21/hang-azad-chants-fill-air
http://www.guardian.co.uk/world/2013/jan/21/bangladesh-cleric-sentenced-crimes-humanity
http://www.thenewstribe.com/2013/01/21/maulana-abul-kalam-azad-to-death-for-bangladesh-1971-war-crimes/

 

Series Navigationஅக்னிப்பிரவேசம்-20பிரபஞ்சத்தி​ன் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலி​ருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்

One Comment for “மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி”

  • தங்கமணி says:

    பங்களாதேஷ் போரின் போது இந்துக்களை கொன்று குவித்த பாகிஸ்தான் அரசை எந்த போர்க்குற்றத்திலும் நிறுத்த இந்தியாவோ பங்களாதேஷோ அல்லது அகில உலக நாடுகளோ யாருமே முயற்சி செய்யவில்லை.
    பங்களாதேஷின்போது மிக அதிகமாக கொன்று குவிக்கப்பட்டவர்கள் சுமார் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்கள் என்பது யாருமே பேசாத விஷயம். வரலாற்றின் பக்கங்களில் ஒளிந்து கிடக்கிறது.


Leave a Comment

Archives