நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்

நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்
This entry is part 26 of 26 in the series 24 பிப்ரவரி 2013


தஸ்லிமா நஸ்ரின்

பங்களாதேஷில், டாக்காவில் நாத்திக வலைப்பதிவர்களுக்கு மரண தண்டனை கோரி போலீஸுடன் இஸ்லாமிஸ்டுகள் மோதியதில் நான்கு பேர்கள் இறந்திருக்கிறார்கள். இருநூறு பேர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
bangladesh1
இஸ்லாமிஸ்டுகள் நாத்திகர்களை வெறுக்கிறார்கள். இவர்களது பதாகை, “அல்லா முகம்மது குரானை விமர்சனம் செய்யும் நாத்திக பதிவர்களுக்கு மரண தண்டனை கொடு என்று கோருகிறோம்” என்று கூறுகிறது. இந்த பதாகையில் நாத்திக பதிவர்களின் முகங்கள் இருக்கின்றன. ஆஸிப் முஹதீன் இதில் ஒருவர். ஆஸிப் முகதீன் ஒரு மாதத்துக்கு முன்னால் இஸ்லாமிஸ்டுகளால் கத்தியால் குத்தப்பட்டார்.

அவரது வலைப்பதிவு மதங்களை விமர்சனம் செய்யும் பதிவு. ஆஸிப் ஒரு புகழ்பெற்ற வலைப்பதிவராக இருந்தாலும், அவரது வலைப்பதிவை தொடர்ந்து பதிய முடியவில்லை. இஸ்லாமிஸ்டுகளின் பத்திரிக்கைகள் ஆஸிப் முகதீனுக்கு எதிராகவும், அவரது வலைப்பதிவுக்கு எதிராகவும் எழுதின. போலீஸார் ஆஸிபை எழுதுவதை நிறுத்தும்படி கோரினார்கள்

இண்டெகஸ் ஆஃப் சென்ஸார்ஷிப் அமைப்பு ஆஸிப்பின் கருத்துரிமைக்காக அக்கறைப்பட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

bangladesh3

 

bangladesh4

ரஜிப் ஹைதர் என்னும் இன்னொரு நாத்திக வலைப்பதிவர் சில நாட்களுக்கு முன்னால் கொல்லப்பட்டார். இதன் காரணம் அவர் அரசாங்கமும், மதமும் பிரிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி முறை முழுக்க முழுக்க மதம் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்றும் கோரியிருந்ததுதான்.

bangladesh2

rajib

சில வருடங்களுக்கு முன்னால் ஹுமாயுன் ஆஸாத் என்னும் நாத்திக எழுத்தாளர் இஸ்லாமிஸ்டுகளால் கொல்லப்பட இருந்தார்.

attacked_Humayun_azad

இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான முறையில் நாத்திகர்களை பங்களாதேஷில் கொல்வதால், அவர்கள் உருவாக்கிய தர்மோக்கரி Dhormockery என்னும் சிறப்பான வலைப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

நாத்திகர்களுக்கு மதங்களை பற்றிய கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது, அதற்காக அவர்களை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஏனெனில், மதத்தை சார்ந்தவர்கள் என்பதற்காக மதத்தினரை கொல்வது எவ்வளவு தவறோ அதே போல மதமற்றவர்களையும் மதமற்றவர்கள் என்பதற்காக கொல்வது தவறு” என்று சொல்வதற்கு பதிலாக, தாராளவாதிகளும், மதசார்பற்றவர்களாக சொல்லிகொள்ளும் பங்களாதேஷிகள் “ஜமாத்தே இஸ்லாமி குண்டர்கள் இந்த பதிவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். இவர்கள் நாத்திகர்கள் அல்லர். இவர்கள் நல்ல மனிதர்கள்” (அதாவது நாத்திகர்கள் நல்ல மனிதர்களாக இருக்கமுடியாது என்பது போல) கூறுகிறார்கள். பங்களாதேஷில், தாராளவாத சிந்தனையாளர்கள் கூட நாத்திகத்தை கெட்டவார்த்தையாக பார்ப்பது அதிர்ச்சிதரக்கூடியது. இது நாத்திகர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எந்த வகையிலும் உதவாது. இப்போது இல்லையென்றால், எப்போது?

தர்மோக்கரி மீண்டும் வேலை செய்ய ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன். ஆஸிப் மற்றும் இதர நாத்திக பதிவர்கள் அச்சுருத்தப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஜமாத்தே இஸ்லாமி என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை தடை செய்ததும், இஸ்லாமிய கொலைக்காரர்கள் தங்களது வாழ்விடங்களான குகைகளுக்கு செல்வார்கள் என்று நம்புகிறேன்.
புராதன காலத்தில் வாழ்ந்த குகை மனிதர்களை ஒருவேளை அவமரியாதை செய்திருக்கலாம். அவர்கள் நிச்சயமாக இன்றைய இஸ்லாமிஸ்டுகளை விட மேன்மையானவர்கள்.

மூலம்

Series Navigationமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

6 Comments

  1. Avatar Mohamed

    yaar thavaru seythalum tavaruthan, gujarathil muslim pengalin karuvil ulla kulanthaigalai, vayirai kilithu eduthu neruppil pootargale, athai pattri eludha ungalukku manam varavillai, ungaludaiya kuttu valipattu vittadhu?

    • Avatar ரவீந்திரன்

      குஜராத்தில் கர்ப்பிணி வயிற்றைகிழித்தது என்று இன்னும் எவ்வளவு நாளைக்கு பொய் சொல்லுவீர்கள்.
      இது பொய் என்று சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்துவிட்டது. இதனை கூறிய மாலிக் என்பவர் தான் பொய் சொன்னதையும், இவ்வாறு பொய் சொல்லச்சொல்லி தீஸ்தா செதல்வாத் தன்னை வற்புறுத்தியதாகவும் கோர்ட்டி சொல்லிவிட்டார்.

      http://www.gujaratriots.com/index.php/2010/05/myth-16-a-pregnant-womans-womb-was-ripped-open/

      இன்று நடக்கும் படுகொலைகளை பாருங்கள். அதனை நடக்காத விஷயங்களை வைத்து நியாயப்படுத்தாதீர்கள்.

  2. Avatar paandiyan

    மிக சிறந்த கட்டுரை , ஒட்டு விற்பனை மதம் , தஸ்லிமா நஸ்ரின் அவர்களை இங்கு வெருபேற்றிவிட்டது இல்லை என்றால் அவர்களின் அசிங்க முகத்தை இவர் நன்ராக எடுத்து காண்பித்து இருப்பர் இந்த உலகத்துக்கு

  3. Avatar latha

    Is there not even a single good leader in Islam now?

    • Avatar paandiyan

      Islam – good leader – both are contradictory words!!

  4. Avatar latha

    ha ha .. that’s a good one. well said.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *