வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)

This entry is part 8 of 30 in the series 17 பிப்ரவரி 2013

 

இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு த்டையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத்   துறந்தவர் எவரோ அவரே துறவி.

 

சான்றோருக்கும், கவிவாணருக்கும் இடையே அங்கோர் பச்சைப்பசும்புல்வெளி இருக்கிறது; அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிறாரவர்; கவிவாணரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார்.

 

இருப்பினும் சந்தையில் தங்கள் தலைகளைக் கூடையில் சுமந்து கொண்டு, ”ஞானம்! விற்பனைக்கு ஞானம்!” எனக்கூவித் திரியுமந்த தத்துவ ஞானிகளைக் கண்டேன் யான்.

பாவமந்த தத்துவ ஞானிகள்’. தம் இதயத்திற்கு உணவளிக்கும் பொருட்டு தம் சிரசையே விற்க வேண்டியதாகிறது.

 

ஓர் சாலைத் துப்புரவுப் பணியாளரிடம், “உம்மைக் கண்டு  வருந்துகிறேன் யான்.  சிரமமானதும் மற்றும் சுகாதாரமற்றதுமானப் பணி உம்முடையது” என்றார் அந்தத் தத்துவஞானி.

மேலும் அந்த சாலைத்துப்புரவுப் பணியாளர், “நன்றி ஐயா. ஆனால் தங்களுடைய தொழில் என்ன என்று கூறுங்களேன்?” என்றார்.

அதற்கந்த தத்துவ ஞானி, “ மனிதர்களின் மனதையும், அவர்தம் செய்ல்களையும் மற்றும் அவருடைய விருப்பங்களையும் வாசிக்கிறேன் யான்” என்று பதிலிறுத்தார்.

 

பின்னர் அந்த சாலைத்துப்புரவுப் பணியாளர் “யானும் உம்மைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்” என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டே, துப்புரவு செய்துகொண்டிருந்தார்.

 

சத்தியத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவனைக் காட்டிலும் நேர்மையில் கவனம் செலுத்துபவன் எவ்வித்ததிலும் குறைந்தவனில்லை.

 

எந்தவொரு மானிடராலும்  தேவைகள் மற்றும் ஆடம்பரத்திற்கும் இடையேயான வரியை வரைய இயலாது. தேவதைகள் மட்டுமே அதைச் செய்ய இயலும், மேலும் அந்த தேவதைகள் விவேகியாகவும், ஆவலுடனும் இருக்கின்றன.

இருப்பினும் அந்த தேவைதைகளே விண்வெளியின் நமது நற்சிந்தைகள்.

 

இசுலாமியத் துறவியின் மனதில் தம் சிம்மாசனத்தைக் காண்பவர் எவரோ அவரே உண்மையான இளவரசர்.

 

உம்மால் இயன்றதைக் காட்டிலும் அதிகமாகக் கொடுப்பதே பெருந்தகைமை, மேலும் தற்பெருமை என்பது உமது தேவைக்குக் குறைவாகவே எடுத்துக்கொள்வது.

 

உண்மையில் நீவிர் எவருக்கும் கடமைப்பட்டவரில்லை. நீவிர் அனைவரும் அனைத்திற்கும் கடமைப்பட்டவராகிறீர்.

 

முற்காலத்தில் வாழ்ந்த அனைவரும் தற்போது நம்மோடு வாழுகிறார்கள். நம்மில் எவரும் இரக்கமற்ற புரவலனாக இருக்கப்போவதில்லை என்பது உறுதி.

 

அதிகமான ஆசை கொண்டவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வர்.

அவர்கள் எம்மிடம், “கையில் இருக்கும் அந்த ஒரு பறவை, புதரில் கிடக்கும் பத்து பறவைகளுக்குச் சமமானது “ என்றனர்.

ஆனாலும் யான், “புதரில் உள்ளதோர் பறவையும், மற்றுமோர் சிறகும், கையில் உள்ள பத்துப் பறவைகளைக்காட்டிலும் மேலானது.” என்றேன்

அச்சிறகின் பின்னால் உமது தேடல் என்பது வாழ்க்கைச் சமத்காரம்! சிறகுகளுள்ள பாதங்கள்; இல்லை, அதுதாமே வாழ்வேதான்.

 

சௌந்தர்யம் மற்றும் சத்தியம் ஆகிய இரு கூறுகள் மட்டுமே இங்குள; காதலர்களின் மனங்களில் உள்ள சௌந்தரியம், மற்றும் நிலத்தை உழுவோரின் கரங்களிலுள்ள நேர்மை.

பேரழகு கைப்பற்றியுள்ளது எம்மை, ஆயினும் அதைக்காட்டிலும் பேரழகான ஒன்று எம்மை அதிலிருந்து விடுவித்துள்ளது.

சோபிதம், அதைக் காண்போரின் கண்களிலுள்ளதைக் காட்டிலும் அதற்காக ஏங்குபவரின் இதயத்தில் பிரகாசமாக பளிச்சிடுகிறது.

 

தம் மனதை எம்மிடம் வெளிப்படுத்துபவரை மெச்சுகிறோம் யாம், தம் சுவனமதின் திரையை நீக்குபவரை மதிக்கிறோம் யாம். ஆயினும்  ஏன் வெட்கம் கொள்கிறேன் யான், மேலும் எமக்குச் சேவகம் செய்யும் அவர்முன் ஒருத்துளியேனும் அவமானம் கொள்வதும் ஏன்?

 

வல்லமையுடையோர் ஒரு காலத்தில் இளவரசருக்குச் சேவை செய்வதில் பெருமிதம் கொண்டிருந்தனர்.

தற்போது அவர்கள் பரம ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கு கௌரவம் பார்க்கின்றனர்.

 

அத்தேவதைகள், பெரும்பான்மையான யதார்த்தவாதிகள் தங்கள் ரொட்டியை வினைஞரின் புருவத்தின் வியர்வையுடன்தான் உட்கொள்கின்றனர் என்பதை அறிவர்.

 

சமத்காரம் என்பது பெரும்பாலும் ஓரு முகமூடியே. உம்மால் அதைக் கிழிக்க முடியுமானால் நீவிர் ஓர் எரிச்சலடைகிற மேதையையோ அல்லது ஏமாற்று வித்தையான சாமர்த்தியத்தையோக் காண இயலும்.

 

அந்தப் புரிந்துணர்வு எமக்குப் புரிதலையும், மற்றுமந்த மந்தபுத்தி, அசமந்தம் ஆகியவற்றைச் சுமத்துகிறது. அவையிரண்டும் சரியேயென்று எண்ணுகிறோம் யாம்.

 

தொடரும்.

Sand And Foam – Khalil Gibran (12)

 

A hermit is one who renounces the world of fragments that hemay enjoy the world wholly and without interruption.

 

There lies a green field between the scholar and the poet; should the scholar cross it he becomes a wise man; should the poet cross it, he becomes a prophet.

 

Yestereve I saw philosophers in the market-place carrying their heads in baskets, and crying aloud, “Wisdom! Wisdom for sale!”

Poor philosophers! They must needs sell their heads to feed their hearts. Said a philosopher to a street sweeper, “I pity you. Yours is a hard and dirty task.”And the street sweeper said, “Thank you, sir. But tell me what is your task?”

And the philosopher answered saying, “I study man’s mind, his deeds and his desires.”

Then the street sweeper went on with his sweeping and said with a smile, “I pity you too.”

 

He who listens to truth is not less than he who utters truth.

 

No man can draw the line between necessities and luxuries. Only the angels can do that, and the angels are wise and wistful.

Perhaps the angels are our better thought in space.

 

He is the true prince who finds his throne in the heart of the dervish.

 

Generosity is giving more than you can, and pride is taking less than you need.

 

In truth you owe naught to any man. You owe all to all men.

 

All those who have lived in the past live with us now. Surely none of us would be an ungracious host.

 

He who longs the most lives the longest.

 

They say to me, “A bird in the hand is worth ten in the bush.”But I say, “A bird and a feather in the bush is worth more than ten birds in the hand.”Your seeking after that feather is life with winged feet; nay, it is life itself.

 

There are only two elements here, beauty and truth; beauty in the hearts of lovers, and truth in the arms of the tillers of the soil.

 

Great beauty captures me, but a beauty still greater frees me even from itself.

 

Beauty shines brighter in the heart of him who longs for it than in the eyes of him who sees it.

 

I admire him who reveals his mind to me; I honor him who unveils his dreams. But why am I shy, and even a little ashamed before him who serves me?

 

The gifted were once proud in serving princes.Now they claim honor in serving paupers.

 

The angels know that too many practical men eat their bread with the sweat of the dreamer’s brow.

 

Wit is often a mask. If you could tear it you would find either a genius irritated or cleverness juggling.

 

The understanding attributes to me understanding and the dull, dullness. I think they are both right.

 

To Be Contd………

Series Navigation‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடுதமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *