யேமன் நாட்டின் சானா நகரத்தின் வெளியே இருக்கும் சேரிக்கு சென்றால், அதிர்ச்சியடையச்செய்யும் உணர்வை பெறலாம்
இங்கே வீடுகள் குப்பைகளால் கட்டப்பட்டுள்ளன. 15பேருக்கும் மேலான குடும்பத்தினர் ஒரே ஒரு அறையில் வசிக்கிறார்கள். குழந்தைகள் அழுக்காக எதையோ சாப்பிட்டுகொண்டிருக்கிறார்கள். அங்கங்கு நோய்க்கிருமிகளும் அழுக்கும் அசிங்கமும் மிதக்கும் குட்டைகள். குப்பைகளும் மனித மலமும் ஒன்றாக கிடந்து ஈக்கள் மொய்த்து நாறிகொண்டிருக்கிறது. தாங்க முடியாத நாற்றம். அந்த காட்சி அயீஷா சுலைமான் எங்கு சென்றாலும் துரத்திக்கொண்டு வருகிறது. அவரால் மறக்கமுடியவில்லை.
உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து மூக்கில் இழுத்துகொண்டு குழந்தைகள் போதைமருந்துக்கு அடிமையாக ஆகிறார்கள். இவர்கள் நகரத்தின் தெருக்களில் வெறுங்காலுடன் பிச்சையெடுக்கிறார்கள். அவர்களது கால்களின் பாதங்கள் கூட காய்ச்சிப்போய் அந்த தீயாய் எரிக்கும் தார்ச்சாலையை தாங்குகின்றன.
யேமனின் மிகக்கீழான ஜாதியான அக்தம் என்ற ஜாதியை சேர்ந்தவர் சுலைமான். அக்தம் என்ற வார்த்தையின் பொருள் வேலைக்காரர்கள். இவர்கள் பல நூற்றாண்டுகளாக சமூகத்தால் விளிம்பு நிலைக்கு துரத்தப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு விலக்கி வைக்கப்பட்டவர்கள்.
இந்த நிலை சமீபத்தில் சற்று முன்னேறியிருந்தாலும், மற்ற சமூகத்தினர் இவர்களை கீழானவர்களாகவும், அழுக்கானவர்களாகவும், நல்ல நடத்தையில்லாதவர்களாகவும், ஒழுக்கங்கெட்டவர்களாகவுமே பார்க்கிறது.
அவர்களது தட்டுக்கள் கூட அழுக்கானவையாக கருதப்படுகின்றன. “அக்தமோடு சாப்பிடாதே. அவர்களது தட்டுக்களிலிருந்து புழுக்கள் வருகின்றன” என்று பழமொழி சொல்லப்படுகிறது.
யேமனில் எத்தனை அக்தம் ஜாதியினர் இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமான கணக்கெடுப்பு இல்லையென்றாலும், நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையும் மிகவும் ஏழையான சிறுபான்மையும் இவர்களே. யேமனில் மற்றவர்களை போலல்லாமல் இவர்கள் ஒரு இனத்தை (tribe) சார்ந்தவர்கள் அல்ல. இவர்களுக்கு படிக்க வாய்ப்பில்லை. இவர்கள் இவர்களுக்கு மேலே இருக்கும் சமூக ஜாதிகளோடு திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
அக்தம் ஜாதியினரின் மூலம் பற்றிய பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஆறாம் நூற்றாண்டில் யேமனுக்கு வந்த அபிசீனிய போர்வீரர்கள், அவர்களது ஆக்கிரமிப்பு தோல்வியடைந்ததும் இங்கேயே தங்கிவிட்டவர்கள் என்பது நம்பத்தகுந்தது. அபிசீனியா என்பது எதியொப்பியா. தோல்வியடைந்ததால், இவர்கள் அங்கே இருப்பதிலேயே மிகவும் மோசமான வேலையை கட்டாயப்படுத்தி திணித்திருக்கிறார்கள். மனித மலத்தை அள்ளுவது, குப்பைகளை அள்ளுவது ஆகிய தொழில்களை இவர்கள் மீது விதித்திருக்கிறார்கள்.
இன்றும் தெருக்களை கூட்டுவதே ஆண் அக்தம் -உக்கு இருக்கும் பொதுவான வேலை. இவர்கள் சுமை தூக்கிகளாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், காலாட்படையாகவும் இருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் பிச்சையெடுக்கிறார்கள்.
சுலைமான் தனது பிடிவாதத்தால் மற்றவர்களை விட சுமாராக இருக்கிறார். அவரது உறவினர்கள் ஒரு பெண் படிக்கக்கூடாது என்று நம்புகிறார்கள். ஒரு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும், திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை பார்த்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று அயீஷா கூறுகிறார். ஆனால், சுலைமான் அங்கிருந்து வெளியேறி சென்று பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்து முடிக்க இருக்கிறார். பெரிய குடும்பத்தை வைத்துகொண்டு பொருளாதார சுமையை ஏற்றுகொள்ளப்போவதில்லை என்றும் திடமாக இருக்கிறார்.
அந்த வழியில், அவர் மனித உரிமைகளை பற்றி அவரது மக்களுக்கு விளக்குபவராகவும் போதிப்பவராகவும் ஆகியிருக்கிறார். அக்தம் சமூகத்திலேயே இன்னும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் கருதும் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராட உறுதிபூண்டிருக்கிறார். பெண்கள் தன்னம்பிக்கை பெறுவதும், அவர்களது உரிமைகளை அறிந்துகொள்வதுமே அவரது குறிக்கோள்.
பல அக்தம்கள் எதிர்காலத்தை பற்றிய அயீஷாவின் நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளவில்லை.
சாய்யீதா பின் சாத் அஹ்மத் சொஹைப்பின் களைத்த கண்களிலிருந்து கண்ணீர் வெளி எளிதில்கொட்டிவிடுகிறது. அவரும் அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் பாப் அல் யேமன் (யேமன் வாசல்) என்ற சேரியில் ஒரு அறை வீட்டில் இருக்கிறார்கள். இதுதான் சானா நகரில் இருக்கும் 11 சேரிகளில் மிகப்பெரிய சேரி.
சோஹைப் சவுதி அரேபியாவில் 1970 வரை இருந்தார். சவுதி அரேபியாவும் ஈராக்கும் போர் புரிந்தபோது யேமன் ஈராக்குக்கு ஆதரவளித்த காரணத்தால் சவுதி அரேபியாவிலிருந்து துரத்தப்பட்டார். இதே போல பல்லாயிரக்கணக்கான யேமனி மக்கள் துரத்தப்பட்டனர். அவர் அங்கிருந்து திரும்பி வரும்போது கணவரும் இறந்துவிட்டார். இங்கே வந்தால் வாழ வழி ஏதுமில்லை.
”இப்போது எனக்கு பசித்தால் வெளியே சென்று பிச்சையெடுக்கிறேன், என் குழந்தைகளும் தெருக்களில்தான் இருக்கிறார்கள்:” என்று கூறுகிறார்.
இந்த அக்தம் சமூகத்துக்கு வெளியே, இந்த சேரிக்கு வெளியே, இவர்களை கேவலமாக நடத்துகிறார்கள் என்று சோஹைப்பும் மற்றவர்களும் கூறுகிறார்கள்.
ராவ்ஷா ஹாசன், என்ற இருபது வயது பெண் பாப் அல் யேமன் சேரியில் வாழும் இன்னொரு பெண். இவரும் இவரது பெற்றோரும் இவரது 13 சகோதர சகோதரிகளும் இன்னொரு குடிசையில் வாழ்கிறார்கள்.
ஹாசனின் தாயார் சானா நகரத்தில் தெருக்கூட்டுபவராக இருக்கிறார். அவரது தந்தையார், முன்னாள் காவலாளி, இப்போது வேலை செய்யமுடியாமல் இருக்கிறார். அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக ஆனதால், அவரால் பார்க்கமுடியவில்லை என்றும் சொல்கிறார்.
ஹாசனின் சோகமான களைத்த கண்கள் அவர் அணிந்திருக்கும் லுத்மா (கண்களை மட்டும் காட்டும் கருப்பு அங்கி) வழியே தெரிகின்றன. இந்த உடையே யேமனி பெண்கள் வெளியே செல்லும்போது அணியும் உடை. அவரை சுற்றியிருக்கும் அழுக்கான குரூரமான சூழ்நிலையை பார்க்கிறார். என்னுடைய குழந்தைகளை இந்த சூழ்நிலையில் பெற்றுகொள்ள விரும்பவில்லை என்கிறார்.
பெண்களும் குழந்தைகளுமே பிச்சை எடுப்பதன் மூலம் வீட்டுக்கு வருமானத்தை கொண்டுவந்தாலும், இந்த சேரிகளில் ஆண்களே எல்லா குடும்ப விஷயங்களையும் முடிவு செய்கிறார்கள்.
மிகவும் ஏழையான குடும்பத்தினர் கூட அவர்களது பணத்தில் பெரும்பாலானதை காட் என்று சொல்லப்படும் ஒரு தாவரத்தை தின்பதற்கு செலவழிக்கிறார்கள். மெல்லிய போதை தரும் இந்த தாவரத்தை ஆண்களும் பெண்களும் தினசரி சாப்பிடுகிறார்கள்.
தனது தாயாரை போலவே ஹாசனும் சானா நகரத்தின் புழுதியான தெருக்களை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அவரது சொந்தக்கார சிறுவன், அவரும் தெருக்கூட்டுபவர், இரவு நேர உழைப்பின்போது ஒரு காரால் இடிக்கப்பட்டு நிற்காமல் போனதால், கை கால் இழந்து கிடப்பதை பார்த்ததிலிருந்து இவர் தெருக்கூட்ட செல்வதை நிறுத்திவிட்டார். தற்போது ஹாசன் ஒரு மனித உரிமை அமைப்பு அலுவலகத்தில் சுத்தம் செய்பவராக இருக்கிறார். தெருக்கூட்டும்போது அவர் பெற்ற சம்பளத்தை விட குறைவாக இருந்தாலும் அவர் சற்று சந்தோஷமாக இருக்கிறார்.
கல்வியை தொடர்ந்திருந்தால், ஹாசன் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பார். அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவரது படிப்பு நிறுத்தப்பட்டது. ஏனெனில் அவரது தந்தையார், பள்ளிக்கூடம் பெண்களுக்கு அல்ல என்று சொல்லிவிட்டார் என்பதை ஹாசன் நினைவு கூர்ந்தார். மேலும், பள்ளிக்கூடங்களில் அக்தம் குழந்தைகள் நிராகரிக்கப்பட்டுவிடுகிறார்கள். சமூகத்தில் அக்தம் பிரிவினர் நிராகரிக்கப்படும் அதே காரணங்களுக்காக, பள்ளிக்கூடங்களும், அக்தம் பிரிவு குழந்தைகளை வெளியேற்றிவிடுகின்றன. இந்த குழந்தைகளும் சுத்தம் இல்லாதவர்களாக, அசிங்கமானவர்களாக, ஒழுக்கம் இல்லாதவர்களாக கருதப்படுகிறார்கள். ஹாசன், தனது தந்தை அறியாமல் கல்வி பெற முனைகிறார்.
அக்தம் ஜாதியினர் ரகசியமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏராளம். தங்களது ஜாதியை மற்றவர்களிடம் சொல்ல வெட்கப்படுகிறார்கள். ஒரு மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு மருத்துவர் வெகு காலமாக மருத்துவராக இருந்தாலும், தனது ஜாதியை மற்றவர்களிடம் சொல்லுவதில்லை. ஏனெனில் அவ்வாறு சொன்னால், அவரிடம் வரும் நோயாளிகள் கூட அவரிடம் வரமாட்டார்கள் என்றுகூறுகிறார்.
அக்தம் ஜாதியினருக்கு அதிகாரப்பூர்வமாக உதவி செய்வதாக சொல்லப்படுகிறது. யேமன் அரசாங்கம், உலக நாடுகள் உதவியுடன் அவர்களுக்கு ஒரு வசிப்பிடம் கட்டி வருகிறது என்று சமூக நலத்துறை துணை அமைச்சர் நூர் பா அபாத் கூறுகிறார்
புதிதாக கட்டப்படும் அந்த வசிப்பிடத்துக்கு அருகே இருக்கும் விலையுயர்ந்த மாளிகைகளை விற்றுவிட்டு செல்ல இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அக்தம் ஜாதியினருக்கு அருகே வாழ விரும்பவில்லை.
அக்தம் ஜாதியினர் தங்களை மைய சமூகத்துக்குள் இணைத்துகொண்டு அவர்களது கல்வியை அதிகரித்துகொள்ள வேண்டும் என்று பா அபாத் கூறுகிறார்.
மைய சமூகம் அக்தம் ஜாதியினரை ஏற்றுகொள்ள வந்தாலும், அக்தம் ஜாதியினருக்கு தங்களை பற்றியே தாழ்வுமனப்பான்மை இருக்கிறது என்று கூறுகிறார். பல ஆயிரம் வருடங்களாக அவர்கள் மீது இருக்கும் கருத்துக்களை நீக்க காலம் ஆகும் என்று கூறுகிறார்.
சமூகமும் தனது கருத்துக்களை மாற்றிகொள்ள வேண்டும் என்றூ ஜோனதன் புட்டிபூட் கூறூகிறார். இவர் கேர் இண்டர்நேஷனல் யேமன் பிரிவு அதிகாரியாக இருக்கிறார். தங்களை பற்றிய கருத்துக்களை இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்
அவர்களை பற்றி மற்றவர்கள் கருதுவது அவர்களை தாழ்த்துகிறது. ஆனால், அவர்களே அவர்களை தாழ்த்திகொள்ளவும் செய்கிறார்கள் என்கிறார்
http://articles.baltimoresun.com/2004-04-22/news/0404220029_1_yemen-shantytown-sulaiman
அல் அக்தம் ஒன்றரை மில்லியன் மக்கள்
மேலும்
Yemen’s discriminated and ostracized Akhdam people
In pictures: Yemen’s ‘lowest of the low’
- மணலும் (வாலிகையும்) நுரையும் (10)
- கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2
- கல் மனிதர்கள்
- மன்னிப்பு
- வானிலை அறிவிப்பு
- எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43
- நிழற்படங்கள்
- முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்
- சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்
- தீர்வு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.
- ஜெயாவின் விஸ்வரூபம்…
- கைரேகையும் குற்றவாளியும்
- 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை
- செவ்விலக்கியங்களில் உழவும் உழவரும்
- விஸ்பரூபம் : புரியத்தான் இல்லை
- ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 6
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -4
- ரணங்கள்
- மகாத்மா காந்தியின் மரணம்
- அதிர்ஷ்டம்!!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
- வால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)
- விழுது
- அக்னிப்பிரவேசம்-21
- மதுரையில் மக்கள் கலை விழா
- அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
- இலக்கிய மாநாடு , அழைப்பிதழ்
- தாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு